Category: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

u469

69) சாட்சியத்தில் ஆண், பெண் வேற்றுமை ஏன்?

இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமம் என்று 2:282➚ வசனம் கூறுகிறது. அதிகமான மக்களுக்கு இதில் நெருடல் உள்ளது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். இது பெண்களின் நினைவாற்றலுக்கும், அறிவுத்திறனுக்கும் சான்றாக உள்ளது. சாட்சியம் கூறுவதற்குத் தேவையான அறிவுத்திறனும், நினைவாற்றலும் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாகவே உள்ள போது அவர்களின் சாட்சியத்தைப் பாதி சாட்சியமாகக் கருதுவது ஏன் என்று சிலர் நினைக்கலாம். பெண்களுக்கு நல்ல […]

70) வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு

வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று 4:11➚, 4:176➚ ஆகிய வசனங்கள் கூறுகின்றன. சொத்துரிமையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே பாகுபாடு காட்டுவது நியாயமில்லை என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். தக்க காரணங்களுடன் தான் இஸ்லாம் சொத்துரிமையில் வேற்றுமை காட்டுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 1, இஸ்லாமிய சமூக, குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது தான் அதிகச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. மற்ற சமூகங்களிலும் கூட பெரும்பாலும் இதே நிலை […]

68) சிறுமிகளுக்கு திருமணம் கூடுமா

சிறுமிகளுக்கு திருமணம் செய்யலாம் என்ற கருத்து சில முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுமியாக இருக்கும் போது திருமணம் செய்துள்ளதை ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆயிஷா (ரலி) அவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் வயது ஆறு என்பதற்கு ஹதீஸ் நூல்களில் ஆதாரங்கள் உள்ளன. இதை ஆதாரமாகக் கொண்டு ஆறு வயது சிறுமியை நாம் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாது. இதைப் புரிந்து கொள்ள […]

66) பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:32)➚ மேற்கண்ட வசனத்தில் பெண்கள் சம்பாதித்ததில் அவர்களுக்கு பங்கு உண்டு என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து பெண்கள் சம்பாதிக்கலாம் என்ற அனுமதி நேரடியாக வழங்கப்படுகின்றது. பெண்கள் வேலை செய்து சம்பாதிப்பதை மார்க்கம் தடைசெய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் விவசாயப் […]

67) ஆண்களும் பெண்களும் சேர்ந்து படித்தல்

கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை. கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பயிலும் முறையை மட்டும் தான் இஸ்லாம் எதிர்க்கிறது. புகழ்ச்சியில் மயங்கி தம்மை இழப்பவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர். கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே அவர்களை வஞ்சித்து அனுபவிக்கும் செய்திகளும், சக மாணவர்களால் ஏமாற்றப்படும் செய்திகளும் அன்றாடச் செய்திகளாகி விட்டன. இவ்வாறு சேர்ந்து படிப்பதால் தான் ஆண்களின் கவனமும் சிதறடிக்கப்படுகிறது. பெண்கள் தனியாகப் படித்தால் படிப்பு […]

65) தம்பதிகளுக்கிடையே மணமுறிவு ஏற்பட்டால் குழந்தைகள் யாருக்கு

தலாக் மூலமோ குலா மூலமோ கணவன் மனைவியர் பிரிந்து விட்டால் அவர்களின் குழந்தைகள் விஷயமாக என்ன முடிவு எடுப்பது? தாயிடம் ஒப்படைக்கப்பட்டாலும், தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டாலும் பிள்ளைகளின் பொருளாதாரச் செலவு தந்தையைத் தான் சேரும். பால் குடிக்கும் பருவத்தில் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தைக்கு பாலூட்டுவதற்காக தாய்க்கு கட்டணம் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. தாய்ப்பால் என்பது இயற்கையாக சுரக்கக் கூடியது. கணவன் மனைவி சேர்ந்து வாழும் போது குழந்தைக்குப் பாலூட்ட கட்டணம் எதுவும் தாய்க்குக் கொடுக்க […]

63) விவாகரத்துக்குப் பின் பெண்ணுக்கு இழப்பீடு

2:236➚, 2:241➚, 33:49➚, 65:6➚,7 ஆகிய விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு அழகிய முறையில் வாழ்க்கை வசதிகள் அளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இவ்வசனத்திற்கு அதிகமான அறிஞர்கள் தவறான விளக்கம் கொடுத்துள்ளதை நாம் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும். விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதங்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும். இது இத்தா எனப்படுகிறது. இந்த மூன்று மாத காலத்திற்கு உரிய செலவுத் தொகையைக் கொடுப்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது என்று அந்த அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு […]

64) மனைவியின் மீது கணவன் விபச்சாரக் குற்றம் சுமத்தி திருமணத்தை முறித்தல்

ஒருவர் மீது விபச்சாரக் குற்றம் சுமத்துபவர் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வராவிட்டால் குற்றம் சுமத்தியவருக்கு எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியக் குற்றவியல் சட்டம். ஆனால் மனைவியின் மீது கணவன் இவ்வாறு குற்றம் சுமத்தும் போது தனது குற்றச்சாட்டை நிரூபிக்க நான்கு சாட்சிகள் இல்லாவிட்டால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை 24:6-9➚ வசனங்கள் கூறுகின்றன. மனைவி நடத்தை கெட்டவள் எனக் குற்றம் சாட்டும் கணவனுக்கு தன்னைத் தவிர […]

62) பெண்களின் விவாகரத்து உரிமை

ஆண்களுக்கு இருப்பது போல் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிமல்லாதார் தவறாகக் கருதிக் கொண்டுள்ளனர். பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது ஏனெனில் عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ […]

61) விவாகரத்து செய்தால் கொடுத்த அன்பளிப்புகளை திரும்பக் கேட்கக் கூடாது

ஒருவன் மனைவியுடன் சேர்ந்து வாழும்போது கொடுத்த அன்பளிப்புகளை விவாகரத்தின் போதோ, அதன் பின்போ திரும்பப் பெறக்கூடாது. அன்பளிப்பாக கொடுத்த பொருட்களை திரும்பப் பெறுவது அநாகரீகமான செயல் எனவும் அது கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள். عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يُعْطِيَ عَطِيَّةً أَوْ يَهَبَ هِبَةً فَيَرْجِعَ فِيهَا إِلَّا الْوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ وَمَثَلُ الَّذِي يُعْطِي الْعَطِيَّةَ […]

60) முத்தலாக் – ஒரு விளக்கம்

தலாக் கூறுவதற்கு இஸ்லாம் மூன்று வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதை அறியாத சில முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் தலாக், தலாக், தலாக் என்று கூறுகின்றனர். அல்லது முத்தலாக் என்று கூறுகின்றனர். இப்படிக் கூறிவிட்டதால் மூன்று தலாக்கும் முடிந்து விட்டது என்றும், இனிமேல் மனைவியுடன் சேர வழியில்லை என்றும் கருதுகின்றனர். மார்க்க அறிவு குறைந்த மதகுருமார்கள் சிலரும் இப்படி மார்க்கத் தீர்ப்பு வழங்கி நிரந்தரமாகப் பிரித்து விடுகின்றனர். இது இஸ்லாம் அனுமதிக்காத வழக்கமாகும். தலாக் என்றால் விடுவித்தல் என்பது பொருள். […]

58) தலாக்கின் விதிமுறைகள்

ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் கூற முடியாது. பல கட்டங்களைக் கடந்து தான் தலாக் எனும் முடிவுக்கு வர வேண்டும். பிடிக்கவில்லை என்றவுடன் தலாக் கூறாமல் அறிவுரைகள் சொல்ல வேண்டும். விவாகரத்து முடிவை எடுத்தால் அதனால் ஏற்படும் பாதகங்களை மனைவிக்குப் புரியவைக்கும் வகையில் அறிவுரை கூற வேண்டும். இந்த அறிவுரைகள் பயனளிக்காத போது இருவரும் படுக்கையில் இருந்து விலகிப் பார்க்க வேண்டும். இப்படி சில நாட்கள் மனைவியுடன் சேராமல் இருக்கும் போது […]

59) தலாக் மூன்று வாய்ப்புகள்

தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இது தான் தலாக் கூறுவதற்கு திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டமாகும். ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண்ணுக்கு மூன்று மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையாவதற்குள் இருவரும் சேர்ந்து கொள்ளலாம். (ஏறத்தாழ இரண்டரை முதல் மூன்று மாதங்கள் […]

57) திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்

இஸ்லாம் மார்க்கத்தில் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை நாட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது. தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லியே இது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. கணவன் மனைவியர் சேர்ந்து வாழ்ந்து விட்டு பிரியும் போது பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். சில வேளை ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தக் காரணம் அனைவருக்குமானதே தவிர முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது அல்ல. முஸ்லிம் ஆண்கள் […]

55) கருக்கலைப்பு கூடுமா?

6:140➚, 6:151➚, 17:31➚, 60:12➚, 81:8➚,9 ஆகிய வசனங்களில் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. வறுமைக்குப் பயந்தும், பெண் குழந்தை பிறப்பது இழிவு எனக் கருதியும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அன்றைய காட்டுமிராண்டி அரபுகளிடம் இருந்தது. இது கடுமையான குற்றம் என்று இவ்வசனங்கள் மூலம் எச்சரிக்கப்பட்டு இக்கொடிய வழக்கத்தை இஸ்லாம் ஒழித்துக் கட்டியது. குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்பதன் நேரடிப் பொருள் இது தான். குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்ற வசனம் அருளப்பட்ட காலத்தில் கருவை அழிக்கும் […]

56) சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா?

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. 1-கணவனின் உயிரணுவை எடுத்து, மனைவியின் கரு முட்டையுடன் சேர்த்து சோதனைக் குழாயில் வளர்த்து அதை மனைவியின் கருவறையில் செலுத்துவது ஒரு முறையாகும். 2-கணவன் அல்லாத வேறொரு ஆணிடமிருந்து உயிரணுவை எடுத்து அதை மனைவியின் கரு முட்டையைச் சேர்த்து குழாயில் வளர்த்து மனைவியின் கருவறையில் செலுத்தி குழந்தை பெற வைப்பது மற்றொரு முறையாகும். 3- கணவன் அல்லாத இன்னொரு ஆணின் உயிரணுவை இன்னொரு பெண்ணின் சினை முட்டையுடன் […]

54) கணவன் காணாமல் போய் விட்டால்?

கணவன் காணாமல் போய் விடாக் மார்க்க அறிஞர்கள் பலவாறான பத்வாக்களை வழங்கியுள்ளனர். ولا يفرّق بينه وبينها وحكم بموته بعد تسعين سنةً وتعتدّ امرأته وورث منه حينئذٍ لا قبله كنز الدقائق இருவரது திருமண உறவைப் பிரிக்கக் கூடாது, தொன்னூறு ஆண்டுகள் கழிந்த பின் அவன் இறந்து விட்டதாக முடிவு செய்யப்படும். அவனது மனைவி அப்போது இத்தா இருப்பாள். அப்போது தான் கணவனின் சொத்துக்கும் வாரிசாக ஆவாள். நூல் : ஹனஃபி […]

53) மறுமணத்தைத் தடுக்கக் கூடாது

கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்கள் மறுமணம் செய்வதை சமுதாயம் இழிவாகக் கருதுகிறது. தனக்கு மறுமணம் அவசியம் என்று எண்ணுகிற பெண்கள் கூட வெட்கப்பட்டு அதைத் தவிர்க்கும் அளவுக்கு கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது. தவறான நடத்தையில் ஈடுபடுவதற்குத் தான் வெட்கப்பட வேண்டும். திருமணம் செய்வதற்கு வெட்கப்படத் தேவையில்லை. அல்லாஹ் அனுமதித்ததைத் கேலி செய்பவர்கள் மறுமையில் குற்றவாளிகளாக நிற்க வேண்டும் என்பது பற்றி அஞ்ச வேண்டும். நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு […]

51) பெண்களுக்கு இத்தா ஏன்?

கணவனை இழந்த பெண்கள் உடனே மறுமணம் செய்யக் கூடாது என்றும், எவ்வளவு நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மறுமணம் செய்யலாம் என்றும் 2:228➚, 2:231➚, 2:232➚, 2:234➚, 2:235➚, 33:49➚, 65:1➚ ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது இத்தா காலம் என்று சொல்லப்படுகிறது. 2:234➚, 2:235➚ வசனங்களில் கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் முடியும் வரை மறுமணம் செய்யக் கூடாது என்று கூறப்படுகின்றது. கர்ப்பிணிகள் பிரசவிக்கும் வரை இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மாதவிடாய் […]

52) காலமெல்லாம் வெள்ளை ஆடை தேவையில்லை

அவரவருக்கு உரிய இத்தா காலம் முடிந்த பின் அவர்கள் மறுமணம் செய்யாவிட்டால் அவர்கள் மரணிக்கும் வரை வெள்ளைச் சட்டை தான் அணிய வேண்டும்: வெள்ளைச் சேலை தான் அணிய வேண்டும் என்ற நம்பிக்கை சமுதாயத்தில் நிலவுகிறது. இதுவும் மூட நம்பிக்கையாகும். இத்தா காலம் முடிந்து விட்டால் ஒரு கன்னிப் பெண்ணைப் போல் எல்லா விதமான ஆடைகளையும் கணவனை இழந்த பெண்களும் அணியலாம். விதவைகள் காலமெல்லாம் வெள்ளை உடை அணிய வேண்டும் என்பது பிற மதத்திலிருந்து நுழைந்து விட்ட […]

50) பெண்கள் சொத்துரிமை

இஸ்லாம் பெண்களுக்கு வாரிசுரிமையை வழங்கியுள்ளது. உலகில் மனைவிக்கு மட்டுமே சொத்துரிமை அளிக்கப்படுகிறது. இதர பெண் உறவினர்களுக்கு வாரிசுரிமை வழங்கப்படுவதில்லை. இஸ்லாமில் மனைவி அல்லாத பெண் உறவினர்களுக்கும் வாரிசு உரிமை வழங்கப்பட்டுள்ளது. கணவனுக்கு குழந்தை இருக்கும் நிலையில் மரணித்து விட்டால் அவனது சொத்தில் எட்டில் ஒரு பாகம் மனைவுக்கு உரியது. கணவனுக்கு குழந்தை இல்லாத நிலையில் மரணித்தால் கணவன் சொத்தில் நான்கில் ஒரு பங்கு மனைவிக்கு உண்டு. ஒருவனுக்கு குழந்தைகள் உள்ள நிலையில் மரணித்தால் அவனது தாய்க்கு ஆறில் […]

49) பெண்கள் பிற பெண்களின் மர்ம உறுப்பைப் பார்க்கக் கூடாது

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ، وَلَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ، وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ، وَلَا تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் […]

47) உயிருக்கு ஆபத்து என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

நிரந்தரமாக கருத்தடை செய்து கொள்ளக் கூடாது. நிர்பந்தம் ஏற்படும் போது தடுக்கப்பட்ட விஷயங்கள் ஆகுமானதாகி விடும். இனி கரு உருவானால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற இது நிர்பந்தம் ஏற்படும் போது கர்ப்பத்தைக் கலைக்கலாம். நிர்ப்பந்தமான நிலையில் இறை நிராகரிப்புச் சொற்களை மொழிவது கூட மன்னிக்கப்பட்டு விடுகின்றது. அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் […]

48) கணவன் மனைவியர் உடலுறவுக்கு கட்டுப்பாடுகளோ தடைகளோ உள்ளதா?

கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. மனைவியின் பின் துவாரத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதையும் மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் […]

46) குடும்பக் கட்டுப்பாடு

உலகில் பெரும்பாலான நாடுகள் மனித உற்பத்தியைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதிக சந்ததிகள் பெறுவதால் ஏற்படும் அசௌகரியங்களையும் பிரச்சாரம் செய்து வருகின்றன. கரு வளராமலிருக்கவும், வளர்ந்த கருவைச் சிதைக்கவும் விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி பல சாதனங்களையும் உருவாக்கியுள்ளன. குடும்பக் கட்டுப்பாடு என அறிமுகப்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு முஸ்லிம்கள் எந்த அளவு ஒத்துழைக்கலாம்? இதனைக் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும். குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், குழந்தைகள் உருவாவதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளவும் இன்று கண்டு […]

44) வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும்

வீட்டு வேலைகள் செய்வது மனைவிக்கு கடமை இல்லை என்று சில பெண்கள் நினைக்கிறார்கள். இவர்களின் தவறான புரிதலால் குடும்பவாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் தான் வீட்டு வேலைகளைச் செய்து வந்தார்கள். سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، تَقُولُ: كَانَ يَكُونُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلَّا فِي شَعْبَانَ، قَالَ يَحْيَى: الشُّغْلُ مِنَ النَّبِيِّ أَوْ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ […]

45) கணவனுக்குத் தெரியாமல் அவனது பொருளை எடுக்கலாமா?

கணவர் குடும்பத் தேவைகளுக்குப் போதுமான தொகையைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தால் அவருக்குத் தெரியாமல் தேவையான அளவு அவனது பணத்தில் மனைவி எடுத்துக்கொள்வது குற்றமில்லை. அப்படி எடுக்கும் தொகை முக்கியமான குடும்பத் தேவைகளுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும். حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: قَالَتْ هِنْدٌ أُمُّ مُعَاوِيَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، […]

43) கணவனின் உறவினர்களுக்கு பணிவிடை செய்தல்

கணவனுக்கும் அவனது உறவினர்களுக்கும் பணிவிடை செய்வது பெண்கள் மீது கடமையில்லை என்று சில பெண்கள் நினைக்கிறார்கள். இதனால் கணவனின் உறவினர்களை இவர்கள் சரியாகக் கவனிப்பது கிடையாது. இது தவறாகும். عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا… قَالَ لِي حِينَ اسْتَأْذَنْتُهُ: هَلْ تَزَوَّجْتَ بِكْرًا أَمْ ثَيِّبًا؟ ، فَقُلْتُ: تَزَوَّجْتُ ثَيِّبًا، فَقَالَ: هَلَّا تَزَوَّجْتَ بِكْرًا تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، تُوُفِّيَ وَالِدِي أَوِ […]

41) கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்

கணவன் மார்க்கத்திற்கு மாற்றம் இல்லாத ஒரு காரியத்தைக் கூறினால் மனைவி கேட்டு நடக்க வேண்டும். قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ، يَكْفُرْنَ قِيلَ: أَيَكْفُرْنَ بِاللَّهِ؟ قَالَ: ” يَكْفُرْنَ العَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ: مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ ” எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் அதிகம் பேர் […]

42) மார்க்கத்துக்கு மாற்றமான விஷயங்களில் கட்டுப்படுதல் இல்லை

عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً مِنَ الأَنْصَارِ زَوَّجَتِ ابْنَتَهَا، فَتَمَعَّطَ شَعَرُ رَأْسِهَا، فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَقَالَتْ: إِنَّ زَوْجَهَا أَمَرَنِي أَنْ أَصِلَ فِي شَعَرِهَا، فَقَالَ: لاَ، إِنَّهُ قَدْ لُعِنَ المُوصِلاَتُ அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவள் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, “என் […]

40) அந்தரங்கத்தை வெளிப்படுத்தக்கூடாது

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ، الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ، وَتُفْضِي إِلَيْهِ، ثُمَّ يَنْشُرُ سِرَّهَا ஒரு மனிதன் தன் மனைவியுடன் இணைகிறான். அவளும் அவனுடன் இணைகிறாள். பிறகு அவளுடைய இரகசியத்தை பரப்பி விடுகிறான். இவன் தான் மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மோசமான தகுதி உள்ளவன் என்று நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கூறினார்ள். அறிவிப்பவர் : அபூ […]

38) கணவனுக்காக அலங்கரித்தல்

أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ؟ الْمَرْأَةُ الصَّالِحَةُ، إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ، وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ، وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ ஒரு ஆண் சேமித்து வைக்கும் சொத்தில் சிறந்தது நல்ல பெண்ணாகும். கணவன் அவளைக் காணும் போது அவனுக்கு அவள் சந்தோஷத்தை ஏற்படுத்துவாள். கட்டளையிடும் போது அவனுக்குக் கட்டுப்படுவாள். கணவன் இல்லாத போது பாதுகாப்பாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) (அபூதாவூத்: […]

39) கணவன் அழைக்கும் போது மறுக்கக்கூடாது

இல்லற சுகத்துக்காகத் தான் மனிதர்கள் தருமணம் செய்கிறார்கள். ஆணுக்கு அந்தத் தேவை ஏற்படும் போது மனைவிக்கு அப்போது விருப்பமில்லாவிட்டாலும் கணவனுக்கு ஒத்துழைக்க வேண்டும். ஒத்துழைக்க மறுத்தால் கணவன் வழி தவறிச் செல்லவும், கள்ளத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அது காரணமாகி விடும். عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ، فَأَبَتْ أَنْ تَجِيءَ، لَعَنَتْهَا المَلاَئِكَةُ حَتَّى […]

37) மனைவியின் இல்லறக் கடமைகள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மகனும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) , (புகாரி: 5200) ➚ கணவனின் வீட்டுக்கும் பிள்ளைகளுக்கும் […]

35) வரதட்சணை கொடுக்கக் கூடாது

ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும்; பெண்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது என்று இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகிறது. இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமான தீர்ப்பாகும். இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இன்பம் அனுபவிக்கிறார்கள். இருவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் இன்பத்தை அனுபவிப்பதால் யாரும் யாருக்கும் எதனையும் கொடுக்கத் தேவையில்லை தான். ஆனாலும் இந்த இன்பத்தை அடைவதற்காக பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும். ஒரு […]

36) பெண் வீட்டு திருமண விருந்து

திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும். பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.

34) மஹரும் ஜீவனாம்சமும்

திருமண முறிவு ஏற்படும் போது பெண்களுக்கு ஜீவனாம்சம் என்ற தொகை வழங்கப்பட்டு வருவது பல சமுதாயங்களில் பரவலாக உள்ளது. இஸ்லாம் இத்தகைய ஜீவனாம்சத்தை வழங்கச் சொல்லவில்லை. மாறாக திருமணத்திற்கு முன்பே பெண்களுக்குக் கணிசமான ஒரு தொகையை வழங்கி விடுமாறு இஸ்லாம் கூறுகிறது. இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் […]

32) பொறுப்பாளர் மறுத்தால் சமுதாயத் தலைவர்கள் நடத்தி வைக்கலாம்.

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ، فَقَالَتْ: إِنَّهَا قَدْ وَهَبَتْ نَفْسَهَا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا لِي فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ، فَقَالَ رَجُلٌ: زَوِّجْنِيهَا، قَالَ: أَعْطِهَا ثَوْبًا، قَالَ: لاَ أَجِدُ، قَالَ: أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ، فَاعْتَلَّ […]

33) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுதல்

பெற்றோர்கள் முடிவு செய்யும் திருமணங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பது நபிவழியாகும். سنن النسائي – 3235 – عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: خَطَبْتُ امْرَأَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَظَرْتَ إِلَيْهَا؟ قُلْتُ: لَا، قَالَ: فَانْظُرْ إِلَيْهَا، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மனம் […]

31) கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை

பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த நாகரீக உலகில் கூட இந்த நிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப் பெண்களுக்குக் கிடைக்காத இந்த உரிமையை ஆறாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் வழங்கி விட்டது. தனக்குத் தகுதியான மணமகளைத் தேர்வு செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போலவே, தனது கணவனைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கும் உள்ளது. இஸ்லாமிய வரம்பை மீறாமல் பெண்கள் […]

29) ஆண்களுடன் தனித்திருக்கக்கூடாது

மேற்கண்ட (24:31➚) வசனத்தில் சொல்லப்பட்டவர்களைத் தவிர்த்து மற்றவர்களிடத்தில் பெண்கள் பர்தாவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் கணவனுடைய அண்ணன் தம்பிமார்களின் முன்பு சர்வசாதாரணமாக பர்தா இல்லாமல் வந்து செல்கிறார்கள். அவர்களுடன் தனித்திருப்பதை பெரிய குற்றமாக இவர்கள் கருதுவதில்லை. இது தவறாகும். عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: يَا رَسُولَ اللَّهِ، أَفَرَأَيْتَ الحَمْوَ؟ […]

30) திருமணத்திற்கு பெண்ணுடைய சம்மதம்

இல்லற வாழ்க்கை குறித்த சட்டங்கள் தனக்குப் பிடித்த கணவனை தன் விருப்பப்படி தேர்வு செய்வதற்கு பெண்ணிற்கு முழுமையாக இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلاَ تُنْكَحُ البِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ إِذْنُهَا؟ قَالَ: أَنْ تَسْكُتَ நபிகள் நாயகம் (ஸல்) […]

28) பெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா

பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு நிலவும் நேரத்தில் மட்டும் திருமணம் முடிக்கத் தடைசெய்யப்பட்ட இரத்தபந்த உறவினர் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம். இன்றைய காலத்தில் மக்களுடன் சேர்ந்து பயணம் செய்வதில் பாதுகாப்பு இருப்பதால் பெண்கள் மஹ்ரமான துணையில்லாமல் பயணம் செய்யலாம். ஒரு பெண் மட்டும் தனியாக ஆட்டோவில் செல்வது பாதுகாப்பற்ற நிலையாகும். ஆட்டோ ஓட்டுபவன் அந்தப் பெண்ணை கடத்திக் கொண்டு போக நினைத்தால் சுலபமாகச் செய்துவிட முடியும். மேலும் பெண் எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்நிய ஆணுடன் தனித்திருப்பது […]

26) பெண்கள் தனியாகப் பயணம் செய்தல்

கணவனோ, மஹ்ரமான உறவுகளோ இல்லாமல் பெண்கள் தனியாகப் பயணம் செய்யலாமா என்பது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. எவ்வளவு நாள் பயணத் தொலைவுக்கு பெண்கள் தனியாகப் பயணிக்கலாம் என்பது குறித்து ஹதீஸ்களில் நான்கு முரண்பட்ட அறிவிப்புகள் உள்ளன. عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ تُسَافِرِ المَرْأَةُ ثَلاَثَةَ أَيَّامٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ மஹ்ரம் துணை இல்லாமல் மூன்று […]

27) பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து உண்ணுதல் ஆண்களுக்கு பரிமாறுதல்

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ: لَمَّا عَرَّسَ أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ دَعَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ، فَمَا صَنَعَ لَهُمْ طَعَامًا وَلاَ قَرَّبَهُ إِلَيْهِمْ إِلَّا امْرَأَتُهُ أُمُّ أُسَيْدٍ، بَلَّتْ تَمَرَاتٍ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ مِنَ اللَّيْلِ فَلَمَّا فَرَغَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الطَّعَامِ […]

25) தலையை மறைக்க வேண்டுமா?

அன்னிய ஆடவர் முன்னால் முகம் கைகள் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் என்பதில் தலையை மறைப்பதும் அடங்கும். வீட்டில் தனித்திருக்கும் போதும், பெண்களுடன் மட்டும் இருக்கும் போதும், மஹ்ரமான உறவினருடன் இருக்கும் போதும் தலையை மறைக்க வேண்டியதில்லை. சாப்பிடும் போதும், குர்ஆன் ஓதும் போதும், பாங்கைக் கேட்கும் போதும் தலையை மறைப்பது அவசியம் என்ற நம்பிக்கை அதிமான மக்களிடம் உள்ளது. தொழும் போதும், அன்னிய ஆடவர் முன்னிலையிலும் தவிர மற்ற எந்தச் சந்தர்ப்பதிலும் தலையை மறைப்பது […]

23) பெண்களுக்கு ஹிஜாப் ஏன்?

முகம் கைகள் தவிர மற்ற பகுதிகளை அந்நிய ஆண்களை விட்டும் மறைக்க வேண்டும். அந்நிய ஆண்கள் என்றால் யார் என்பது வேறு ஆக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது. பெண்கள் தமது கைகள், முகம், பாதங்கள் ஆகியவற்றைத் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். இது ஹிஜாப் பர்தா, புர்கா, துப்பட்டி, துப்பட்டா என்று பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றது. ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் […]

24) பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்

தந்தை மகன் சகோதரன் தாயின் சகோதரன் தந்தையின் சகோதரன் சகோதரனின் மகன் சகோதரியின் மகன் பாலூட்டிய அன்னையின் கணவன் பாலூட்டிய அன்னையின் மகன் கணவனின் தந்தை கணவனின் புதல்வன் புதல்வியின் கணவன் சகோதரியின் கணவனை சகோதரியுடன் கணவன் வாழும் போது மணப்பது இவர்கள் தான் பெண்கள் மணக்கக் கூடாத ஆண்களாவர். இவர்கள் மஹ்ரம் எனக் குறிப்பிபிடப்படுகின்றனர். மேற்கண்ட உறவினர்கள் முன்னால் வீட்டுக்குள் அணியும் ஆடையுடன் இருக்கலாம். மேலும் பெண்கள் அலங்காரம் செய்து இருந்தால் அந்த அலங்காரத்தை கீழ்க்கண்டவர்கள் […]

22) முகத்தைத் திறக்காமல் உளூ செய்ய முடியாது.

ஒரு பெண் தன்னை நபிக்கு அன்பளிப்பாக வழங்க முன் வந்தார். நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் அவரை கூர்மையாகப் பார்த்தார்கள்.(புகாரி: 5030) ➚. அந்தப் பெண்ணை நான் மண்ந்து கொள்கிறேன் என்று ஒருவர் முன் வருகிறார். அப்பெண்ணின் முகம் மறைக்கப்பட்டு இருந்தால் யார் என்று தெரியாத ஒருவரை திருமணம் செய்ய முன்வர மாட்டார். முகத்தை மறைத்து இருந்தால் ஏறெடுத்து கூர்மையாகப் பார்ப்பதில் அர்த்தம் இல்லை. கப்ருக்கு அருகில் அழுது கொண்டிருந்த பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் […]

20) அழகுக்காக உறுப்புக்களில் மாற்றம் செய்யக் கூடாது

பெண்கள் அழகுக்காக அலங்காரம் செய்வதும் ஆபரணங்கள் அணிவதும் அனுமதிக்கப்பட்டது என்றாலும் உடல் உறுப்புக்களில் அமைப்பில் மாற்றம் செய்யக் கூடாது. மூக்கு பெரிதாக உள்ளது என்று கருதி அறுவை சிகிச்சை மூலம் சிறிதாக ஆக்குதல், உடல் உறுப்புக்களை பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்கும் அறுவை சிகிச்சைகள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அழகுக்காக பற்களைச் சிறிதாக்கும் வழக்கம் இருந்தது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்து தடை செய்தார்கள். இன்றைய நவீன காலத்தில் பெண்கள் […]

Next Page »