நபி (ஸல்) அவர்கள் ஒரு பெரும் தலைவராக இருந்தபோதிலும், பிற தலைவர்களைப் போன்று மக்களிடம் எவ்வித ஆதிக்கத்தையோ, அடிமைத்தனத்தையோ விரும்பவில்லை. மாறாக, மக்களுக்கு ஓர் எளிய வாழ்க்கையை வழங்க வேண்டும் என்பதிலேயே அவர்கள் எப்போதும் அதிகக் கவனம் செலுத்தினார்கள். இன்றைய அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் பலர் மக்கள் தங்களுக்காகச் சிரமப்படுவதைக் கண்டு பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். வெயிலில் மக்கள் மணிக்கணக்காகக் காத்துக்கிடப்பதையோ, வரிசையில் நின்றுகொண்டே இருப்பதையோ அவர்கள் விரும்புகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தமக்காகவோ ஏதேனும் பிரச்சனைக்காகவோ […]