ஆடுகளின் உணர்வுசார் நுண்ணறிவு: மனிதக் குரலை அவை புரிந்துகொள்ளுமா?
ஆடுகள் வீடுகளிலும், பண்ணைகளிலும் வளர்க்கப்படும் விலங்குகள். மனித நாகரிகத்தில் கால்நடை வளர்ப்பு மிக முக்கியமானது, குறிப்பாக ஆடு வளர்ப்பு.
உலகில் பல வகையான ஆடுகள் உள்ளன. அவற்றின் பால், இறைச்சி, தோல், முடி என எல்லாவற்றையும் மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். இப்படிப் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆடுகள் மனிதர்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகின்றன.
இதன் விளைவாக, ஆடுகள் மனிதர்களின் குரல் வழியே அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் திறனைப் பெற்றுள்ளன என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆடுகளுக்கு உணர்வுசார் நுண்ணறிவு (emotional intelligence) உண்டு. இந்த ஆய்வுக்குப் பல இனங்களைச் சேர்ந்த 27 ஆடுகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஆய்வாளர்கள் ‘hey, look over here’ என்ற வார்த்தையை மகிழ்ச்சியாகவும், கோபமாகவும் ஆடுகளிடம் கூறி, அவற்றின் எதிர்வினைகளைப் பதிவு செய்து ஆராய்ந்தனர்.
மனிதக் குரலின் தொனியை ஆடுகளால் புரிந்துகொள்ள முடிந்தது ஆச்சரியமளித்துள்ளது. நாய்கள் மற்றும் குதிரைகள் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று இதுபோன்ற ஆய்வுகள் மூலம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
இறைவன் படைத்த ஒவ்வொரு உயிரினமும் தனித்துவமான திறன்களைக் கொண்டுள்ளன. மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஆடுகளின் இந்தத் திறன், படைப்பின் ஆழமான ஞானத்தையும், உயிரினங்களுக்கிடையேயான தொடர்புகளின் அதிசயத்தையும் காட்டுகிறது.
ஆதாரம்: விகடன்