Category: (Changed from Books to Bayans) யாஸீன் விளக்கவுரை

z103

67) 83 வது வசனம்

v483 வது வசனம் 83. எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன்:) ➚ இறுதியாக மறுமையை பற்றிய சிந்தனை இவ்வசனத்தின் துவக்கத்தில் தன்னை தூயவன் என்று அல்லாஹ் புகழுகிறான். பிறகு “ அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!” என்று கூறி மறுமையை நினைவூட்டுகிறான். உலகில் எத்தகைய சுக போகத்தோடு வாழ்ந்தாலும் இறுதியில் அல்லாஹ்விடம் திரும்பி விடுவோம் என்பதை நாம் நினைவு கூறவேண்டும். மறுமை வாழ்வுக்காக நாம் […]

66) 82 வது வசனம்

v482 வது வசனம் 82. ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது “ஆகு’ என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும். (அல்குர்ஆன்:) ➚ எந்த மூலக்கூறுமின்றி “ஆகு” என்ற வார்த்தையை மட்டும் கொண்டு பொருளை படைப்பது அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் சாத்தியமானதல்ல. மனிதன் எத்தகைய அறிவியல் வளர்ச்சியடைந்திருந்தாலும் மூலக்கூறின்றி ஒரு பொருளை உருவாக்க இயலாது. இதையே இவ்வசனம் குறிக்கிறது. இவ்வாறு எந்த மூலக்கூறுமின்றி பொருளை படைப்பதும் அல்லாஹ்வின் வல்லமையாகும். மேலும் “ஆகு” […]

65) 78, 79, 80, 81 வது வசனங்கள்

v478, 79, 80, 81 வது வசனங்கள் 78. அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான். 79. “முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று கூறுவீராக! 80. அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள். 81. வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் […]

64) 77வது வசனம்

v477வது வசனம் 77. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான். (அல்குர்ஆன்:) ➚ மனிதன் குரங்கிலிருந்து படைக்கப்பட்டானா? மனித படைப்பை பற்றி இவ்வசனம் பேசுகிறது. விந்து துளியிலிருந்து மனிதனை படைத்ததாக கூறுகிறான். மற்ற சில வசனங்கள் இதை விளக்குகிறது. மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத்துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன்:) ➚ யாசீன் அத்தியாயத்தில் விந்துத் துளி என்று மட்டும் உள்ளது. 76 வது […]

63) 76வது வசனம்

v476வது வசனம் 76. (முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம். (அல்குர்ஆன்:) ➚.)  நபியவர்கள் இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்து கூறிய போது அவர்கள் அதை நம்ப மறுத்தது நபியவர்களுக்கு கவலையளித்தது. மேலும் நபியவர்களையும் விமர்சனம் செய்ததும் கவலையளித்தது. இதிலிருந்து அவர்களை ஆறுதல் படுத்துவதற்காகதான் “(முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம்.” என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற சில வசனங்களிலும் இவ்வாறு ஆறுதல் கூறுகிறான். (முஹம்மதே!) […]

62) 74, 75 வது வசனங்கள்

v474, 75 வது வசனங்கள் 74. தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். 75.அக்கடவுள்களுக்கு இவர்களே (இவ்வுலகில்) முதன்மைக் காவலர்களாக இருக்க அக் கடவுள்களோ இவர்களுக்கு உதவ இயலாது. (அல்குர்ஆன்:) ➚,75.) இணைவைப்பவர்களின் அறியாமை இவ்வசனங்கள் இணைவைப்பை பற்றியும் இணைக்கடவுளர்களை பற்றியும் பேசுகின்றது. அல்லாஹ்வையன்றி நல்லடியார்கள் என்று கூறப்படுபவர்களிடத்திலோ அல்லது மண்ணறைகளுக்கு சென்றோ சிலர் உதவி தேடுகின்றனர். இறுதியில் அவற்றுக்கு ஏதேனும் ஒரு தீங்கு என்றால் அவர்கள்தான் முதலில் அதை சீர்செய்கிறார்கள். […]

61) 73 வது வசனம்

v473 வது வசனம் 73. அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் அவற்றில் உள்ளன. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா? (அல்குர் ஆன் : 36 : 74.)  கால்நடைகள் போன்ற பல அருட்கொடைகளை பெற்றுக்கொண்டு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தாமல் இருப்பதை பற்றி அல்லாஹ் கேட்கிறான். மேலும் இவ்வசனத்தில் பொதுவாக பயன்கள் உள்ளன என்றுதான் வந்துள்ளது. மற்ற சில வசனங்கள் அதை விளக்குகிறது. உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் […]

60) 72 வது வசனம்.

v472 வது வசனம் 72. அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உள்ளன. அவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர். (அல்குர்ஆன்:) ➚ இவ்வசனத்தின் துவக்கத்தில் “அவற்றை (கால்நடைகளை) அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம்.” என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மனிதர்களுக்கு கால்நடைகள் வசப்படுத்துவது மிகப்பெரும் பாக்கியமாகும். இது போன்று மனிதர்களை வசப்படுத்து முடியாது. மனிதனை விட ஆற்றல் அதிகமாக உள்ள மாடு, யானை போன்ற பல்வேறு உயிரினங்கள் மனிதர்களுக்கு கட்டுப்படுகிறது. இல்லாவிட்டால் மிகப்பெரும் சிரமத்திற்கு மனிதர்கள் ஆளாகிவிடுவார்கள். சுமை […]

59) 71 வது வசனம்

v471 வது வசனம் 71. நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம் என்பதையும், அவர்கள் அதற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதையும் அவர்கள் காணவில்லையா? (அல்குர்ஆன்:) ➚.) அல்லாஹ்வின் கரத்தால் படைக்கப்பட்ட ஆதம் நபி இவ்வசனத்தின் துவக்கத்தில் “நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது. இதை படிக்கும் போது பின்வரும் சந்தேகம் நமக்கு ஏற்படலாம். ஆதம் நபியவர்களைதான் அல்லாஹ் தன் கைகளால் படைத்துள்ளான். ஆனால் இவ்வசனத்தில் கைகளால் உருவாக்கிய கால்நடைகள் என்று கூறப்படுகிறதே […]

58) 70 வது வசனம்

v470 வது வசனம் 70. உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும், (நம்மை) மறுப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்). (அல்குர்ஆன்:) ➚ படிப்பினை பெறுபவர்கள்தான் உயிருடன் உள்ளவர்கள் உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காக குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்று இவ்வசனம் கூறுகிறது. உயிருடன் உள்ளோரை தானே எச்சரிக்கை செய்யமுடியும்? என்று கருதலாம். இந்த குர்ஆனின் எச்சரிக்கை மூலம் யார் பயன்பெறுகிறார்களோ அவர்களே உயிருடன் உள்ளோர்க்கு சமம். மற்றோர் இறந்தவர்களுக்கு சமம் என்ற கருத்தை மறைமுகமாக உணர்த்தும் விதமாகவே இவ்வசனம் அமைந்துள்ளது. […]

57) 69 வது வசனம்

v469 வது வசனம் 69. இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை. இது அறிவுரையும், தெளிவான குர்ஆனும் தவிர வேறில்லை. (அல்குர்ஆன்:) ➚.) நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மக்களுக்கு கூறும்போது சிலர் இது கவிதை என்று விமர்சித்தனர். அதற்குரிய பதிலை இந்த வசனத்தில் காணலாம். நபி (ஸல்) அவர்கள் கூறுவது கவிதை அல்ல இது குர்ஆன்தான் என்று உறுதிப்படுத்தப்படுகின்றது. இஸ்லாத்தின் பார்வையில் கவிதை கவிதை எனும் பெயரில் வரம்பு மீறுவதை […]

56) 68 வது வசனம்

v468 வது வசனம் 68. நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா? (அல்குர்ஆன்:) ➚.) இறங்கு முகம் மனிதனுக்கு வாழ்நாள் அதிகமாக வழங்கப்படும் போது படைப்பில் இறங்குமுகத்தை நோக்கி செல்வான். குழந்தை பருவத்தில் நம்மை வேறொருவர் கை பிடித்து அழைத்து செல்லும் நிலையில் இருப்போம். பிறகு இளமை பருவத்தில் தானாக செயல்படுவோம். பின்பு முதுமை பருவத்தில் மீண்டும் சிறு குழந்தை போன்று நம்மை யாரேனும் அழைத்து செல்லும் நிலைக்கு […]

55) 67 வது வசனம்

v467 வது வசனம் 67. நாம் நாடியிருந்தால் இருந்த இடத்திலேயே அவர்களை உருமாற்றி இருப்போம். அதனால் அவர்கள் (முன்னே) செல்ல இயலாது. பின்னேயும் செல்ல மாட்டார்கள். (அல்குர்ஆன்:) ➚.) உருமாற்றம் குறித்த விளக்கம் பொதுவாக உருமாற்றம் என்பது ஓர் தண்டனையாகும். மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டது போன்று அல்லாஹ் சிலரை உருமாற்றிவிட்டால் அதன் பிறகு எதையும் அவர்களால் அறியமுடியாது. இறைக்கட்டளையை மீறிய ஒரு கூட்டத்திற்கு அல்லாஹ் இதை தண்டனையாக வழங்கியுள்ளான். கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் […]

54) 66 வது வசனம்

v466 வது வசனம் 66. நாம் நினைத்திருந்தால் அவர்களின் கண்களை எடுத்திருப்போம். அப்போது பாதையை நோக்கி விரைவார்கள். அப்போது எப்படி அவர்கள் பார்க்க முடியும்? (அல்குர்ஆன்:) ➚.) இவ்வசனத்தில் “நாம் நினைத்திருந்தால் அவர்களின் கண்களை எடுத்திருப்போம்.” என்று அல்லாஹ் கூறுவது நேரடியான பொருளில் அல்ல. மாறாக கருத்து ரீதியிலாகும். அவனுடைய அறிவு கண்ணை எடுத்துவிட்டால் நல்வழியை அறிந்து நேர்வழியில் அவனால் செல்ல முடியாது. இதைத்தான் இவ்வசனம் குறிக்கிறது.

53) 65 வது வசனம்

v465 வது வசனம் 65. இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும். (அல்குர்ஆன்:) ➚ மறுமையில் அல்லாஹ்வின் விசாரணை முறையை இவ்வசனம் விளக்குகிறது. யாரும் தங்கள் நாவால் பதிலளிக்க முடியாது. மாறாக செயலாற்றிய உறுப்புகளே பதிலளிக்கும். வாய்க்கு முத்திரை இடப்படும். இதனால் மனிதர்கள் தங்கள் உறுப்புகளிடம் கேள்வியெழுப்புவார்கள். “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். […]

52) 63, 64 வது வசனம்

v463, 64 வது வசனம் 63. இதுவே உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம். 64. “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் இன்று இதில் கருகுங்கள்!” என்று கூறப்படும். (அல்குர்ஆன்:) ➚,64 நரகத்தை பற்றிய எச்சரிக்கை 63 வது வசனத்தில் நரகத்தை பற்றி நினைவூட்டுகிறான். சொர்க்கத்தின் இன்பங்களை இதற்கு முந்தைய சில வசனங்களில் கூறிவிட்டு மக்களுக்கு அச்சம் ஏற்படும் வகையில் நரகத்தை பற்றியும் எச்சரிக்கை செய்கிறான். நரக நெருப்பு மிகவும் கடுமையானது. மறுமையில் இறைநிராகரிப்பாளர்களை அதில் வேதனை செய்வான். […]

51) 62 வது வசனம்

v462 வது வசனம் 62. உங்களில் பெரும் கூட்டத்தினரை அவன் வழி கெடுத்து விட்டான். நீங்கள் விளங்கியிருக்கக் கூடாதா? (அல்(குர்ஆன்:) ➚.) நிதர்சனமான உண்மையை இவ்வசனம் கூறுகிறது. நமக்கு முந்தைய சமுதாயத்தவர்களை பல வழிகளில் ஷைத்தான் வழிகெடுத்துள்ளான். அதனால் அவர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள். அதை நினைத்து நாம் நல்லுணர்வு பெறவேண்டும்.

50) 60, 61 வது வசனம்

v460, 61 வது வசனம் 60, 61. “ஆதமுடைய மக்களே! ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களின் பகிரங்க எதிரியாவான். என்னையே வணங்குங்கள்! அதுவே நேரான வழி என்று உங்களிடம் நான் உறுதிமொழி எடுக்கவில்லையா?” (அல்குர்ஆன்:) ➚,61 இவ்வசனத்தில் கூறப்படும் உறுதிமொழியை முந்தைய சில வசனங்களில் நாம் விளக்கியுள்ளோம். முதல் மனிதராகிய ஆதம் நபியின் முதுகு தண்டில் நாம் இருந்தபோதே நம்மிடம் இந்த உறுதிமொழியை அல்லாஹ் எடுத்துவிட்டான். மேலும் இவ்வசனத்தின் துவக்கத்தில் “ஆதமுடைய மக்களே!” என்றழைப்பதின் மூலம் இவ்வுலக […]

49) 59 வது வசனம்

v459 வது வசனம் 59. “குற்றவாளிகளே! இன்றைய தினம் பிரிந்து விடுங்கள்!” (என்று கூறப்படும்.) (அல்குர்ஆன்:) ➚.)  மறுமையில் நல்லோரிலிருந்து தனித்து தெரியும் வகையில் குற்றவாளிகள் பிரிந்து நிற்குமாறு அவர்களுக்கு கூறப்படும். மற்ற சில வசனங்களும் இக்கருத்தை விளக்குகிறது. அந்த நேரம் நிலை வரும் அந்நாளில் அவர்கள் பிரிந்து விடுவார்கள். (அல்குர்ஆன்:) ➚.)  அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தோரை நோக்கி “நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!” என்று கூறுவோம். […]

48) 58 வது வசனம்

v458 வது வசனம் 58. ஸலாம்! இது நிகரற்ற அன்புடைய இறைவனின் கூற்று!. (அல்குர் ஆன் : 36 : 58.) இவ்வசனத்தின் துவக்கத்தில் கூறப்படும் ஸலாம் என்பது சொர்க்கவாசிகளுக்கு கூறப்படும் வாழ்த்தாகும். இதை பல வசனங்கள் விளக்குகின்றது. அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும். அவர்களுக்காக மரியாதைக்குரிய கூலியையும் அவன் தயாரித்துள்ளான். (அல்குர் ஆன் : 33 : 44.) அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள். ஸலாம் ஸலாம் […]

47) 57 வது வசனம்

v457 வது வசனம் 57. அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும். (அல்குர்ஆன்:) ➚.) உலகில் நாம் பார்த்து ஆசைப்படும் அனைத்து பழங்களையும் அனைவராலும் வாங்க இயலாது. வாங்குவதற்கு பணம் இருந்தாலும் நாம் விரும்பிய பழங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. சொர்க்கத்தில் இந்நிலை இருக்காது. விரும்பிய பழங்கள் கிடைக்கும். பழங்கள் மட்டுமின்றி அவர் விரும்பியது எதுவாக இருந்தாலும் அனைத்தும் சொர்க்கத்தில் அவருக்கு கிடைக்கும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை நபி (ஸல்) […]

46) 56 வது வசனம்

v456 வது வசனம் 56. அவர்களும், அவர்களது துணைகளும் கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள். (அல்குர்ஆன்:) ➚.) சொர்க்கத்தில் துணைகளும் இருப்பார்கள். இவர்கள் “ஹூருல் ஈன்” என்றழைக்கப்படுவர். அவர்களுடைய அழகை பின்வரும் வசனம் விளக்குகிறது. ஹூருல் ஈன்களும் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். (அல்குர்ஆன்:) ➚,23.)  அவர்களுடைய அழகின் மகத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது […]

45) 55 வது வசனம்

v455 வது வசனம் 55. அந்நாளில் சொர்க்கவாசிகள் (தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள். (திருக்குர்ஆன்:) ➚.)  கற்பனைக்கு எட்டாத சொர்க்கத்து இன்பங்கள் இந்த வசனம் சொர்க்கவாசிகளுடைய இன்பத்தின் உச்சகட்டத்தை கூறுகிறது. இவ்வசனத்தில் “(தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள்” என்பதை குறிப்பதற்கு அரபியில் “ஃபீ ஷூகுலின் ஃபாகிஹூன்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஷூகுல் என்றால் வேறு எந்த வேலைகளிலும் கவனம் செலுத்தாமல் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவது என்பதாகும். இந்த அடிப்படையில் சொர்க்கவாசிகள் இன்பத்தில் மட்டுமே திழைத்து கொண்டிருப்பார்கள். […]

44) 53, 54 வது வசனம்

v453, 54 வது வசனம் 53. ஒரே ஒரு பெரும் சப்தம் தவிர வேறு எதுவும் இல்லை. உடனே அவர்கள் அனைவரும் நம்மிடம் ஒன்று திரட்டப்படுவார்கள். 54. இன்று எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள். (அல்குர் ஆன் : 36 : 53,54.)  இதில் 53 வது வசனத்தில் மறுமையில் ஒன்று திரட்டப்படுவது பற்றி கூறப்படுகிறது. இதை யாசீன் அத்தியாயத்தின் 32 வது வசனத்தின் விளக்கத்திலேயே நாம் […]

43) 51, 52 வது வசனம்

v451, 52 வது வசனம் 51. ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள். 52. எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?” என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.) (அல்குர்ஆன்:) ➚,52.)  ஸூர் ஊதப்படுவதும் மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவதும் 51 வது வசனத்தில் ஸூர் ஊதப்படும் போது மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவது பற்றி கூறப்படுகிறது. இது அல்லாத மற்ற சில வசனங்களிலும் மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவது பற்றி […]

42) 50 வது வசனம்

v450 வது வசனம் 50. அப்போது அவர்களுக்கு மரண சாசனம் கூற இயலாது. தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள். மறுமை நாள் எப்போது நிகழும் என கேலியாக கேட்ட இறைமறுப்பாளர்களுக்கு மரண சாசனம் கூட செய்ய இயலாதளவிற்கு மறுமைநாள் விரைவாக நிகழ்ந்துவிடும் என்று இவ்வசனம் பதிலளிக்கின்றது. மரண சாசனம் என்பது ஒருவர் தன் மரணத்தருவாயில் கூறும் விஷயங்களாகும். ஒருவர் தன் மரண வேளையில் தனது சொத்துக்கள் மற்றும் இதர விஷயங்கள் தொடர்பாக கூறுவதை மரண சாசனம் […]

41) 48, 49 வது வசனம்

v448, 49 வது வசனம் 48. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்?)” என்று அவர்கள் கேட்கின்றனர். 49. ஒரே ஒரு பெரும் சப்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை அது பிடித்துக் கொள்ளும். (அல்குர்ஆன்:) ➚,49.) இறைத்தூதர்கள் மறுமைநாளை பற்றி மக்களிடம் எச்சரித்த போது இறைமறுப்பாளர்கள் அதை பரிகாசம் செய்யும் விதமாக “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்?)” என்று கேட்டனர். இதற்கு 49 […]

40) 47 வது வசனம்

v447 வது வசனம் 47. அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! என்று அவர்களிடம் கூறப்படும் போது “(இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழிகேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (ஏகஇறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர். (அல்குர்ஆன்:) ➚.)  அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்! மேற்கண்ட வசனத்தில் பல கருத்துகள் உள்ளன. நம்மிடம் உள்ள பொருளாதாரம் அனைத்தும் அல்லாஹ் வழங்கியதுதான் என்பதை உணரவேண்டும். எனவேதான் உங்கள் செல்வத்திலிருந்து செலவழியுங்கள் என்று கூறாமல் […]

39) 46 வது வசனம்

v446 வது வசனம் 46. அவர்களின் இறைவனது சான்றுகளில் எந்தச் சான்று அவர்களிடம் வந்த போதும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருந்ததில்லை. (அல்(குர்ஆன்:) ➚.) சான்றுகளை நம்ப மறுத்தல் கூடாது எந்த சான்றுகளுமின்றி இறைவனை நம்புவது சிலருக்கு சிரமமாக இருப்பதால் நம்பத்தகுந்த சில சான்றுகளை மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்குகிறான். எனினும் சிலர் அதையும் நம்ப மறுக்கின்றனர். இதை மேற்கண்ட வசனம் குறிப்பிடுகிறது. உங்களை நம்புவதற்கு சான்றுகள் வேண்டுமென்று மக்கள் இறைத்தூதர்களிடம் கேட்கும் போது அவர்கள் அல்லாஹ்விடமிருந்து அதை […]

38) 45 வது வசனம்

v445 வது வசனம் 45. உங்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அஞ்சுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது (புறக்கணிக்கின்றனர்). (அல்குர் ஆன் : 36:45.) அனைத்து செயல்களையும் அல்லாஹ் அறிகிறான் “முன்னும், பின்னும் உள்ளதை அஞ்சுங்கள்” என இவ்வசனத்தில் கூறப்படுவது அல்லாஹ்வின் கண்காணிப்பாகும். இதை பின்வரும் வசனங்கள் உறுதிப்படுத்துகிறது. அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். (அல்குர்ஆன்:) ➚.)  அவர்களுக்கு முன்னும் பின்னும் உள்ளதை அவன் அறிகிறான். காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு […]

37) 44 வது வசனம்

v444 வது வசனம் 44. நமது அருளின் காரணமாகவும், குறிப்பிட்ட நேரம் வரை அனுபவிப்பதற்காகவும் தவிர (மூழ்கடிக்கவில்லை). (அல்(குர்ஆன்:) ➚.) அல்லாஹ்வின் அருளிருந்தால் அழிவில்லை முந்தைய வசனத்தில் அல்லாஹ் ஒரு கூட்டத்தை அழிக்க நாடிவிட்டால் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கூறப்பட்டிருந்தது. எனினும் இரண்டு காரணங்களுக்காக மட்டும் அழிவிலிருந்து தப்பிக்க இயலும். ஒன்று அல்லாஹ் அருள் புரிந்து விட்டால் தப்பிக்க இயலும். மற்றொன்று குறிப்பிட்ட தவணை வரை தப்பிக்க இயலும் என 44 வது வசனத்தில் […]

36) 43 வது வசனம்

v443 வது வசனம் 43. நாம் நாடினால் அவர்களை மூழ்கடிப்போம். அவர்களுக்காக குரல் எழுப்புவோர் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள். (அல்(குர்ஆன்:) ➚.) இது அல்லாஹ்வின் தண்டனை பற்றி கூறும் வசனமாகும். இறைவனின் தண்டனை குறித்து முன்னரே விளக்கப்பட்டுள்ளது.

35) 42 வது வசனம்

v442 வது வசனம் 41, 42. நிரப்பப்பட்ட கப்பலில் அவர்களின் சந்ததிகளை நாம் ஏற்றியதும் அவர்கள் ஏறிச் செல்லும் அது போன்றதை அவர்களுக்காக படைத்ததும் அவர்களுக்குரிய சான்று. (அல்குர்ஆன்:) ➚, 42.)  ஓட்டகமும் ஓர் அத்தாட்சி 42 வது வசனத்தில் அவர்கள் ஏறிச்செல்லும் அது போன்றதை அவர்களுக்காக படைத்ததும் அவர்களுக்குரிய சான்று.” என்று உள்ளது. இவ்வசனம் ஒட்டகம் பற்றி குறிப்பிடுகிறது. ஏனெனில் அது கப்பல் போன்றதாகும். ஒட்டகத்தை ஆய்வு செய்யும் போது இதை அறிய முடிகிறது. கடல் […]

34) 41 வது வசனம்

v441 வது வசனம் 41, 42. நிரப்பப்பட்ட கப்பலில் அவர்களின் சந்ததிகளை நாம் ஏற்றியதும் அவர்கள் ஏறிச் செல்லும் அது போன்றதை அவர்களுக்காக படைத்ததும் அவர்களுக்குரிய சான்று. (அல்குர்ஆன்:) ➚,42.)  நூஹ் நபியின் கப்பல் 41 வது வசனத்தில் நிரப்பபட்ட கப்பல் என்று கூறப்படுவது நூஹ் நபியின் கப்பல்தான். இதை பின்வரும் வசனங்களிலிருந்து அறியலாம். எனவே அவரையும், அவருடன் இருந்தோரையும் நிரப்பப்பட்ட கப்பலில் காப்பாற்றினோம். பின்னர் எஞ்சியோரை மூழ்கடித்தோம். (அல்குர்ஆன்:) ➚, 120.) நூஹ் நபியோடு அல்லாஹ்வை […]

33) 40வது வசனம்

v440வது வசனம் 40. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன. (அல்குர்ஆன்:) ➚.) காலம் கடந்து நிற்கும் வேதம் இவ்வசனத்தில் மிகப் பெரும் பேருண்மை உள்ளது. சூரியன் சந்திரனை அடைய முடியாது என்பதை அதன் ஓட்டத்தை அறிந்த விஞ்ஞானியால் மட்டும்தான் சொல்ல சொல்ல முடியும். இதை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது. இதன் மூலம் காலம் கடந்து பேசும் திறனை குர்ஆன் பெற்றுள்ளது என்பதை அறியலாம். சாதாரண மனிதனின் […]

32) 39வது வசனம்

v439வது வசனம் 39. சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது. சந்திரனுக்குப் பல நிலைகள் உண்டு சந்திரனை கண்ணால் பார்க்கும்போது பல நிலைகளில் அது உள்ளது. முதல் நாளில் முதல் பிறை ஒரு நிலையாகவும் இரண்டாம் நாளில் மற்றொரு நிலையாகவும் இது போன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையாக உள்ளது. இதைத்தான் பல நிலைகள் என அல்லாஹ் கூறுகிறான். இதை மேலும் சில வசனங்களில் விளக்குகிறான். பிறைகளைப் பற்றி […]

31) 38வது வசனம்

v438வது வசனம் 38. சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். சூரியனின் ஓட்டங்கள் இவ்வசனத்தில் சூரியனின் ஓட்டத்தை பற்றி அல்லாஹ் கூறுகிறான். பொதுவாக முந்தைய கால மக்களிடம் இது பற்றி பல கருத்துக்கள் இருந்துள்ளது. முதலில் பூமி தட்டை என்றார்கள். பிறகு உருண்டையானது என்றார்கள். எனினும் இன்றைய நவீன ஆராய்ச்சிக்கு பிறகு பல விஷயங்களை கண்டுபிடித்துள்ளார்கள். அதில் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுவதாகவும் கூறுகின்றனர். மேலும் பூமி […]

30) 37 வது வசனம்

v437 வது வசனம் 37. இரவும் அவர்களுக்கு ஓர் சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள். நாளின் ஆரம்பம் இரவா? பகலா? நாளின் ஆரம்பம் இரவுதான் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால் பிறையை கண்ணால் பார்க்காமல் வானியல் ரீதியாக கணித்து நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்கின்ற சிலர் நாளின் ஆரம்பம் பகல் என்று நம்புகின்றனர். இது தவறாகும். நாளின் ஆரம்பம் இரவு என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இதை மறைமுகமாக இவ்வசனம் கூறுகிறது. […]

29) 36 வது வசனம்

v436 வது வசனம் 36. பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும் அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன். மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்களிலும் மனிதர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகளை படைத்திருப்பதாக மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் அறியமுடியாததாக இருந்தாலும் இன்றைய காலத்தில் ஆராய்ச்சி செய்து அறியமுடியும். இன்றைய அறிவியல் தாவரங்களிலும் ஜோடி உண்டு என்றும் மின்சாரத்திலும் பாசிடிவ், நெகடிவ். மேலும் அணுக்களில் புரோட்டான், எலக்ட்ரான் ஆகிய ஜோடிகள் உண்டு என்றும் கண்டுபிடித்துள்ளனர். […]

28) 33, 34, 35 வது வசனங்கள்

v433, 34, 35 வது வசனங்கள் 33. இறந்த பூமி அவர்களுக்கு ஓர் சான்று. அதை நாம் உயிர்ப்பிக்கிறோம். அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர். 34, 35. அதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை அதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக ஏற்படுத்தினோம். அதில் ஊற்றுகளையும் பீறிட்டு ஓடச் செய்தோம். அதை அவர்களின் கைகள் தயாரிக்கவில்லை. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா? இதில் 33 வது வசனத்தில் உள்ள இறந்த பூமியை உயிர்ப்பித்தல் என்பது பற்றி […]

27) 32வது வசனம்

v432வது வசனம் 32. அனைவரும் ஒட்டுமொத்தமாக நம்மிடம் ஒன்று திரட்டப்படுவார்கள். உலகில் வாழும்போது மனிதர்கள் இறைவனை மறந்து வாழக் கூடாது என்பதற்காக மறுமையில் தன்னிடம் ஒன்று திரட்டப்படுவதை அல்லாஹ் நினைவூட்டுகிறான். இதை பல வசனங்களில் குறிப்பிடுகிறான். மறுமையில் ஸூர் ஊதப்படுதல் ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள். (அல்குர்ஆன்:) ➚.)  அது ஒரே ஒரு சப்தம் தான்! உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள். (அல்குர்ஆன்:) ➚,14 உறவுகள் முறிந்து விடும் உலகில் இருந்த எந்த […]

26) 31 வது வசனம்

v431 வது வசனம் அவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம். அவர்கள் இவர்களிடம் திரும்பி வர மாட்டார்கள் என்பதை இவர்கள் அறியவில்லையா? அழிக்கப்பட்டவர்கள் மீண்டும் வருவதில்லை ஏதேனும் ஒரு சமுதாயத்தை அல்லாஹ் அழிக்க நாடினால் தடம் தெரியாத அளவிற்கு அழித்து விடுவான். இதனால் மீண்டும் அவர்கள் வரமுடியாது. லூத் நபியின் சமுதாயத்தை அழித்தல் லூத் நபியின் சமுதாயத்தவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டனர். இதை லூத் நபி கண்டித்து பிரச்சாரம் செய்தும் அம்மக்கள் கேட்கவில்லை. ஒரு முறை வானவர்கள் […]

25) 30 வது வசனம்

v430 வது வசனம் 30. அடியார்களுக்கு இது நஷ்டமே! அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அவர்கள் கேலி செய்யாமல் இருந்ததில்லை. மக்களிடம் பிரச்சாரம் செய்த இறைத்தூதர்களை அம்மக்கள் ஏற்றுக் கொள்ளாது கேலி செய்தனர் எனும் கருத்தை இவ்வசனம் எடுத்துக் கூறுகிறது. தூதர்களை கேலி செய்தல் இவ்வாறே நூஹ் நபியையும் அவரது சமுதாய மக்கள் கேலி செய்தனர். அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் […]

24) 28, 29வது வசனங்கள்

v428, 29வது வசனங்கள் அவருக்குப் பின் அவரது சமுதாயத்திற்கு எதிராக ஒரு படையை வானத்திலிருந்து நாம் இறக்கவில்லை. (அவ்வாறு) இறக்குவோராகவும் நாம் இருந்ததில்லை. 29. அது ஒரே ஒரு பெரும் சப்தமாகவே இருந்தது. உடனே அவர்கள் சாம்பலானார்கள். அந்த நல்லடியாருடைய மரணத்திற்கு பிறகு அல்லாஹ்வின் படையினர்களாகிய வானவர்களை இறக்கி அல்லாஹ் அவர்களை தண்டிக்கவில்லை. மாறாக பெரும் சப்தத்தை அனுப்பி தண்டிக்கிறான். ஏனெனில் வானவர்கள் அல்லாத வேறு வழியிலும் அல்லாஹ் தண்டிக்க வல்லவன். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த […]

23) 25, 26, 27 வது வசனங்கள்

v425, 26, 27 வது வசனங்கள் 25. நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்குச் செவி சாயுங்கள்! (என்றும் கூறினார்). 26, 27. சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது. அதற்கவர் “என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமுதாயத்தினர் அறிந்து கொள்ளக் கூடாதா?” என்றார். இதில் 25 வது வசனம் வரை நல்லடியார் சொன்ன அறிவுரைகளை அல்லாஹ் கூறிவிட்டு 26 வது வசனத்தில் “சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது. […]

22) 24 வது வசனம்

v424 வது வசனம் 24. அப்போது நான் பகிரங்கமான வழி கேட்டில் ஆவேன், அல்(குர்ஆன்:) ➚ 22, 23 ஆகிய வசனங்களில் அல்லாஹ்வை மட்டும்தான் வணங்க வேண்டும் என்பதை கூறிய நல்லடியார் 24 வது வசனத்தில் மற்றவர்களை வணங்கினால் அது வழிகேடு என்பதை விவரிக்கிறார். எனவே அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் வகையில் மற்றவர்களை நாம் வணங்கினால் வழிகேட்டில் சென்றுவிடுவோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

21) 23 வது வசனம்

v423 வது வசனம் 23. அவனையன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்வேனா? அளவற்ற அருளாளன் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் என்னைக் காப்பாற்றவும் மாட்டார்கள். இஸ்லாத்தின் பார்வையில் மறுமைநாளின் பரிந்துரை அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுளை ஏற்படுத்தமாட்டேன் என்றும் அல்லாஹ் ஒரு தீங்கை நாடிவிட்டால் வேறு யாரும் பரிந்துரை செய்து தன்னை காப்பாற்ற முடியாது என்பதையும் நல்லடியார் நன்றாக உணர்த்துகிறார். சிலர் அல்லாஹ்வைத் தவிர மற்ற […]

20) 22 வது வசனம்

v422 வது வசனம் 22. என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்? அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்?” என்று அந்த நல்லடியார் கேட்கிறார். இவரது கேள்வியில் இரண்டு கருத்துக்கள் அடங்கியுள்ளது. அல்லாஹ்வையே நம்மை படைத்துள்ளான். ஆகவே அவனையே நாம் வணங்க வேண்டும். அவனையல்லாத வேறு எதையும் யாரையும் வணங்குதல் கூடாது என்பது ஒன்று. இன்னொன்று அல்லாஹ்வை நம்பிக்கை கொள்தல் மாத்திரம் போதாது. அவனை வணங்குதலும் அவசியமாகும் […]

19) 20,21வது வசனங்கள்

v420,21வது வசனங்கள் 20. அந்நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து, “என் சமுதாயமே! தூதர்களைப் பின்பற்றுங்கள்!” என்றார். 21. உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள். சிரமத்தை தாங்கிக்கொண்டு பிரச்சாரம் செய்தல் இவ்வசனங்களிலும் முஸ்லிம்களுக்கு பல அறிவுரைகள் அடங்கியுள்ளது. அம்மனிதர் ஊரின் கடைசி பகுதியில் இருந்தாலும் சிரமத்தை பொருட்படுத்தாமல் மக்களிடம் வந்து தூதர்களுக்கு பக்க பலமாக நிற்கிறார். நல்ல விஷயங்களை மக்களுக்கு கூறுகிறார். நாமும் இது போன்று மார்க்கத்திற்காக வெகுதூரம் செல்வதை சிரமமாக கருதாமல் மார்க்கத்தை […]

18) 18,19வது வசனம்.

v418,19வது வசனம் 18. “நாங்கள் உங்களைக் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையானால் உங்களைக் கல்லால் எறிந்து கொலை செய்வோம். எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனை உங்களுக்கு ஏற்படும்” என்று (அவ்வூரார்) கூறினர். 19. “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடமே உள்ளது. நீங்கள் அறிவுரை கூறப்பட்டாலுமா (எங்களை மிரட்டுவீர்கள்)? இல்லை! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாக இருக்கிறீர்கள்” என்று (தூதர்கள்) கூறினர். சகுனம் பார்த்தல் இஸ்லாத்தில் இல்லை இவ்வசனங்களில் அத்தூதர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நடந்த உரையாடல் இடம் […]

Next Page »