Tamil Bayan Points

33) 40வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

40வது வசனம்

40. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.

(அல்குர்ஆன் : 36 : 40.)

காலம் கடந்து நிற்கும் வேதம்

இவ்வசனத்தில் மிகப் பெரும் பேருண்மை உள்ளது. சூரியன் சந்திரனை அடைய முடியாது என்பதை அதன் ஓட்டத்தை அறிந்த விஞ்ஞானியால் மட்டும்தான் சொல்ல சொல்ல முடியும். இதை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது. இதன் மூலம் காலம் கடந்து பேசும் திறனை குர்ஆன் பெற்றுள்ளது என்பதை அறியலாம்.

சாதாரண மனிதனின் கூற்றாக குர்ஆன் இருந்தால் இத்திறன் கிடைக்காது. ஏனெனில் மனிதர்கள் எழுதிய சட்ட புத்தகங்கள் போன்றவை பல்வேறு மாறுதலுக்கு உட்படுகிறது. பல காலத்திற்கு அது நீடிக்காது.

திருக்குறள் அதன் மொழி நடைக்காக சிறப்பித்து கூறப்பட்டது. எனினும் தற்போதைய நவீன காலத்தில் அதன் கருத்துக்கள் பல இடங்களில் முரண்படுகிறது. சந்திர கிரகணத்தை பற்றி திருக்குறளின் 1146 வது குறளில் ‘கண்டது மன்னும் ஒருநாள் அலர் மன்னும் திங்களை பாம்பு கொண்டற்று.” என்று கூறுகிறார்.

காதலன் காதலியை ஒருநாள் சந்திப்பது பாம்பு சந்திரனை விழுங்குவதால் ஏற்படும் சந்திர கிரகணத்தை போன்று மிக நீண்ட நாள் நீடிக்கும்” என்பது இதன் பொருளாகும்.

இதில் சந்திரனை பாம்பு விழுங்குவதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்று கூறுகிறார். ஏனெனில் அவருடைய காலத்தில் அவ்வாறுதான் நம்பப் பட்டது. இந்து மக்களின் நம்பிக்கை படி சிவனின் கழுத்தில் உள்ள பாம்பு சந்திரனை விழுங்கிவிட்டால் சந்திர கிரகணம் ஏற்படும் என்று நம்பப்பட்டது. ஆனால் இன்றைக்கு அறிவியல் ரீதியாக வேறு காரணம் கூறப்படுகிறது. திருக்குறள் கூறும் காரணம் உண்மையல்ல என்று நிரூபிக்கப் பட்டுவிட்டது.

குர்ஆன் இது போன்று இல்லாமல் இல்லாமல் காலம் கடந்து நிற்கிறது. ஒவ்வொரு கோள்களும் தன் பாதையில் நீந்திக் கொண்டிருக்கிறது என்று சரியான கருத்தை கூறி தன்னைத் தானே இறைவேதம் என நிரூபிக்கிறது.

மதரஸாக்களில் தவறான பாடங்கள்

காலம் கடந்து நிற்கின்ற திருக்குர்ஆனை பெற்ற முஸ்லிம் சமுதாயத்தின் சில மதரஸாக்களில் விஞ்ஞானம் பற்றிய தவறான பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன.

உதாரணமாக மத்ஹபுகளில் பல் துலக்கும் குச்சியை கீழே வைப்பதை பற்றி குர்ஆன் ஹதீஸில் இல்லாத, அறிவுக்கு பொருந்ததாத பல வழிமுறைகள் கூறப்படும். குச்சியை நிற்க வைத்தால் அதில் ஷைத்தான் ஏறிக்கொள்வான். எனவே படுக்க வைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இது தவறாகும். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் மனிதனும் ஆடும் உடலுறவு கொண்டு மனிதனை பிள்ளையாக பெற்றெடுத்து, அவர் மார்க்கத்தை கற்று ஹஜ் பெருநாளில் தொழ வைத்தால், தொழுகை முடித்த பிறகு அவரையே குர்பானி கொடுக்கலாம் என்றும் எழுதி வைத்துள்ளனர். இது நடப்பதற்கு சாத்தியமுள்ளதா? என்பதை கூட யோசிக்காமல் மடமைத்தனத்தின் வெளிப்பாடாகத்தான் இவ்வாறு எழுதுகிறார்கள்.

காலம் கடந்த குர்ஆனை இறைவேதமாக பெற்ற ஒரு சமுதாயம் இது போன்ற மடமைத் தனங்களில் ஈடுபடுவது வேதனைக்குரியது.