நிலத்தடி நீர் குறைவதால் பூமியின் அச்சு சாய்வு
பூமியிலிருந்து நிலத்தடி நீரை உறிஞ்சுவது பூமியின் சுழற்சி அச்சின் சாய்வை மாற்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
1993 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மனிதர்கள் சுமார் 2,150 ஜிகாடன் (gigaton) நிலத்தடி நீரை வெளியேற்றியதாக ஒரு ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இது 2.15 டிரில்லியன் டன் நீருக்குச் சமம்.
இந்தக் காலகட்டத்தில், பூமியின் துருவமானது கிழக்கு நோக்கி சுமார் 80 சென்டிமீட்டர் (31.5 அங்குலம்) நகர்ந்துள்ளது என்று சியோல் தேசியப் பல்கலைக்கழக (Seoul National University) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பனிக்கட்டிகள் உருகுவது போன்ற இயற்கையான காரணங்களை விட, நிலத்தடி நீர் குறைவுதான் பூமியின் அச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நிலத்தடி நீர் நீர்நிலைகளில் இருந்து பெருங்கடல்களுக்கு மறுபகிர்வு செய்யப்படுவது இந்த அச்சு இயக்கத்தைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாகும்.
பூமியின் சாய்வில் ஏற்படும் இத்தகைய மாற்றம் வானிலை மற்றும் பருவங்களை உடனடியாகப் பாதிக்காது. ஆனால், தொடர்ந்து நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால் நீண்ட கால காலநிலை தாக்கங்களை அது ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இறைவன் படைத்த இந்த பூமியின் சமநிலையை மனிதர்களின் செயல்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. நாம் இயற்கை வளங்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
ஆதாரம்: புதிய தலைமுறை