
44) கருணை நாயனின் காருண்ய மார்க்கம் இஸ்லாம் கூறுகிற அறிவுரைகள் முதல் கட்டளைகள் வரை அனைத்துச் செய்திகளுமே மனித நேயத்தையும் மனித குல நன்மையையுமே அடிப்படையாகக் கொண்டவை. மனிதர்களுக்குத் தீங்களிக்கிற எந்தவொன்றையும் இஸ்லாத்தில் பார்க்க முடியாது. நிகரற்ற அன்புடையோன் இஸ்லாமிய மார்க்கம் எல்லாம் வல்ல இறைவன் வழங்கிய மார்க்கம். அந்த இறைவன் எப்படிப்பட்டவன் என்பதைத் தெரிந்து கொண்டால் அதிலிருந்தே அவன் வழங்கிய மார்க்கத்தையும் தெரிந்து கொள்ள லாம். மனிதர்கள் தாம் செய்யும் எல்லா காரியத்தையும் இறை நாமத்தோடு […]