உடலாலும் பொருளாலும் இஸ்லாமிய மார்க்கத்தில் தியாகம் செய்த காலம் போய் உடலையும் உடமையையும் இணையதளத்திற்கு விற்று விட்ட காலம் வந்து விட்டது. இறைவனை நித்தம் நித்தமாக நின்று வணங்கிய காலம் போய் நரசத்திற்கு அழைத்துச் செல்லும் திரைக்கு முன்னால் குவியல் குவியலாக நிற்கும் இஸ்லாமியக் கூட்டம். பெருகி விட்டது. மார்க்கத்தை மறவாமல் சொல்லும் இஸ்லாமியர்கள் எங்கே…? கேவலம்! சினிமா பாடலைத் திணறாமல் பாடும் இஸ்லாமியர்கள் இங்கே! அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன மார்க்கத்தைப் பின்பற்றும் இஸ்லாமியர்களைக் காணவில்லை. […]