பூமியில் உள்ள நீரின் அளவு பற்றிய அறிவியல் உண்மைகள்

அறிவியல் உண்மைகள்

பூமியில் மனிதன் வாழ்வதற்கு நீர் மிகவும் முக்கியம். பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% நீரால் நிரம்பியுள்ளது.

இந்த நீரில் பெரும்பாலானவை உப்புத்தன்மை கொண்ட பெருங்கடல் நீர் ஆகும். இது குடிப்பதற்கோ அல்லது விவசாயத்திற்கோ பயன்படாது.

2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, பூமியில் உள்ள மொத்த நீரில் சுமார் 1.33 பில்லியன் கன கிலோமீட்டர் (320 மில்லியன் கன மைல்) பெருங்கடல்களில் உள்ளது.

நிலத்தடி நீர்நிலைகளில் சுமார் 23 மில்லியன் கன கிலோமீட்டர் (5.5 மில்லியன் கன மைல்) நீர் உள்ளது. இது பூமியில் உள்ள மொத்த நீரில் சுமார் 1.7% ஆகும்.

2015 ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிக்கையின்படி, பூமியின் மேலோட்டத்தில் சுமார் 22.6 மில்லியன் கன கிலோமீட்டர் (5.4 மில்லியன் கன மைல்) நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலத்தடி நீரின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இறைவன் தனது அளப்பரிய ஆற்றலால் பூமியில் இவ்வளவு நீரை உருவாக்கி, உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்துள்ளான். அவனது படைப்பின் மகத்துவத்தை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆதாரம்: விகடன்