விண்மீன்கள் பிறந்து, வளர்ந்து, மூப்படைந்து, மடிகின்றன. நமது சூரியன் பிறந்து சுமார் 460 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அது நடுத்தர வயதை எட்டியுள்ளது. அது ஒரு சிவப்பு ராட்சச விண்மீனாக (red giant star) மாறி, பின்னர் வெள்ளைக் குள்ள விண்மீனாக (white dwarf star) மாற சுமார் 500 முதல் 600 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என மதிப்பிடப்படுகிறது. பிரபஞ்சத்தில் சுமார் ஒரு லட்சம் கோடி விண்மீன்கள் பிறந்துள்ளன. இவற்றில் பல வாழ்ந்து மடிந்துவிட்டன. […]