ஒரு நாள் என்பது பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம். இது பொதுவாக 24 மணிநேரம் என்று நாம் அறிவோம். ஆனால், பூமி சரியாக 24 மணிநேரத்தில் சுற்றுவதில்லை. ஒவ்வொரு நாளும் பூமி தன்னைத்தானே சுற்றி முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் சில மில்லி வினாடிகள் (millisecond) மாறுபடும். அதாவது, 24 மணிநேரத்தைவிடச் சில மில்லி வினாடிகள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம். விஞ்ஞானிகள் 1960ஆம் ஆண்டு முதல் பூமியின் சுழற்சி வேகத்தைக் கணக்கிட்டு வருகிறார்கள். […]