Author: Sumaya

கப்ரில் விசாரணை நடத்தும் முன்கர், நகீர் என்ற வானவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு பேரா? அல்லது மொத்த மனிதர்களுக்கும் முன்கர், நகீர் என்ற இரண்டு பேர் தானா?

கப்ரில் விசாரணை நடத்தும் முன்கர், நகீர் என்ற வானவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு பேரா? அல்லது மொத்த மனிதர்களுக்கும் முன்கர், நகீர் என்ற இரண்டு பேர் தானா? சுனாமி போன்ற சமயங்களில் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இருவர் மட்டும் எப்படி விசாரணை செய்ய முடியும்? பதில்: உங்களில் ஒருவர் (இறந்து) அடக்கம் செய்யப்பட்டு விட்டால், கருத்த நிறமும் நீல நிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) […]

ஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா?

கேள்வி: ஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா? பதில்: ஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மிகவும் பிரபலமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்விதச் சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற […]

இஸ்லாமிய அரசில் தான் ஜிஹாத் கடமையா?

கேள்வி: இஸ்லாமிய அரசு இருக்கும் போது தான் ஜிஹாத் நம் மீது கடமையா? – முஹம்மது மசூத் பதில்: உலகில் பெரும்பாலான முஸ்லிம்களாலும், முஸ்லிம் அல்லாதவர்களாலும் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட விசயங்களில் ஒன்று ஜிஹாத் என்பதாகும். ஜிஹாத் என்ற சொல்லுக்கு உழைத்தல், பாடுபடுதல், ஆய்வு செய்தல், அசத்தியத்தைத் தட்டிக் கேட்டல் எனப் பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஆயுதம் ஏந்திப் போர் செய்தல் ஆகும். இந்த அர்த்தத்தில் அமைந்த ஜிஹாத் ஒரு அரசாங்கத்தின் கீழ் தான் […]

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

கேள்வி: பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? “பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும்(அல்குர்ஆன்: 5:106)➚என்ற கட்டளையை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? இது அப்படியே பின்பற்றப்பட வேண்டிய ஒன்றா அல்லது மாற்றப்பட்ட சட்டமா?” என்று கேட்கிறார். – அபூ அப்துல்லாஹ் பதில்: இந்த வசனத்தை சற்று விரிவாக விளக்க வேண்டியுள்ளது. இந்த வசனம் விளக்குவது இதுதான்: நீங்கள் […]

முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்?

கேள்வி: முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்? முஸ்லிம்கள் தங்களது எதிரிகளை இனங்கண்டு கொள்ளாதது ஏன்? அனைத்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை இந்துக்கள் என நினைத்து அவர்கள் எதிரிகளாகக் கருதுவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளியாகும் தலித் வாய்ஸ் இதழில் ஒரு வாசகர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது? – சாஜிதா ஹுஸைன், சென்னை. பதில்: முஸ்லிம்கள் பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டால் தான் இஸ்லாத்தின் பால் மற்றவர்கள் கவனத்தைத் திருப்ப மாட்டார்கள் என்பதற்காக திட்டமிட்டு இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு […]

பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா?

கேள்வி: இறந்து போன கணவரது சொத்தில் (சுய சம்பாத்தியம்) பங்கு பிரிப்பது எவ்வாறு? பின்வரும் வாரிசுகள் உள்ளனர். ஒரு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் இரு மகன்களில் ஒருவர் 25 வருடங்களாக தனிக்குடித்தனம் இருக்கின்றார், தாயைக் கவனிப்பது இல்லை. சொத்து உண்டாக்கியதில் மகனின் பங்கு எதுவும் கிடையாது. மகள் தாயைப் பராமரித்து வருகின்றார். இந்த நிலையில் இறந்தவரின் வஸிய்யத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது? – பஷீர் அஹ்மத் பதில்: தனிக்குடித்தனம் இருப்பது சொத்துரிமையைப் பாதிக்காது, தாயைக் […]

கடனை திரும்பக் கொடுக்காமல் இழுத்தடிக்கலாமா?

கேள்வி: கடனை திரும்பக் கொடுக்காமல் இழுத்தடிக்கலாமா? பதில்: கடன் வாங்குவதில் இரண்டு நிலைகள் உள்ளன. எந்த வழியும் இல்லாமல் மிகவும் அவசியத் தேவைக்காக வாங்கும் கடன் ஒருவகை. இதைப் பெரும்பாலும் தவிர்க்க முடியாது. இப்படிப்பட்ட கடன் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். அவர்கள் கடன் கொடுத்தவரிடம் அவகாசம் கேட்பது தவறில்லை. வசதி படைத்தவர்களாக இருந்தால் தம்மிடம் உள்ள சொத்துக்கள் சிலவற்றை விற்று தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதுதான் சிறந்ததாகும். அப்படியே கடன் […]

வீட்டில் பெருநாள் தொழுகையை எப்படி தொழுவது?

கேள்வி: வீட்டில் பெருநாள் தொழுகையைஎப்படி தொழுவது? பதில்: பெருநாள் தொழுகையை ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு திடல்களில் நிறைவேற்றுவது நபிவழியாகும். தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் ஒன்று கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இம்மாதம் இறுதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சூழலில் மக்கள் ஒன்று கூடி திடலில் தொழமுடியாத சூழல் உள்ளதால் பெருநாள் தொழுகையை […]

மாதவிடாயின் போது உடலுறவு கொண்டால் பரிகாரம் என்ன?

கேள்வி: மாதவிடாயின் போது உடலுறவு கொண்டால் பரிகாரம் என்ன? – அப்துல்லாஹ் பதில்: மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இத்தடையை மீறியவர்கள் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும். இதுவே அந்தப் பாவத்துக்குரிய பரிகாரமாகும். سنن أبي داود حدَّثنا الحسنُ بن علي، حدثنا يزيدُ بن هارون، أخبرنا همام، حدَّثنا قتادةُ، عن قُدَامَةَ بن وَبرةَ العُجيفي عن سَمُرَةَ بن جُندب، […]

குழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா? ஏன்?

கேள்வி: ரமளானில் ஃபித்ரா வழங்குவதால் நோன்பாளியின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வசதியற்றவர்கள் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இது காரணமாக அமைந்துள்ளது. அதே சமயம், நோன்பு கடமையாகாத, எவ்வித பாவமும் செய்திராத குழந்தைகளுக்காகவும் ஃபித்ரா கடமையாக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன? இதில் இறைவன் நன்மையை நாடியிருப்பான் என்றாலும் இதற்கு மேலும் தெளிவு உள்ளதா? விளக்கவும். – அபூபிலால், தோஹா கத்தர். பதில்: سنن أبي داود حدَّثنا محمودُ بنُ خالدِ الدِّمشقيُّ وعبدُ الله بن عبدِ الرحمن السمرقندي، […]

பேராசை என்றால் என்ன?

கேள்வி: பேராசை என்றால் என்ன? பதில்: ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும். அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசைகூட பேராசையாக அமைந்து விடும். ஒரு விஷயத்தை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அதை வைத்து விரும்புவது ஆசையாகும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. ஆனால் முக்கியமான விஷயத்தைப் புறக்கணித்து விட்டு முக்கியம் குறைந்தவை மீது வைக்கும் ஆசையே […]

பேராசை கொள்ளாமல் இருக்க இஸ்லாம் கூறும் வழி என்ன?

கேள்வி: பேராசை கொள்ளாமல் இருக்க இஸ்லாம் கூறும் வழி என்ன? பதில்: மற்றவர்களை விட நமக்குச் செல்வம் குறைவாக இருந்தால் அல்லது அவ்வாறு கருதினால் அதன் காரணமாக நம்முடைய நிம்மதி பறிபோய் விடுகிறது. மன உளைச்சலுக்கு நாம் ஆளாகிறோம். இது போன்ற நிலை ஏற்படாமல் நாம் தவிர்ப்பதற்கும் இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது. இறைவன் நமக்கு எதைக் கொடுத்திருக்கிறானோ அதில் திருப்தி அடைய வேண்டும் என்பதுதான் அந்த வழி. நம்மைப் படைத்த இறைவன் நமது தேவைகளையும், நமது நிலைகளையும் […]

கடன் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

கேள்வி: கடன் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன? பதில்: கடன் விஷயத்தில் கண்டிப்பு கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِجَنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ: هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟ ، قَالُوا: لاَ، فَصَلَّى […]

கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்யலாமா?

கேள்வி: கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்யலாமா? பதில்: கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரை நெருக்கும்போது கடன் வாங்கியவர் பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை வத்தால் பரிந்துரை செய்து அவரது சிரமத்தைக் குறைப்பதற்கு உதவ வேண்டும். நபியவர்கள் தம்முடைய தோழர்களுக்காக இவ்வாறு பரிந்துரை செய்துள்ளார்கள். حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ كَعْبٍ، أَنَّهُ […]

நாணயம் மாற்றும் முறை என்றால் என்ன?

கேள்வி: நாணயம் மாற்றும் முறை என்றால் என்ன? பதில்: ஒரு நாணயத்துக்குப் பகரமாக இன்னொரு நாட்டு நாணயத்தை மாற்றும் போது எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கும். பத்து சவூதி ரியாலுக்கு நூறு இந்திய ரூபாய் என்று மாற்றினால் பத்துக்கு பதிலாக நூறு வாங்கியது போல் உள்ளது. இந்த ஏற்றத் தாழ்வு நாணயங்களுடைய மதிப்பு வேறுபாட்டினால் வந்ததா? வட்டி என்ற அடிப்படையில் வந்ததா என்று உறுதி செய்ய வேண்டும். இன்று பத்து ரியால் தருகிறேன்; அடுத்த மாதம் நூறு ரூபாய் […]

ஒத்திக்கு விடுதல் கூடுமா?

கேள்வி: ஒத்திக்கு விடுதல் கூடுமா? பதில்: சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது பெரும் தொகையை முன்பணமாகப் பெற்றுக் கொண்டு வீட்டை ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். வீட்டை ஒப்புக் கொண்டவர் பெரிய தொகையைக் கொடுத்துள்ளதால் வாடகை ஏதும் கொடுக்காமல் வீட்டில் குடியிருப்பார். குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின்னர் முன்பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டை ஒப்படைப்பார். இது ஒத்தி எனவும், சில பகுதிகளில் போகியம் எனவும் கூறப்படுகின்றது. கொடுத்த பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதற்காக வீட்டை அடைமானமாகப் […]

பிராவிடண்ட் ஃபண்ட் கூடுமா?

கேள்வி: பிராவிடண்ட் ஃபண்ட் கூடுமா? பதில்: அரசு அலுவலகங்களிலும், பெரிய நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் சிரமப்படக் கூடாது என்பதற்காக ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நமது நாட்டிலும் இன்னும் பல நாடுகளிலும் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பிடிக்கப்பட்ட தொகை ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதில் பிரச்சனை இல்லை. ஆனால் இவ்வாறு பிடிக்கப்படும் தொகைக்கு அவ்வப்போது வட்டியைக் கணக்கிட்டு ஊழியர்கள் கணக்கில் சேர்ப்பார்கள். ஊழியர்களின் சம்பளத்தில் […]

சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டுமா?

கேள்வி: சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும். – அப்துல் ரஹ்மான். صحيح مسلم وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- أَمَرَ بِلَعْقِ الأَصَابِعِ وَالصَّحْفَةِ وَقَالَ « إِنَّكُمْ لاَ تَدْرُونَ فِى أَيِّهِ الْبَرَكَةُ ». நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் […]

தீய எண்ணங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கேள்வி: தீய எண்ணங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பதில்: மனிதர்கள் அனைவருக்கும் தீய எண்ணங்கள் ஏற்படத்தான் செய்யும். ஷைத்தான் பல வழிகளில் தீய எண்ணங்களை ஏற்படச் செய்வான். நல்லறங்களில் ஈடுபடும் போதும்கூட தீய எண்ணங்களை ஏற்படச் செய்வான். இது போன்ற நேரங்களில் ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும். என் அடியார்கள் நல்லதையே பேசவேண்டும் என அவர்களுக்குக் கூறுவீராக! அவர்களுக்கிடையே ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான். ஷைத்தான், மனிதனுக்குப் பகிரங்க எதிரியாக இருக்கிறான். […]

பாங்கைப் பதிவு செய்து பாங்காகப் பயன்படுத்தலாமா?

கேள்வி: வீட்டில் நடைபெறும் ஜமாஅத் தொழுகைக்கு நாம் பாங்கு சொல்லாமல் மக்காவில் சொல்லப்பட்ட பாங்கை டவுன்லோட் செய்து அதை பிளே செய்யலாமா? – அஜி பதில்: இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை மனிதர்களுக்கு இடப்பட்டுள்ளது. பாங்கு சொல்வது ஓர் வணக்கமாகும். صحيح البخاري حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ الأَنْصَارِيِّ […]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்?

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்? பதில்: ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் இதில் விதி விலக்கு அளித்தது ஏன்? ஆசைகளைக் கட்டுப்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய இஸ்லாத்தின் தூதர் அவர்கள் அந்த ஆசைக்கு அதிகமாகப் பலியாகி விட்டாரே! காமஉணர்வு மிக்கவராக நபியவர்களை அடையாளம் இது காட்டுகிறதே? என்பது […]

பெண்கள் வெளியூர் பயணம் செய்யலாமா?

கேள்வி: பெண்கள் வெளியூர் பயணம் செய்யலாமா? கணவனுடனோ, அல்லது மஹ்ரமான உறவினர் துணையுடனோ இல்லாமல் பெண்கள் பயணம் செய்யலாமா? செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எது? பதில்: இதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. காரணம் இது குறித்த அறிவிப்புக்கள் முரண்பட்டவைகளாக உள்ளன. صحيح البخاري حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الحَنْظَلِيُّ، قَالَ: قُلْتُ لِأَبِي أُسَامَةَ: حَدَّثَكُمْ عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ […]

பிறமத வழிபாட்டுக்குக்கான பொருட்களை விற்கலாமா?

கேள்வி: கிறிஸ்மஸ் பண்டிகை நேரங்களில் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் (பலூன், கிறிஸ்மஸ் மரம், லைட் செட், இப்படியான பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாதா? – இம்தியாஸ் பதில்: விற்கலாம். பிறமதத்தினர் புனிதமாகக் கருதும் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ أَنَّ عَطَاءً كَتْب يَذْكُرُ أَنَّهُ سَمِعَ جَابِرَ […]

ஆடம்பர விருந்துக்குத் தடை இல்லை என்கிறார்கள். இது சரியா?

கேள்வி: ஆடம்பர விருந்துக்குத் தடை இல்லை என்கிறார்கள். இது சரியா? இலங்கையைச் சேர்ந்த மார்க்க அறிஞர் திருமணம் தொடர்பான TNTJ, SLTJ யின் நிலைப்பாடு கொஞ்சம் வரம்பு மீறி எடுத்திருப்பதாகச் சொல்கிறார். அதற்கான ஆதாரத்தையும் இவ்வாறு தெரிவித்தார். திருமணம் இயன்றளவு செலவு குறைத்து செய்ய வேண்டும்; அதில் தான் பரகத் இருக்கிறது என்ற கருத்திலமைந்த ஹதீஸ் பலவீனமானது. (2) ரசூல் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது யார் யாரையெல்லாம் காண்கிறீர்களோ அவர்கள் எல்லோரையும் […]

குர்ஆன் வசனங்களை ஓதியப் பிறகு ஸதக்கல்லாஹுல் அளீம் என்று சொல்வது நபி வழியா?

கேள்வி :குர்ஆன் வசனங்களை ஓதியப் பிறகு ஸதக்கல்லாஹுல் அளீம் என்று சொல்வது நபி வழியா? பதில்: திருக்குர்ஆனை ஓதி முடிக்கும் போது ஸதக்கல்லாஹுல் அளீம் (மகத்துவ மிக்கவன் உண்மையை கூறினான்) என்று சொல்லும் வழக்கம் பரவலாக காணப்படுகிறது. திருக்குர்ஆன் வசனங்களை ஓதி முடித்தவுடன் இவ்வாறு கூற வேண்டுமென்று திருக்குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ இடம்பெறவில்லை. எனவே இவ்வாறு சொல்வது நபிவழி அல்ல. இறைக் கருத்தை வலியுறுத்தி பேச வேண்டிய இடங்களில் அவசியம் ஏற்பட்டால் ஸதக்கல்லாஹுல் அளீம் “ மகத்துமிக்க […]

மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு எனது சொத்தில் பங்கு உண்டா?

கேள்வி: மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு எனது சொத்தில் பங்கு உண்டா? பதில்: “(சொத்தில்) இரண்டு பெண்களின் பங்கைப் போன்றது ஓர் ஆணுக்குரியது. பெண் மக்களாகவே (இருவர் அல்லது) இருவருக்கு மேல் இருந்தால் இறந்தவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்குரியது. ஒரேயொரு மகள் மட்டும் இருந்தால் அவளுக்குப் பாதி உண்டு” என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான். (அல்குர்ஆன்: 4:11)➚ இறைவன் பங்கு தொடர்பாக குறிப்பிடும் போது உங்கள் பிள்ளைகள் […]

மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மென்பொருள் செய்து கொடுக்கலாமா?

கேள்வி: மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மென்பொருள் செய்து கொடுக்கலாமா? பதில்: மென்பொருள் தயாரிப்பு என்பது தற்போதைய நவீன காலத்தில் உள்ள ஒரு தொழில் முறையாகும். இது தொடர்பான தடையோ அனுமதியோ மார்க்கத்தில் நேரடியாக காண முடியாது என்றாலும் மார்க்கத்தில் சொல்லப்பட்ட அடிப்படையை வைத்து அதில் தடுக்கப்பட்ட அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதை விட்டு விலக வேண்டும். இன்சூரன்ஸ் என்பது பொதுவாகவே தடைசெய்யப்பட்ட வகையில் வரக்கூடிய விஷயம் அல்ல. அதில் மார்க்கம் தடுத்த அம்சம் உள்ளவையும் இருக்கின்றன. மார்க்கம் […]

பள்ளிவாசலுக்கென வசூல் செய்துவிட்டு பள்ளிவாசல் இடத்தின் ஒரு பகுதியில் அலுவலகம் அமைப்பது சரியா?

கேள்வி : பள்ளிவாசலுக்கென வசூல் செய்துவிட்டு பள்ளிவாசல் இடத்தின் ஒரு பகுதியில் அலுவலகம் அமைப்பது சரியா? பதில்: எந்த நோகத்திற்காக வசூலிக்கப்படுகிறதோ அதே நோக்கத்திற்குதான் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பள்ளிவாசலுக்காக வசூல் செய்ய பணத்தில் பள்ளிவாலும் கட்டி அந்த பணத்தில் அலுவலகம் கட்டினால் அந்த அலுவலகம் எந்த நோக்கத்திற்காக கட்டப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு கூடும். கூடாது என்று கூறமுடியும். பள்ளிவாசல் நிர்வாகத்திற்காக அந்த கட்டடம் கட்டப்பட்டால் அது தவறாகாது. ஏனெனில் பள்ளிவாசலின் […]

வஸீலா என்பது சாதனமா? உயர் பதவியா?

கேள்வி : வஸீலா என்பது சாதனமா? உயர் பதவியா?இறை நெருக்கத்தை ஏற்படுத்தும் நல்லறங்கள், நல்லவார்த்தைகள் ஆகியவற்றுக்கு வஸீலா என்று கூறப்படும். அது போன்று மறுமைநாளில் இறைவன் தன்னுடைய அடியார்களில் மிகவும் நெருக்கமான ஒருவருக்கு வழங்கும் பதவிக்கும் வஸீலா என்று கூறப்படும். பதில்: பின்வரும் இறைவசனத்தில் இறை நெருக்கத்தை ஏற்படுத்தும் நல்லறங்களைச் செய்வது வஸீலா என்று கூறப்பட்டுள்ளது. يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (سورة المائدة) […]

தாய்மாமாவின் மச்சினிச்சியை திருமணம் செய்யலாமா?

பதில்: தாய்மாமா என்பவர் தாயின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.தாய்மாமாவின் மச்சினிச்சி என்பவர் தாய்மாமாவுடைய மனைவியின் தங்கை ஆவார். ஒருவருடைய தாயின் உடன் பிறந்த சகோதரர் ஒரு பெண்ணை திருமணம் செய்த காரணத்தினால் அப்பெண்ணின் சகோதரரி அவருக்கு (அதாவது மருமகனுக்கு) திருமணம் செய்வதற்கு தடுக்கப்பட்டவராகமாட்டார் இவர்கள் அன்னியப் பெண்களே ஆவர். திருமணம் செய்வதற்கு மார்க்கம் தடுத்துள்ள பெண்களின் பட்டியலில் இவர்கள் வரமாட்டார்கள். ஆனால் அப்பெண்கள் திருமணம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட உறவுகளாகவோ அல்லது பால்குடிச் சகோதரிகளாக இருந்தால் திருமணம் செய்வது […]

விவாகரத்துக்குப் பின் கணவன் வீட்டில் மனைவி இத்தா இருக்கலாமா ?

கேள்வி: விவாகரத்துக்குப் பின் கணவன் வீட்டில் மனைவி இத்தா இருக்கலாமா? பதில்: விவாகரத்து செய்தவுடன் மூன்று மாத காலம் மனைவி மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம் இத்தா எனப்படும். இப்படி தலாக் சொன்னபின் மனைவி, கணவனின் வீட்டில் தான் இருக்க வேண்டும். அவளை கணவன் வெளியேற்றக் கூடாது. அவளும் வெளியேறக் கூடாது. நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான […]

கருவறையில் செலுத்தாமல் விந்தை வெளியே விடுவது சிசுக்கொலையாகுமா?

கேள்வி: ஆண்கள் உச்ச நிலை அடையும் போது விந்தை கருவறைக்குள் செலுத்தாமல் வெளியே விடுவது சிசுக்கொலையாகாது என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் கூறி வருகின்றனர். இதற்கு மாற்றமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளதே? صحيح مسلم حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ وَمُحَمَّدُ بْنُ أَبِى عُمَرَ قَالاَ حَدَّثَنَا الْمُقْرِئُ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِى أَيُّوبَ حَدَّثَنِى أَبُو الأَسْوَدِ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ أُخْتِ عُكَّاشَةَ […]

தம்பதியர் தனிமையில் நிர்வாணமாக இருக்கலாமா?

கேள்வி: நானும், எனது மனைவியும் வீட்டில் தனியாக இருக்கும்போது நிர்வாணமாக இருப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறா? விளக்கம் தரவும். – சவுதி அரேபியாவிலிருந்து வாசகர் பதில்: நிர்வாணமாக இருத்தல் என்பது இரு வகைகளில் உள்ளது. நிர்வாணம் அவசியம் என்பதற்காக நிர்வாணமாக இருப்பது ஒரு வகை. அவசியமில்லாமல் நிர்வாணமாக இருப்பது இன்னொரு வகை. அவசியமான நிர்வாணத்துக்கு உள்ள அனுமதியை அவசியமில்லாத போது பயன்படுத்தக் கூடாது. மலஜலம் கழிக்கும் போது நிர்வாணம் அனுமதிக்கப்படுவதால் எல்லா நேரத்திலும் […]

மனைவியிடம் பாலருந்துவதன் சட்டம் என்ன?

கேள்வி: மனைவியிடம் பாலருந்துவதன் சட்டம் என்ன? – ரிபாஸ் பதில்: தாம்பத்திய உறவின் போது சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. மனைவியின் பின் துவாரத்தின் வழியாக புணருவதையும், மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதையும் மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! […]

காபாவுக்கு தங்கத் திரை ஏன்?

கேள்வி: கஅபாவில் தொங்கும் திரை ஏன்? அதில் தங்க வேலைப்பாடுகள் ஏன்? கஅபாவை ஏன் சுற்றி வர வேண்டும்? கஅபா தான் உலகின் முதல் பள்ளியா? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர். இதற்கு எவ்வாறு பதில் கொடுப்பது? – ஹாஜா முஹ்யித்தீன் பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்கு முன்பிருந்தே கஅபா ஆலயம் இருந்து வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது பாழடைந்திருந்த கஅபாவை அவர்களின் காலத்து மக்கள் மறு […]

பள்ளிவாசலுக்காக முஸ்லிமல்லாதவரிடம் நன்கொடை பெறலாமா?

கேள்வி: பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு மாற்று மதத்தவர்களிடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொள்ளலாமா? பதில்: பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடம் நிதி பெற்றுக் கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை. صحيح البخاري حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الجَدْرِ أَمِنَ البَيْتِ هُوَ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: فَمَا لَهُمْ لَمْ […]

வேலை பார்க்கும் இடத்தில் தொழ முடியாவிட்டால்?

கேள்வி: எங்கள் வீட்டில் அனைவரும் கம்பெனியில் வேலை பார்க்கிறோம். அங்கு எங்களால் தொழ முடியவில்லை. ஃபஜ்ரும், இஷாவும் தொழுது கொள்கிறோம். இடையில் உள்ள மூன்று தொழுகைகளையும் களாச் செய்து தொழலாமா? – எஸ். ராஜா முஹம்மது, எஸ். ஷேக் முஹம்மது, கோடம்பாக்கம். பதில்: நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன்: 4:103)➚ இந்த வசனத்தின் அடிப்படையில் தொழுகைகளை அந்தந்த நேரத்தில் தான் தொழுதாக வேண்டும். ஒரு நேரத் தொழுகையை அதன் நேரம் முடிந்த […]

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா?

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைக் கூற கேட்கும் போது முழு ஸலவாத் கூற வேண்டுமா? அல்லது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் என்று கூறினால் போதுமா? விளக்கம் தரவும். – அப்துல் ஸலாம். பதில்: தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தான் ஓத வேண்டும். மற்ற நேரங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ அலைஹிஸ் ஸலா(த்)து வஸ்ஸலாம் என்றோ கூறிக் கொள்ளலாம். பின்வரும் […]

மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போது அல்லாஹு அக்பர் என்று கூறலாமா?

கேள்வி: மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போது அல்லாஹு அக்பர் என்று கூறலாமா? பெரு நாள் தினத்தில் சொல்லும் தக்பீரை சப்தமாகச் சொல்ல்லாமா? பதில்: மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும், உணர்ச்சியை வெளிப்படுத்தும் போதும் அல்லாஹு அகபர் என்று சப்தமாகக் கூறலாம். صحيح البخاري حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ […]

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?

கேள்வி: கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையோர் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்களே? அதன் நிலை என்ன? – இப்னு ஜமீலா, முகவை. பதில்: கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையவர்கள் சில ஹதீஸ்களை எடுத்துக்காட்டி நியாயப்படுத்துகின்றனர். ஆனால் அவை சரியான ஹதீஸ்கள் அல்ல. அது பற்றி விபரமாகப் பார்ப்போம். أخبرنا الشيخ أبو بكر بن إسحاق أنا بشر بن موسى ثنا أبو عبد الرحمن المقري ثنا ابن لهيعة: قال: […]

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா?

கேள்வி: எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. எனவே நான் அதற்கான ஸ்ப்ரே மருந்தை தினமும் உபயோகிக்கிறேன். இந்த ஸ்ப்ரே நேராக நுரையீரலுக்குச் செல்லும். நோன்பு இருக்கும் போது இதை நான் உபயோகிக்கலாமா? இதனால் நோன்பு முறிந்துவிடுமா? – சாதிக் பாட்சா, சவூதி அரேபியா. பதில்: நோன்பாளிகள் சுபுஹ் முதல் மக்ரிப் வரை உண்ணாமலும்,, பருகாமலும் இல்லறத்தில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும். حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ […]

ஷஃபான் 15 நோன்புக்கு ஆதாரம் உண்டா?

கேள்வி: ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் நோன்பு நோற்க ஆதாரம் இல்லை என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் இலங்கையில் உள்ள ஒரு இயக்கம் ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்பது சுன்னத் என்று கூறி ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் பிரசுரத்தை இத்துடன் இணைத்துள்ளேன். அது சரியான செய்தியா? பதில்: ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்கச் சொல்லும் ஒரு ஹதீஸும் […]

பள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யலாமா?

கேள்வி: பள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யலாமா? பதில்: செய்யாலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் என்பவை தொழுகைக்கு மட்டுமல்லாமல் பல்வேறு நற்பணிகளுக்கும் உரிய இடமாகத் திகழ்ந்துள்ளன. நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்துதான் நபித்தோழர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். போர்ப்படைகளைத் தயார்செய்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் சமுதாயம் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளைச் செய்வதற்குத் தலைமையகமாக இருந்தது பள்ளிவாசல்தான். பள்ளிவாசலில் தொழுகைக்காவோ, அல்லது வேறு நற்காரியங்களுக்காகவோ ஒன்று கூடுவோர் அங்கு உணவைத் தயார் […]

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?

கேள்வி: நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா? நோன்பாளிகள் நகம் மற்றும் முடி வெட்டலாமா? குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கிக் குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கிக் குளிக்கலாமா? பற்பசைகள் பயன்படுத்தலாமா? சோப்பு மற்றும் நறுமணப் பொருட்களை உபயோகிக்கலாமா? வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடுமா? – கடையநல்லூர் இஸ்மாயில். பதில்: என்பன போன்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்படுகின்றன. இவை யாவும் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் ஏற்படும் கேள்விகளாகும். உண்ணாமலும், பருகாமலும், இல்லறத்தில் ஈடுபடாமலும் இருப்பது தான் நோன்பாகும். இவை தவிர உள்ள […]

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

கேள்வி: ஆறு நோன்பு ஆதாரமற்றதா? பதில்: ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு வைப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாகச் சிலர் ஆறு நோன்பு குறித்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிட்டு சில வாதங்களையும் முன்வைக்கிறார்கள். அந்த ஹதீஸ் இதுதான்: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ […]

ஆஷூரா நோன்பு எப்போது எத்தனை நாட்கள் நோற்க வேண்டும்?

கேள்வி: ஆஷூரா நோன்பு எப்போது எத்தனை நாட்கள் நோற்க வேண்டும்? – ரிஜ்வியா பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள். حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ هُوَ ابْنُ المُبَارَكِ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي […]

ஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா?

கேள்வி: ஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா?ஆனால் உண்மை என்ன தெரியுமா? பதில்: இப்படி நம்மைப் பார்த்து அவதூறு பரப்புபவர்கள் தான் உண்மையில் ஹதீஸ் மறுப்பாளர்களாக உள்ளார்கள். ஸஹருக்கு பாங்கு சொல்வது நபி வழி என்பதை நாம் அறிவோம். ஸஹருக்கு பாங்கு சொல்வோம்; நபி வழியைப் பேணுவோம்! حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ […]

வியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா?

கேள்வி: வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய இரு நாட்கள் நோன்பு வைப்பது நபிவழி. வியாழக்கிழமை மட்டும் நோன்பு வைக்கலாமா? அல்லது திங்கள், வியாழன் ஆகிய இரண்டு நாட்களிலும் தான் நோன்பு நோற்க வேண்டுமா? – ராஜா முஹம்மத் பதில்: வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும். سنن الترمذي حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عَمْرُو بْنُ عَلِيٍّ الفَلَّاسُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ […]

மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன?

கேள்வி: மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன? – ஃபாத்திமா பதில்: சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப்போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகபட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப்போக்கு ஏற்படும். அதற்கு இஸ்லாம் கூறும் தீர்வு இதுதான். حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ […]

கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா?

கேள்வி: கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா? விடுபட்ட நோன்பை அவர்கள் எப்போது வைப்பது? பதில்: கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பை விடுவதற்கு சலுகை உண்டு. குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர். سنن النسائي أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ وُهَيْبِ بْنِ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ الْقُشَيْرِيُّ، […]

Next Page »