01) முன்னுரை

தனிமனித வாழ்வில் இஸ்லாம்

பிறப்பு முதல் இறப்பு வரை தனி மனித வாழ்வில் இஸ்லாம்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சி வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி இரண்டு முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது. முதலாவதாக, ஒரு மனிதன் காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரையிலான அன்றாட 24 மணி நேர வாழ்க்கையை இஸ்லாமிய வழிகாட்டலின்படி எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது. இரண்டாவதாக, ஒரு மனிதன் பிறந்து குழந்தையாக இருப்பது முதல் வாலிபம், திருமணம், மரணம் என அவன் கடந்து செல்லும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனுக்குரிய கடமைகள் என்ன, அவனைச் சார்ந்தவர்களுக்குரிய பொறுப்புகள் என்ன, அச்சூழல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது. இவ்விரு பகுதிகளும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் விளக்கப்படவுள்ளன.