அடுத்ததாக, குழந்தைகள் குறித்த நமது அணுகுமுறையிலும் சில பார்வைகளை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். பொதுவாக சிறுவர்களை நாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை; அவர்களோடு அமர்ந்து பேசுவதும் இல்லை. சொந்தக் குழந்தைகளாக இருந்தால் கொஞ்சுவதோடு சரிசெய்து விடுகிறோம். வழக்கமாக நாம் கைக்குழந்தையாக இருக்கும் வரை மட்டுமே குழந்தைகளைக் கொஞ்சுகிறோம். அவர்கள் சற்று வளர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டாலோ எட்ட நின்று விடுகிறோம்; அவர்களிடம் மெய்யான அன்பைக் காட்டுவதோ, அவர்களை ஒரு தனி மனிதராக மதிப்பதோ இல்லை. ஆனால் நபி (ஸல்) […]