Category: இஸ்லாத்தின் பார்வையில் ஜீவராசிகள்

u702

13) உண்பதற்க்கு தடை செய்யப்பட்டவை விற்பதற்கும் தடை

கால்நடைகளைப் பொறுத்தவரை, உண்பதற்கோ அல்லது வேறு வகையிலோ எவற்றைப் பயன்படுத்த மார்க்கத்தில் அனுமதி இல்லையோ, அவற்றை விற்கவே கூடாது. ஆட்டை உண்பதற்கு அனுமதி இருப்பதால் அதை விற்கலாம். வேட்டை நாய் அல்லது காவல் நாயை உண்பதற்கு அனுமதியில்லை என்றாலும், அந்தப் பணிகளுக்காக வைத்திருக்க அனுமதி உண்டு என்பதால் அவற்றை விற்கலாம். ஆனால், அழகுக்காக வீட்டுக்குள் வளர்க்கப்படும் நாய்களை வைத்திருக்க அனுமதி இல்லாததால், அவற்றை வாங்கி விற்பதை ஒரு தொழிலாகச் செய்ய அனுமதி இல்லை. பறவைகளில் வேட்டைக்குப் பயிற்றுவிக்கப்பட்ட […]

12) தாமாகச் செத்தவை ஹராம்

அடுத்ததாக, உண்ண அனுமதிக்கப்பட்ட ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தாமாகச் செத்துவிட்டால் அவற்றின் இறைச்சி நமக்கு ஹராமாகி விடுகிறது. அதேபோல் நாய், பன்றி, கழுதை போன்ற பிராணிகளும் உண்பதற்கு ஹராமானவை. ஆயினும், செத்துப்போன ஒரு பிராணியின் தோலைப் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுகிறது. மைமூனா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான ஓர் ஆடு இறந்து கிடந்ததைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், அதன் தோலை ஏன் வீணடித்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அது செத்ததாயிற்றே என்றனர். […]

11) கால்நடைகளை வாங்கி விற்பது தொடர்பான சட்டங்கள்

கால்நடைகளை வாங்கி விற்பது தொடர்பாகவும் இஸ்லாத்தில் சில சட்டங்கள் உள்ளன. நாம் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை விற்கும் போது, அவற்றை வாங்குபவருக்கு நேரில் காண்பித்துதான் விற்க வேண்டும். அறியாமைக் காலத்தில் அரபிகளிடம் ஒரு தவறான வழக்கம் இருந்தது. தற்போது இருக்கும் ஒட்டகத்தை விற்காமல், இந்த ஒட்டகம் ஒரு குட்டி போடும், அந்தக் குட்டி வளர்ந்து இன்னொரு குட்டி போடும் அல்லவா, அந்தப் பேரன் குட்டியை உனக்கு விற்கிறேன் என்று கூறிப் பணம் வாங்கிக் கொள்வார்கள். இன்னும் […]

10) கொல்வதற்க்கு அனுமதிக்கப்பட்ட உயிரினங்கள்

பொதுவாக எந்த ஓர் உயிரினத்தையும் உண்பதற்காகத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கொல்லக் கூடாது என்பது இஸ்லாத்தின் பொதுவான விதியாகும். ஆயினும் இதில் ஐந்து உயிரினங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை உண்பதற்காக அன்றி சாதாரணமாகவே கொல்லலாம். மனிதர்கள் வாழும் பகுதிகள், வீடுகள், தெருக்கள் ஆகியவற்றில் மட்டுமன்றி, பொதுவாக வேட்டையாடுவதோ அல்லது புற்பூண்டுகளைக் கிள்ளுவதோ கூட தடை செய்யப்பட்ட புனித மக்கா எல்லைக்குள்ளும் (ஹரம்), இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையிலும் கூட அந்த ஐந்து உயிரினங்களைக் கொல்ல மார்க்கத்தில் […]

09) வீட்டில் நாய் வளர்க்கலாமா ?

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்துப் பார்க்கும்போது, இஸ்லாத்தில் மூன்று காரணங்களுக்காக மட்டுமே நாய் வளர்க்க அனுமதி உண்டு: ஒன்று, பயிற்சி அளித்து வேட்டையாடுவதற்காக. இரண்டாவது, كَلْبُ الْمَاشِيَةِ (கால்நடைகளைப் பாதுகாக்கும் நாய்) என்று குறிப்பிடப்படுவது போல், ஆட்டு மந்தை அல்லது பண்ணைகளில் உள்ள கால்நடைகளைப் பிற விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக. மூன்றாவது, விளைநிலங்களையும் பயிர்களையும் பாதுகாப்பதற்காக. நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமூக அமைப்பில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்ததால், வீடுகளுக்குக் காவல் தேவையில்லாத அளவுக்குப் பாதுகாப்பு […]

08) எந்தெந்த உயிரினங்களை உண்ணலாம் ?

அடுத்து, எந்தெந்த உயிரினங்களை உண்ணலாம், எவற்றை உண்ணக்கூடாது என்பதைப் பற்றியும் நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். உண்ணக்கூடிய உயிரினங்களை இஸ்லாம் மூன்று வகைகளாகப் பிரிக்கிறது: கடல்வாழ் உயிரினங்கள், பறவை இனங்கள் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள். இதில் கடல்வாழ் உயிரினங்களைப் பொறுத்தவரை சட்டம் மிக எளிமையானது. கடலில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுமே அனுமதிக்கப்பட்டவைதான்; அவற்றில் எதுவுமே முஸ்லிம்களுக்குத் தடுக்கப்படவில்லை. أُحِلَّ لَكُمْ صَيْدُ ٱلْبَحْرِ وَطَعَامُهُۥ கடலில் வேட்டையாடுவதும், அதை உண்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன்: 5:96)➚ […]

07) அஹ்லுல் கிதாப் முறையாக அறுத்ததை உண்ணலாம்

அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும். இதில் வேதம் கொடுக்கப்பட்டவர்களான யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒரு விதிவிலக்கு உண்டு. திருக்குர்ஆனில் அஹ்லுல் கிதாப் என்று குறிப்பிடப்படுவது அவர்கள் இருசாராரையுமே ஆகும். ஓர் ஆட்டை ஒரு யூதரோ அல்லது கிறிஸ்தவரோ உரிய முறையில் அறுத்திருந்தால், அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறாவிட்டாலும் அது முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். இது ஆரம்ப காலத்தில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் தடை செய்யப்பட்டது என்று சிலர் கூறுவதும் தவறாகும். ஹஜ்ஜத்துல் விதாவின் போது الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ (இன்றைய […]

06) உயிரினங்களை அறுக்கும் முறை

கால்நடைகளை உணவுக்காக அறுத்து உண்பது தொடர்பான சட்டதிட்டங்களில், அவற்றை எவ்வாறு அறுக்க வேண்டும் என்பது மிக முக்கியமான வழிகாட்டலாகும். உயிரினங்களை அறுக்கும்போது பயன்படுத்தும் ஆயுதம் மிகக் கூர்மையாக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஒரு ஹஜ் பெருநாளில் குர்பானி கொடுப்பதற்காக ஆயிஷா (ரலி) அவர்களிடம் கத்தி எடுத்து வரச் சொன்னார்கள். அவர் கொண்டு வந்த கத்தி போதிய கூர்மையுடன் இல்லாததால், அதைக் கல்லில் தீட்டி கூர்மையாக்கி எடுத்து வருமாறு கூறி, நன்கு கூர்மையாக்கிய […]

05) அனுமதிக்கப்பட்ட உயிரினங்களை உண்பதற்காக அறுக்கலாம்

அனுமதிக்கப்பட்ட உயிரினங்களைக் கொல்வதாக இருந்தால், உண்பதற்காக மட்டுமே கொல்ல வேண்டும். வீணாக எந்த உயிரையும் கொல்லக் கூடாது. ஒருவர் ஓர் உயிரினத்தை அதற்குரிய நியாயமான காரணமின்றி கொன்றால், மறுமை நாளில் அல்லாஹ் அவரை விசாரிப்பான். சிலர் வாகனங்களில் செல்லும்போது சாலையில் தென்படும் முயல், நாய் போன்ற உயிரினங்களை வேடிக்கைக்காகவும் சாகசத்திற்காகவும் வாகனத்தை ஏற்றி அடித்துக் கொல்கிறார்கள். இத்தகைய அநியாயமான செயல்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் முன் பதில் சொல்ல வேண்டியிருக்கும். مَنْ قَتَلَ عُصْفُورًا فَمَا فَوْقَهَا بِغَيْرِ […]

04) பிராணிகளை வீடுகளில் வளர்ப்பதற்கு அனுமதி உண்டு

சிட்டுக்குருவி, கிளி, மைனா, பூனை போன்ற பிராணிகளை வீடுகளில் வளர்ப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்களின் தம்பியான அபூ உமைர் என்ற சிறுவர் ஒரு சிட்டுக்குருவியை வளர்த்து வந்தார். நபி (ஸல்) அவர்கள் வரும்போதெல்லாம் அவரிடமும் அந்தக் குருவியைப் பற்றியும் விசாரிப்பார்கள். ஒருநாள் அந்தக் குருவி இறந்துவிட்டபோது, கவலையோடு அமர்ந்திருந்த அந்தச் சிறுவரிடம் நபி (ஸல்) அவர்கள் அன்போடு விசாரித்தார்கள். يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ அபூ உமைரே! உமது […]

03) வாயில்லா ஜீவன்களைச் சித்திரவதை செய்யக் கூடாது

தொழுகை, நோன்பு, தஸ்பீஹ் போன்ற வணக்க வழிபாடுகளுக்கும் மனிதர்களுக்குச் செய்யும் உதவிகளுக்கும் நற்கூலி உண்டு என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கால்நடைகளுக்கும் பிராணிகளுக்கும் செய்யும் உதவிகளுக்கும் கூலி கிடைக்குமா என்று நபித்தோழர்கள் மீண்டும் ஆச்சரியத்துடன் வினவினார்கள். أَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لأَجْرًا கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலுமா எங்களுக்குக் கூலி கிடைக்கும்? அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ உயிருள்ள ஒவ்வொரு பிராணிக்குச் செய்யும் நன்மையிலும் […]

02) உயிரினங்களைப் பட்டினி போடுவது கூடாது

உணவு, சவாரி போன்ற மனிதத் தேவைகளுக்காக ஆடு, மாடு, ஒட்டகம், குதிரை போன்ற பிராணிகளை வளர்ப்பதற்கும், அவற்றின் மூலம் வேலை வாங்கிக்கொள்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி உண்டு. ஆயினும், அவ்வாறு பயன்படுத்தப்படும் உயிரினங்களைப் பட்டினி போடுவது கடுமையான குற்றமாகும். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் வயிறு ஒட்டி, விலா எலும்புகள் வெளியே தெரியும் அளவுக்குப் பட்டினியால் மெலிந்திருந்த ஓர் ஒட்டகத்தைக் கண்டார்கள். அதன் உரிமையாளர் யார் என்று விசாரித்தபோது, ஓர் அன்சாரித் தோழர் வந்து அது தமக்குரியது என்றார். […]

01) முன்னுரை

மனிதர்கள் தங்களுக்குள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பொதுவாகப் பேசப்பட்டாலும், மனிதர்களைத் தவிர்த்து இந்த உலகில் அல்லாஹ் படைத்துள்ள எண்ணற்ற பிற உயிரினங்களோடு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், அவற்றுக்கும் நமக்குமான உறவுகள் என்ன என்பது குறித்துப் பெரும்பாலான முஸ்லிம்கள் அறியாமல் இருக்கிறார்கள். உயிரினங்களைப் பொறுத்தவரை பலவிதமான மார்க்கச் சட்டங்கள் உள்ளன. ஓர் உயிரினத்தை உண்ணலாமா கூடாதா, அதன் மீது ஏறிச் சவாரி செய்யலாமா கூடாதா, செல்லப் பிராணிகளாக எவற்றை வளர்க்கலாம், நாய், பூனை, கழுதை போன்ற […]