கேள்வி: தீய எண்ணங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பதில்: மனிதர்கள் அனைவருக்கும் தீய எண்ணங்கள் ஏற்படத்தான் செய்யும். ஷைத்தான் பல வழிகளில் தீய எண்ணங்களை ஏற்படச் செய்வான். நல்லறங்களில் ஈடுபடும் போதும்கூட தீய எண்ணங்களை ஏற்படச் செய்வான். இது போன்ற நேரங்களில் ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும். என் அடியார்கள் நல்லதையே பேசவேண்டும் என அவர்களுக்குக் கூறுவீராக! அவர்களுக்கிடையே ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான். ஷைத்தான், மனிதனுக்குப் பகிரங்க எதிரியாக இருக்கிறான். […]