42) மார்க்கத்துக்கு மாற்றமான விஷயங்களில் கட்டுப்படுதல் இல்லை

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً مِنَ الأَنْصَارِ زَوَّجَتِ ابْنَتَهَا، فَتَمَعَّطَ شَعَرُ رَأْسِهَا، فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَقَالَتْ: إِنَّ زَوْجَهَا أَمَرَنِي أَنْ أَصِلَ فِي شَعَرِهَا، فَقَالَ: لاَ، إِنَّهُ قَدْ لُعِنَ المُوصِلاَتُ

அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவள் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, “என் கணவர், எனது தலையில் ஒட்டுமுடி வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார்” என்று கூறினாள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள், “வேண்டாம்! (ஒட்டுமுடி வைக்காதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ,

(புகாரி: 5205)

صحيح البخاري – 7257 – لاَ طَاعَةَ فِي مَعْصِيَةٍ، إِنَّمَا الطَّاعَةُ فِي المَعْرُوفِ

அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது. கீழ்ப்படிதல் என்பது நன்மையில் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி),(புகாரி: 7257)