பொய் சொல்லாதீர் ஒரு முஸ்லிம் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் அதற்கு மாற்றமாக சர்வ சாதாரணமாய் பொய் பேசுவதை தான் பார்க்க முடிகின்றது. எதற்கெடுத்தாலும் பொப் அற்பமான சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பொய் பேசுவதை காண முடிகின்றது. நேற்று ஏன் சொற்பொழிவுக்கு வரவில்லை என்று கேட்டால் சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள் அதான் வரமுடியலை என்று நாக்கூசாமல் பொய் சொல்கின்றோம். போனில் ஏங்க எங்கங்க இருக்கிறீங்க? என்று மனைவி கேட்டால் அதற்கும் தயாராய் ஒரு […]