கடலின் நிறம் ஏன் நீலமாக இருக்கிறது?

அறிவியல் உண்மைகள்

கடலின் நிறம் நீலமாக இருப்பதற்கும், வானத்தின் நிறம் நீலமாக இருப்பதற்கும் ஒரே காரணம் தான்.

சூரிய ஒளியில் பல நிறங்கள் கலந்துள்ளன. இந்த நிறங்களில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்களை கடல் நீர் உடனடியாக உள்ளிழுத்துக் கொள்கிறது.

ஆனால், நீல நிறத்தை மட்டும் கடல் நீரால் உள்ளிழுத்து மறைத்துக் கொள்ள முடிவதில்லை. இதனால், சூரிய ஒளி கடல் நீரில் படும்போது, மற்ற நிறங்கள் உறிஞ்சப்பட்டு, நீல நிறம் மட்டும் பிரதிபலிக்கிறது.

இதன் காரணமாகவே கடல் நீர் நீல நிறமாகத் தோன்றுகிறது.

இறைவன் தனது படைப்பில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணத்தையும் ஒழுங்கையும் வைத்துள்ளான். கடலின் நீல நிறமும், அதன் ஆழமும், அதில் வாழும் உயிரினங்களும் அவனது அளவற்ற ஞானத்தையும் ஆற்றலையும் காட்டுகின்றன.

ஆதாரம்: தினமணி