Tamil Bayan Points

16) மரணத்திற்குப் பின்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

16) மரணத்திற்குப் பின்

மரணித்த செய்தியைக் கூட மக்களுக்குத் தெரியாமல் மறைத்தது ஆங்கில அரசு. அந்தச் செய்தி எந்தப் பத்திரிக்கையிலும் வெளிவராதவாறு பார்த்துக் கொண்டது. எதேச்சையாகத் தெரிந்து கொண்டு வந்த மக்களையும் கூட சவ ஊர்வலத்தில் கலந்து கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தியது.

இறுதி கட்டத்தில் அவரோடு இருந்த மூவரைத் தவிர வேறு யாரும் அடக்கஸ்தலத்திற்குள் நுழையக் கூடாது என தடை விதிக்கப்பட்டனர்.

அடக்கப்பட்ட உடல் கூட சீக்கிரம் அழிந்து போக வேண்டும் என்பதற்காக சவக்குழிக்குள் சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு வந்து கொட்டினார்கள். அடக்கிய இடத்தை யாரும் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக அதனைத் தரையோடு தரையாக சமப்படுத்தினார்கள்.

(William Dalry mole The Last Mughal The Fall of Dynasty Delhi Penguin viking New Delhi 2006 p 1 National Archieves of India New Delhi Foreign Department of olitical November 1862 p 204/62 (இ.சு.பெ.இ.ப) பக். 910,911)

பகதூர் ஷாவின் ஆதரவாளர்கள், அவர் மரணித்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் 1907ஆம் ஆண்டு செவிவழிச் செய்தியாக கேள்விப்பட்டதை வைத்துக் கொண்டு, அவருக்காக நினைவிடம் ஒன்றை எழுப்பினார்கள்…

பகதூர் ஷா முன்னால் டில்லி அரசர். 1862ல் மறைந்தார். அவர் உடல் இதன் அருகே (கவனிக்கவும் இங்கே இல்லை) அடக்கம் செய்யப்பட்டது என ஒரு கல்வெட்டையும் அங்கே நட்டு வைத்தார்கள்.

(Myanmar National Archieves (yengon) Series 1/1A Acc No 36 56 1905 File No c.4 Bahadhur Sha (Ex-King of Delhi) Presenvation of grave (இ.சு.பெ.இ.ப) பக். 913)

ஜவஹர்லால் நேரு எழுதிய நூல் இந்திய தரிசனம். 1944-ல் சிறையில் இருந்த போது எழுதப்பட்ட இந்நூலில் 1857-இல் புரட்சி முடிவுக்கு வந்த பின் முஸ்லிம்கள்தான் அதிகமதிகமாகப் பாதிக்கப்பட்டனர் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். (இ.சு.பெ.இ.ப) பக். 976)

இவற்றில் வர்ணனை என்ற பெயரில் வரம்பு மீறிய வார்த்தைகள் எதுவும் இல்லை. வஞ்சத்தினால் சொல்லப்பட்ட நெஞ்சம் அறுக்கும் செய்திகள் இல்லை. அனைத்துமே ஆதாரப்பூர்வமானது.

நேரடி சாட்சிகளும் அவர்களிடம் கேட்டவர்களும் நமக்குத் தரும் வாக்குமூலங்களின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏராளமான அரசு ஆவணங்கள் இதற்கு சான்றுகளாக இருக்கின்றன.