தேனடை ஏன் அறுங்கோண வடிவில் உள்ளது?
தேனீக்கள் மெழுகைப் பயன்படுத்தி கூட்டை உருவாக்கும்போது, முதலில் வட்டம் அல்லது உருளை வடிவத்திலேயே அறைகளை உருவாக்குகின்றன.
பல்லாயிரக்கணக்கான தேனீக்கள் ஒன்றாகச் சேர்ந்து, தங்கள் உடலில் இருந்து வெப்பத்தை வெளியேற்றுகின்றன. இந்த வெப்பத்தால் மெழுகு சற்று உருகுகிறது.
கூட்டில் உள்ள பல உருளை வடிவ அறைகள் வெப்பத்தால் உருகி, ஒன்றை மற்றொன்று நெருக்கமாக அழுத்துகின்றன. அப்போது, மேற்பரப்பு இழுவிசை (surface tension) மற்றும் அழுத்தத்தின் சமநிலை (equilibrium of pressure) காரணமாக அந்த வட்டங்கள் இயற்கையாகவே அறுங்கோண வடிவமாக (hexagonal shape) மாறுகின்றன.
இந்த அறுங்கோண வடிவம் தேனை அதிக அளவில் சேமிக்க உதவுகிறது. மேலும், இது கூட்டுக்கு அதிக உறுதியையும் தருகிறது.
இறைவன் படைத்த ஒவ்வொரு உயிரினமும் அதன் வாழ்வுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருப்பது, அவனது ஆற்றலையும் ஞானத்தையும் காட்டுகிறது. தேனீக்களின் இந்த நுட்பமான கட்டுமானமும் அவனது படைப்பின் அற்புதங்களில் ஒன்றாகும்.
ஆதாரம்: இந்து தமிழ் திசை