Author: Ayisha

குழந்தை பெற்றவள் எத்தனை நாட்கள் தொழுகை நோன்புகளை விட வேண்டும்?

குழந்தை பிரசவித்த பின் பெண்கள் எத்தனை நாட்கள் தொழுகை நோன்பு ஆகிய வணக்கங்களை நிறுத்த வேண்டும்? பதில் பிரசவித்த பெண்கள் இத்தனை நாட்கள் தொழுகையை விட்டு விட வேண்டும் அல்லாஹ்வும் அவனது தூதரும் எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்கவில்லை. இது அனைத்து பெண்களுக்கும் ஒரே கால அளவில் பிரசவத் தீட்டு அமையாது என்பதால் இதற்கு மார்க்கத்தில் காலக் கெடு குறிப்பிடப்படவில்லை. இரத்தப் போக்கு உள்ள நிலையில் தொழக் கூடாது என்ற அடிப்படையில் சில பெண்களுக்கு ஓரிரு நாட்களில் […]

இறைவன் உண்டு என்பதற்குச் சான்று என்ன?

இவ்வசனங்களில் (30:37➚, 39:52➚) நாடியோருக்கு இறைவன் தாராளமாக உணவளிக்கிறான். நாடியோருக்கு அளவோடும் உணவு வழங்குகிறான் என்று கூறிவிட்டு “சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன” என்று அல்லாஹ் கூறுகிறான். உலகில் பெரிய அறிஞர்கள், மாபெரும் விற்பன்னர்கள், திறமைசாலிகள், கடின உழைப்பாளிகள் போன்ற ஏராளமான மக்கள் வறுமையில் உழல்வதை ஒரு பக்கம் பார்க்கிறோம். திறமையில்லாதவர்கள், குறைந்த உழைப்புடையவர்கள், பல விஷயங்களைப் பற்றிய போதுமான அறிவு இல்லாதவர்கள், திட்டமிடத் தெரியாதவர்கள் எனப் பலரும் கோடிக் கணக்கான முதலீட்டில் வியாபாரம் […]

பிஸ்மில்லாஹ் கூறி அறுப்பது சரியா?

உயிரினத்தை அறுக்கும் போது பிஸ்மில்லாஹ் ஏன்? அப்துல் சமத் பதில்: பொதுவாக எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் ஒரு எறும்பைப் படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது அல்லாஹ் படைத்த உயிரைக் கொல்வது நியாயமற்றதாகும். ஆனால் எந்த அல்லாஹ் இந்த உயிரினங்களைப் படைத்தானோ அவனே அதை அறுத்து உண்ண நமக்கு அனுமதி அளித்து விட்டால் அப்போது நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படத் தேவை இல்லை. ஆனால் இந்த அனுமதியைப் […]