Tamil Bayan Points

13) சுற்றி வளைக்கப்பட்டார் சூத்திரதாரி

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

13) சுற்றி வளைக்கப்பட்டார் சூத்திரதாரி

நகரை நிர்மூலமாக்கும் கொடுமை களுக்கிடையில் சுதந்திரப் போரின் சூத்திரதாரியைச் சுற்றி வளைக்கும் வேலைகள் ஆரம்பமாயின. அதற் கான பொறுப்பு கொடியவன், ஆங்கிலக் கம்பெனியின் குதிரைப் படைத் தலைவன் ஹட்ஸனிடம் ஒப்படைக்கப்பட்டது.

நூறு குதிரைப் படை வீரர்களோடு புறப்பட்டான் ஹட்ஸன். ஹீமாயூனின் சமாதியில் தஞ்சம் அடைந்திருந்த மன்னர் பகதூர் ஷாவையும் அவரது பிள்ளைகளையும் கைது செய்தான்.

அழைத்து வருவதற்குள் அவனுக்கு ஆத்திரம் பொங்கியது. இளவரசர்கள் மூவரையும் வண்டியிலிருந்து இறக்கினான். அனைவருக்கும் முன் பாகவே அவர்களின் ஆடைகளைக் களைந்தான். மீர்ஜா மொகல், மீர்ஜா ராஜி சுல்தான், மீர்ஜா அபூபக்கர் ஆகிய மூன்று இளைஞர்களையும் பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் துடிக்கத் துடிக்கச் சுட்டுக் கொன்றான் ஹட்சன்…

கொல்லப்பட்ட இளவரசர்களின் உயிரற்ற சடலங்களை கழுகுகளுக்கும், காக்கைகளுக்கும் இரையாக வெட்ட வெளியில் வீசி எறிந்தான். (W.S.R Hodson Twelve years of Soldier’s Life in India ed by, The Rev George H.Hodson, Boston, Ticknor and Fields 1860 pp 339-341 (இ.சு.பெ.இ.ப) பக். 192,193)