குளிர்காலத்தில் நிறம் மாறும் விலங்குகள் எவை?
சில விலங்குகள் குளிர்காலத்தில் தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவை.
ஆர்க்டிக் நரி (Arctic fox) பொதுவாக பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆனால் பனிக்காலத்தில் இது வெள்ளை நிறமாக மாறும்.
குழிமுயல் (Snowshoe hare) வட அமெரிக்காவில் அதிகம் காணப்படும். இந்த முயல்கள் பனிக்காலத்தின் போது வெள்ளை நிறமாக மாறும்.
டார்மிகன் (Ptarmigan) ஒரு வகை பறவை. இது பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும். பனிக்காலத்தில் இதன் இறகுகள் வெள்ளை நிறமாக மாறும்.
குறுவால் மரநாய்கள் (Stoat) வட அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன. இவை பனிக்காலத்தில் வெள்ளை நிறமாக மாறும்.
சைபீரியன் வெள்ளை எலி (Siberian hamster) பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும். ஆனால் பனிக்காலத்தில் இதன் நிறம் வெள்ளை நிறமாக மாறும்.
இறைவன் படைத்த உயிரினங்கள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் விதம் வியப்பானது. இது இறைவனின் அளவற்ற ஞானத்தையும் ஆற்றலையும் காட்டுகிறது.
ஆதாரம்: விகடன்