Category: முஸ்லிமல்லாதோர் விமர்சனம்

q136

இறைவன் தன்னைப் பற்றி நாம் எனக் கூறுவது ஏன்?

பதில்: திருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றி தன்னிலையாகக் கூறும்போது மிகச் சில இடங்களில் மட்டுமே “நான்’ எனக் கூறுகிறான். பெரும்பாலான இடங்களில் “நாம்’ என்றே கூறுகிறான். தனி நபர்களும் தம்மைப் பற்றி இவ்வாறு கூறும் வழக்கம் பல்வேறு மொழிகளில் உள்ளது போல் அரபு மொழியிலும் உள்ளது. “இது என் வீடு” என்று கூறும் இடத்தில் “இது நம்ம வீடு” என்று கூறுகிறோம். மற்றவர்களுக்கும் அந்த வீட்டில் பங்கு உண்டு என இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். சொந்த […]

இறைவன் உண்டு என்பதற்குச் சான்று என்ன?

இவ்வசனங்களில் (30:37➚, 39:52➚) நாடியோருக்கு இறைவன் தாராளமாக உணவளிக்கிறான். நாடியோருக்கு அளவோடும் உணவு வழங்குகிறான் என்று கூறிவிட்டு “சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன” என்று அல்லாஹ் கூறுகிறான். உலகில் பெரிய அறிஞர்கள், மாபெரும் விற்பன்னர்கள், திறமைசாலிகள், கடின உழைப்பாளிகள் போன்ற ஏராளமான மக்கள் வறுமையில் உழல்வதை ஒரு பக்கம் பார்க்கிறோம். திறமையில்லாதவர்கள், குறைந்த உழைப்புடையவர்கள், பல விஷயங்களைப் பற்றிய போதுமான அறிவு இல்லாதவர்கள், திட்டமிடத் தெரியாதவர்கள் எனப் பலரும் கோடிக் கணக்கான முதலீட்டில் வியாபாரம் […]

முஸ்லிம்கள் நூலகங்களை அழித்தார்களா?

கேள்வி: அண்ணா நூலகம் மாற்றம் குறித்த முதல்வரின் அறிக்கைக்கு விமர்சனம் எழுதிய ஒரு வாரஇதழ் பண்டைய இந்தியாவின் அறிவுச் சுரங்கமான நாலந்தா நூலகத்தை அழித்து இன்றும் நினைவு கூறப்படும் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி யை போல ஜெயலலிதாவும் நினைவுகூறப்படுவார் என்று விமர்சித்து உள்ளார்கள், இது உண்மையா? அஹ்மத் ஷமீம், கூத்தாநல்லூர் பதில்: அந்த வார இதழைப் படிப்பதற்கு முன்னர் முஹம்மத் பின் பக்தியார் கில்ஜி என்ற பெயரை யாரும் அறிந்திருக்கவில்லை. நூலகத்தை அழித்ததற்காக நினைவு கூறத்தக்க […]

சுன்னத் செய்யப்பட்ட நிலையில் ஏன் பிறக்கச் செய்யவில்லை?

DrMohamed Kizhar பதில்: இந்த கேள்விக்குச் செல்லும் முன்பு ஆணுறுப்பின் முன் தோல் = Fore Skin or Prepuce ஆணுறுப்பின் முன்பகுதி = Glans Penis ஒரு நாத்திக மருத்துவ நண்பர் என்னிடம் ” கிஸார், ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.. சுன்னத் ( ஆணுறுப்பின் முன்தோலை Prepuce /foreskin நீக்கம்) பண்ணுவதால் பல மருத்துவம் சார்ந்த நன்மைகள் உள்ளது… இஸ்லாமிய மதம் சுன்னத் செய்யும்படி வலியுறுத்துகிறது.. உங்க இறைவன் மனிதனை, ஒரு முழுமை பெற்ற, […]

பிஸ்மில்லாஹ் கூறி அறுப்பது சரியா?

உயிரினத்தை அறுக்கும் போது பிஸ்மில்லாஹ் ஏன்? அப்துல் சமத் பதில்: பொதுவாக எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் ஒரு எறும்பைப் படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது அல்லாஹ் படைத்த உயிரைக் கொல்வது நியாயமற்றதாகும். ஆனால் எந்த அல்லாஹ் இந்த உயிரினங்களைப் படைத்தானோ அவனே அதை அறுத்து உண்ண நமக்கு அனுமதி அளித்து விட்டால் அப்போது நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படத் தேவை இல்லை. ஆனால் இந்த அனுமதியைப் […]

இஸ்லாம் மட்டும் தான் முழுமையான மார்க்கமா?

இஸ்லாத்தைப் போன்று மற்ற மதங்களும் முழுமை பெற்றவை தானே? பதில்: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அது போல் ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் மதம் முழுமையானது என்று தான் கூறுவார்கள். நம்புவார்கள். ஆனால் முழுமையான மார்க்கம் என்று நாம் நம்பினால் மட்டும் அது முழுமையான மார்க்கமாக ஆகாது. மாறாக அது முழுமையானது என்பதற்கான ஆதாரங்களையும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். ஒரு மார்க்கம் ஒரு காலத்தில் பொருந்தி, பின்னர் பொருந்தாமல் போனால் அது முழுமை பெற்ற […]

பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறதா?

இவ்வசனங்கள் (2:190-193➚, 2:216➚, 2:244➚, 3:121➚, 3:195➚, 4:74➚,75, 4:84➚, 4:89➚, 4:91➚, 8:39➚, 8:60➚, 8:65➚, 9:5➚, 9:12-14➚, 9:29➚, 9:36➚, 9:41➚, 9:73➚, 9:123➚, 22:39➚, 47:4➚, 66:9➚) போர் செய்யுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகின்றன. ஆன்மிக வழிகாட்டும் நூலில் போர் செய்யுமாறு ஏன் கட்டளையிட வேண்டும்? அப்படியானால் வாள் முனையில் தான் இஸ்லாம் பரப்பப்பட்டதா? என்று இஸ்லாத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகின்றது. ஏன் இவ்வாறு கட்டளையிடப்பட்டது? எந்தச் சூழ்நிலையில் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்பதை […]

முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்?

கேள்வி: முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்? முஸ்லிம்கள் தங்களது எதிரிகளை இனங்கண்டு கொள்ளாதது ஏன்? அனைத்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை இந்துக்கள் என நினைத்து அவர்கள் எதிரிகளாகக் கருதுவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளியாகும் தலித் வாய்ஸ் இதழில் ஒரு வாசகர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது? – சாஜிதா ஹுஸைன், சென்னை. பதில்: முஸ்லிம்கள் பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டால் தான் இஸ்லாத்தின் பால் மற்றவர்கள் கவனத்தைத் திருப்ப மாட்டார்கள் என்பதற்காக திட்டமிட்டு இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு […]

முஸ்லிமல்லாதவருடன் எவ்வாறு பழகுவது

முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்களின் தொடர்பு எந்தெந்த வகையில் அமைய வேண்டும்? பதில்: முஸ்லிமல்லாத மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதில் அதிகமான முஸ்லிம்களுக்கு தெளிவான பார்வை இல்லை. முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவரையும் அறவே வெறுத்து அவர்களை அடியோடு ஒரு சாரார் புறக்கணித்து ஒதுக்கிவிடுகின்றனர். முஸ்லிமல்லாத மக்களும் இஸ்லாத்தைப் புரிந்து ஏற்க வேண்டுமானால் அவர்களுடன் நெருங்கிப் பழகுவதன் மூலமே அது சாத்தியமாகும். இதை உணராமல் முஸ்லிமல்லாத மக்களை அறவே ஒதுக்குவதும், அவர்களிடமிருந்து முழுமையாக ஒதுங்கிக் கொள்வதும் முற்றிலும் தவறாகும். […]

திருந்திய பெண்ணை நபி தண்டித்தது சரியா?

கேள்வி: விபச்சாரம் செய்தபின் அதை தவறு என்று உணர்ந்துவிட்ட பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் தண்டனை வழங்கினார்கள்? என்று இந்து நண்பர் கேட்கிறார். இதற்கு என்ன பதில் சொல்வது? பதில்: நீங்கள் குறிப்பிடும் சம்பவம் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. حَدَّثَنِي أَبُو غَسَّانَ مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا مُعَاذٌ يَعْنِي ابْنَ هِشَامٍ حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي أَبُو قِلَابَةَ أَنَّ أَبَا […]

அறுத்துப் பலியிட்டு மாமிசங்களை வீணாக்குவது நியாயமா?

கேள்வி: அறுத்துப் பலியிடுதல் நியாயம் தானா? பதில்: அல்ஜன்னத் இதழில் ஜனவரி 1996ல் அளித்த பதில் உங்களுடைய இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்கள் எல்லாம் எனக்குப் பிடித்து இருக்கிறது. ஆனால் ஆடுமாடு ஒட்டகங்களைக் கட்டாயமாக அறுத்துப் பலியிட வேண்டும் என இஸ்லாம் கூறுவது தான் எனக்குப் பிடிக்கவில்லை. மேலும் அரபு நாடுகளில் ஏராளமானோர் அறுத்துப் பலியிடுவதால் வாங்குவோர் இன்றி மாமிசங்கள் புதைக்கப்படுகின்றன. இது வேஸ்ட் தானே! என்று என் தோழி ஒருத்தி கூறுகிறாள். இதற்கு என்ன பதில் கூறலாம். […]

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?

கேள்வி: இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்? பதில்: இதுபோன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். எந்த ஒரு பிரச்சனையானாலும் அதில் நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது. ஒருவன் முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயம் செய்தால் அவன் முஸ்லிம் என்பதற்காக அவனை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. இறைமறுப்பாளனாக இருக்கும் ஒருவன் […]

44) முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்?

கேள்வி : முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றதே? என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கிறார்களே? சாஜிதா ஹுஸைன், சென்னை. பதில்: விவாகரத்துச் செய்த பின் அதனால் பெண் களே அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்களின் உரிமை பாதிக்கப்படுவது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தலாக் என்னும் விவாகரத்து முறையினால் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற உண்மையை அறியலாம். விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இல்லா விட்டால் அந்த உரிமையைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை […]

39) இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும்?

கேள்வி : எங்கள் பக்கத்து வீட்டு இந்து நண்பரிடம் எனக்கு நீண்ட நாளாக பழக்கம் உண்டு. அவரிடம் இஸ்லாத்தை அறிமுகம் செய்தேன். குர்ஆனையும் அவருக்கு படிக்கக் கொடுத்தேன். அவருக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டது. அதில் இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும், மனிதனை மனிதன் கொன்று குவிப் பதும் பொருளாதாரத்தைச் சேதப்படுத்துவதும் தன்னு டைய பாதையில் போர் செய்வதாக சிறப்பித்துக் கூறு வதா? இது இறைவனின் மகா கருணைக்கு இழுக்காக இல்லையா? என்று கேட்கிறார் விளக்கம் தரவும். […]

ஒரு ஜோடியில் இருந்து உருவான மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்?

மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்? கேள்வி: ஒரு இந்து சகோதரரிடம் உரையாடும் போது ‘மனித சமுதாயம் ஆதம்’ ஹவ்வா’எனும் இருவர் வழியாகவே உருவாகியுள்ளது’என்று கூறினேன். அதற்கு அவர்அப்படியெனில் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், ஆதிவாசிகள் வெவ்வேறுதோற்றத்துடன் இருக்கிறார்களே? என்றார். இதற்கு எப்படி விளக்கம் கொடுக்க வேண்டும்? – எஸ். ஷாஹுல் ஹமீது, அய்யம்பேட்டை. பதில்: இந்த வாதத்தில் உள்ள அடிப்படைத் தவறை விளக்கினாலே போதும். ஒரு தாய்க்கும், ஒரு தந்தைக்கும் பிறந்தவர்கள் ஒரே தோற்றத்தில், ஒரே நிறத்தில்இருப்பார்கள் […]

இஸ்லாம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லுகிறதா?

இஸ்லாம் மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளது. காபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது என்பதும் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களில் ஒன்றாகும். திருக்குர்ஆனில் 2:191➚ வசனத்தை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர். ஜிஹாத் (புனிதப் போர்) செய்யுமாறு திருக்குர்ஆனில் உள்ள கட்டளைகளையும் எடுத்துக் காட்டி இவ்வாறு விமர்சனம் செய்கின்றனர். இது குறித்தும் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது. முஸ்லிமல்லாதவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதாகச் சொல்வதை முதலில் பார்ப்போம். (களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! […]