கரடிகள் ஏன் நீண்ட நேரம் உறங்குகின்றன?
கரடிகள் மிக நீண்ட காலம் தூங்கக்கூடியவை. பழுப்பு கரடிகள் எட்டு மாதங்கள் வரை கூட தூக்கத்தில் இருக்கும்.
இவ்வளவு நீண்ட நாட்கள் ஒரு மனிதன் தூங்கினால், எலும்புகள் வலுவிழந்து, தோல் வறண்டு, தசைகள் சிதைந்து மோசமான நிலை ஏற்படும்.
கரடிகள் தூங்கும் போது அவற்றின் இதயம் நிமிடத்திற்கு பத்து முறை மட்டுமே துடிக்கிறது. இது சாதாரண உறக்கத்தைக் கடந்த ஒருவித ஓய்வு நிலை.
கரடிகள் உறங்கும் போது எப்படி எந்த நோயும் இல்லாமல், இரத்தம் உறைந்துவிடாமல் உறங்குகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கரடிகளின் இரத்தத்தில் காணப்படும் HSP47 என்ற புரதம் (protein) தான் இதற்கு காரணம். இரத்த அணுக்களின் மீது இருக்கும் இந்த புரதம் இரத்தம் உறைதலுக்கு உதவுகிறது. கரடிகள் தூங்கும் போது இந்த புரதம் இரத்தத்தில் குறைந்துவிடுகிறது.
இந்த புரதத்தை மனிதர்களுக்கும் பயன்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் ஆகலாம் என்கின்றனர்.
இறைவன் தனது படைப்புகளில் எத்தனையோ ஆச்சரியமான விஷயங்களை வைத்துள்ளான். கரடிகளின் இந்த சிறப்புத் தன்மையும் அவனது அளவற்ற ஞானத்தையும், ஆற்றலையும் காட்டுகிறது. ஒவ்வொரு உயிரினமும் அதன் சூழலுக்கு ஏற்ப படைக்கப்பட்டு, பாதுகாக்கப்படுவதை இது உணர்த்துகிறது.
ஆதாரம்: விகடன்