01) முன்னுரை

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் ஜீவராசிகள்

மனிதர்கள் தங்களுக்குள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பொதுவாகப் பேசப்பட்டாலும், மனிதர்களைத் தவிர்த்து இந்த உலகில் அல்லாஹ் படைத்துள்ள எண்ணற்ற பிற உயிரினங்களோடு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், அவற்றுக்கும் நமக்குமான உறவுகள் என்ன என்பது குறித்துப் பெரும்பாலான முஸ்லிம்கள் அறியாமல் இருக்கிறார்கள்.

உயிரினங்களைப் பொறுத்தவரை பலவிதமான மார்க்கச் சட்டங்கள் உள்ளன. ஓர் உயிரினத்தை உண்ணலாமா கூடாதா, அதன் மீது ஏறிச் சவாரி செய்யலாமா கூடாதா, செல்லப் பிராணிகளாக எவற்றை வளர்க்கலாம், நாய், பூனை, கழுதை போன்ற பிராணிகளோடு மனிதனுக்குள்ள தொடர்பு என்ன, ஒருவரது கால்நடை பிறரது விளைநிலத்தைப் பாழாக்கினாலோ அல்லது பிறரைக் காயப்படுத்தினாலோ என்ன செய்வது போன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாம் தெளிவான தீர்வுகளை வழங்கியுள்ளது. உயிரினங்கள் குறித்த இச்சட்டங்களைப் பேணத் தவறினால் நாம் இறைவனிடம் குற்றவாளிகளாக நிற்க நேரிடும்.