Tamil Bayan Points

Category: சந்தர்ப்ப உரைகள்

b109

பாவியாக்கும் பராஅத் இரவு

பாவியாக்கும் பராஅத் இரவு சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும். இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள். மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே […]

ஹஜ்ஜின் சிறப்புகள்

அமல்களில் சிறந்தது 26- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، قَالاَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ قَالَ : حَدَّثَنَا ابْنُ شِهَابٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : الْجِهَادُ […]

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா

முன்னுரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்பதாகக் கூறிக் கொண்டு மீலாது விழா மார்க்கம் அறியாதவர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர்களை மதிப்பது எப்படி என்பதில் தான் அதிகமான மக்கள் அறியாமையில் உள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கம் என்ற பெய்ரால் எவற்றை நமக்கு போதித்தார்களோ அதன்படி செயல்படுவதுதான் அவர்களை மதிப்பதாகும். அவர்கள் கற்பிக்காமல் நம்மைப் போல் வஹீ வராத […]

கிறுக்கனாக்கும் கிரிக்கெட் விளையாட்டு!

முன்னுரை பதினோரு முட்டாள்கள் விளையாடுகின்றார்கள், அதை பதினோராயிரம் முட்டாள்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று பெர்னாட்ஷா சொன்னதாகக் கூறுவார்கள். இன்று பெர்னாட்ஷா உயிருடன் இருந்தால் பதினோரு முட்டாள்கள் விளையாடுகின்றார்கள். அதைப் பல கோடி முட்டாள்கள் பார்க்கின்றார்கள் என்று கூறியிருப்பார். அந்த அளவுக்கு இன்று கிரிக்கெட் வெறி தலை விரித்தாடுகின்றது. பாருங்களேன்! பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியாவுக்கு கிரிக்கெட் பார்ப்பதற்காக வருகின்றார் என்றால் இந்தக் கிரிக்கெட் மோகத்தை என்னவென்று சொல்வது? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லைப் பிரச்சனையிலிருந்து எத்தனையோ […]

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவிப்பதை பார்க்கிறோம். எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் […]

விடை பெற்ற ரமளான் விடுக்கும் செய்திகள்

விடை பெற்ற ரமளான் விடுக்கும் செய்திகள் எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!  விடை பெற்ற இந்த ரமளான் நமக்கு விடுக்கும் சில செய்திகளை இன்றைய உரையில் பார்க்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்கிறோம். அந்த நோன்பு நம்மிடத்தில் ஏற்படுத்திய, இனி ஏற்படகிற மாற்றங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்! தொழுகை இனி எப்படி இருக்கும்? 657- حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ قَالَ : حَدَّثَنَا أَبِي قَالَ : حَدَّثَنَا الأَعْمَشُ […]

நோன்பின் மாண்புகள்

நோன்பின் மாண்புகள் கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏ நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:184) நம்மிடம் இறையச்சத்தை ஏற்படுத்துவற்காக நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இந்த நோன்பின் […]

நோன்பின் சட்டங்கள்

அருள்மிகு ரமலான் பி.எம். முஹம்மது அலீ ரஹ்மானி வந்துவிட்டது அருள் மிக்க ரமலான்! “ரம்மியமான ரமலான் வராதா? அல்லாஹ்வின் அருள் மிக்க பாக்கியம் கிடைக்காதா?” என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பலர் “ஏன்டா ரமலான் வருகிறது?” என்று எண்ணிப் புலம்பித் தவிக்கின்றனர். காரணம் என்னவென்றால், தன் பிள்ளைக்கு இதுதான் தலை நோன்பு! எனவே புது மருமகனுக்குச் சீர் செய்ய வேண்டுமே! இதுவே பெரும்பான்மை யான, பெண்ணைப் பெற்ற முஸ்லிம்களின் நிலை. இது […]

இரவுத் தொழுகையின் சிறப்புகள்

இரவுத் தொழுகை புனித மிக்க ரமளானில் அல்லாஹ் தன் அடியார்களுக்கு அபரிமிதமான நன்மைகளை அளிக்கின்றான். இம்மாதத்தின் பகல் காலங்களில் நோன்பு நோற்பதற்கும் இரவில் நின்று வணங்குவதற்கும் மகத்தான கூலிகளை வழங்குகின்றான். ரமளானில் இரவு நேரத்தில் முந்திய பகுதிகளில் தொழும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது. பிந்திய இரவில் தொழுவது தான் மிகச் சிறப்பான வணக்கமாகும். எனவே பிந்திய நேரங்களில் தொழுவதன் சிறப்பைத் தெரிந்து கொண்டு அதைச் செயல்படுத்தி,அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக! ரமளான் மாதத்தில் விடாது கடைப்பிடிக்கும் இந்த […]

தொழுகையை பேணுவோம்!

தொழுகையை பேணுவோம்! இஸ்லாம் என்றாலே தொழுகைதான் பல்வேறு கடவுள் நம்பிக்கைகள் கொண்ட சமுதாயங்கள் உலகில் உள்ளன. அதில் இறைவன் ஒருவன் தான். என்று அவனை மட்டுமே வணங்கி, இணைவைக்காமல் வாழ்ந்து சொர்க்கத்தை பெற வேண்டும் என்ற ஆசையில் வாழும் சமுதாயம், இந்த முஸ்லிம் சமுதாயம். வந்தே மாதரம் என்று கூறினால் மண்ணை வணங்குவதாக ஆகிவிடும். என் உயிரே போனாலும் அப்படி கூற மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கும் சமுதாயம், இந்த முஸ்லிம் சமுதாயம். கடவுடள் கொள்கையில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாத […]

சுன்னத்தான நோன்புகள்

சுன்னத்தான நோன்புகள் 2:185 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185) என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு ரமளான் மாதம் […]

நோன்பு பெருநாள் உரை – 1

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! ஒருமாத காலம் நோன்பை இறைவனுடைய திருப்தியை நாடி நோற்று, அவனுடைய பரிசை எதிர்பார்த்து நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். இந்த நேரத்தில் நாம் நினைவில் வைக்க வேண்டிய சில செய்திகளை இந்த பெருநாள் உரையிலே நாம் பார்க்க இருக்கிறோம். ஏனென்றால் பண்டிக்கை என்றாலே பலருக்கு புதிய ஆடையை அணியவேண்டும், சுவையான உணவு சாப்பிடவேண்டும், எங்கேயாவது ஊர் சுற்றவேண்டும், இன்னும் சிலர் நண்பர்களோடு சினிமா தியேட்டருக்கு போகவேண்டும், என்று இந்த பெருநாளை கழிப்பதை பார்க்கிறொம். இறையச்சத்தை […]

« Previous Page