07) பரவிய தீயைப் பாதுகாத்தவர்கள் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், பிரஞ்சு, டச்சு என இன்னபிற ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் ஏராளமான போர்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் 1857-ல் நடைபெற்ற புரட்சிப் போருக்குத் தான் இந்தியப் போர் என்ற தேசியச் சாயல் முதன் முதலாகக் கிடைத்திருக்கிறது. அதுவரை நடைபெற்ற எல்லா போர்களும் பகுதிவாரியான பெயர்களிலே அழைக்கப்பட்டன. ஏனெனில் மற்ற போர்கள் அனைத்தும் வெற்றி தோல்வி என எதுவாயினும் துவங்கிய இடத்திலேயே முடிந்து விடும் ஓரிடத்தில் துவங்கி ஊரெல்லாம் பரவி தேசத்தின் […]