நம் பற்கள் தேயுமா?

அறிவியல் உண்மைகள்

வண்டிகளின் டயர்கள் தேய்வது போல, இரும்பாலான சங்கிலிகள் கூடத் தேய்மானம் அடையும். ஆனால், நாம் தினமும் துலக்கும் பற்களும், மென்று தின்னும் பற்களும் ஏன் தேய்வதில்லை என்று சிலர் கேட்கலாம்.

உண்மையில், பற்களும் தேய்கின்றன. ஆனால், அது மெதுவாகவே நடக்கிறது. நாம் பற்களைத் துலக்கப் பயன்படுத்தும் பற்பசை, பற்கள் அதிகமாகத் தேய்மானம் அடையாமல் பாதுகாக்கிறது.

முன்பு சாம்பல் அல்லது பற்பொடி கொண்டு பற்களைத் தேய்த்தார்கள். கடினமான உணவுகளை மென்று சாப்பிட்டார்கள். அதனால், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் பற்கள் தேய்ந்து இருப்பதைப் பார்க்க முடிந்தது.

நம் பற்களின் மேல் அடுக்கில் எனாமல் (enamel) என்ற கடினமான பொருள் உள்ளது. இது பற்கள் விரைவில் தேய்மானம் அடையாமல் பாதுகாக்கிறது. வாயில் உருவாகும் அமிலங்களில் இருந்து உமிழ்நீர் பற்களைக் காப்பாற்றுகிறது.

இறைவன் மனிதர்களுக்கு அளித்த இந்த உறுப்புகள், அவர்களின் வாழ்நாள் முழுவதும் பயன்படும் வகையில் மிக நுட்பமாகப் படைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பைக் காணும்போது, படைத்தவனின் ஆற்றலையும் ஞானத்தையும் நாம் உணரலாம்.

ஆதாரம்: இந்து தமிழ் திசை