மூச்சுக் காற்றை வைத்து தனிநபரை அடையாளம் காண முடியுமா?
நாம் ஸ்மார்ட்ஃபோன்கள், மடிக்கணினிகள் (laptops) மற்றும் ஆதார் அட்டை போன்ற பல இடங்களில் பயோமெட்ரிக் முறைகளைப் பயன்படுத்துகிறோம்.
கைரேகை மற்றும் கருவிழி (iris) போன்ற அடையாளங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகின்றன. இவை ஒருவரை அடையாளம் காண உதவுகின்றன.
இதேபோல, மனிதனின் மூச்சுக் காற்றையும் அடையாளச் சான்றாகப் பயன்படுத்த முடியும் என்று சென்னை ஐஐடி (IIT Madras) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நுரையீரலில் இருந்து வெளியேறும் மூச்சுக் காற்றில் உள்ள ஏற்ற இறக்கங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும்.
இந்த வேறுபாடுகளைக் கொண்டு ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடம் இருந்து அடையாளம் காண்பது சாத்தியம் என்று விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய அடையாளச் சான்றுகளை உருவாக்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இறைவன் ஒவ்வொரு மனிதனையும் தனித்துவமாகப் படைத்துள்ளான். கைரேகை, கருவிழி போல மூச்சுக் காற்றிலும் தனித்தன்மையை அமைத்திருப்பது அவனது அளவற்ற ஞானத்தையும் ஆற்றலையும் காட்டுகிறது.
ஆதாரம்: விகடன்