Tamil Bayan Points

31) இந்துத்துவ வெறியும் இழித்துச் சொல்லும் பழியும்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

31) இந்துத்துவ வெறியும் இழித்துச் சொல்லும் பழியும்

சுதந்திரத் தாகத்தின் சுடரொளியாய் பிரகாசிக்கும் மாப்ளா போராட்டத்தை இழிவுபடுத்தும் வேலையில் சில இந்துத்துவ வெறியர்கள் ஈடுபட்டுள்ளனர். மாப்ளாக்கள் நடத்தியது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. அது ஒரு இனக்கலவரம். இந்துக்களை முஸ்லிம்கள் வெட்டிச் சாய்த்த மதக் கலவரம் என எழுதி வைத்துள்ளனர்.

இளங்கலை வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு சுதந்திரப் போரின் வரலாற்றுக்கு வழிகாட்டும் நூல் (History Of Freedom Struggle in India ) இதில் மாப்பிள்ளாக் கிளர்ச்சி சுதந்திரப் போர் அல்ல. மதக் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மலபார் முஸ்லிம்கள் நடத்திய கலவரம்.

மதவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் இந்துக்களைக் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்தனர், மதமாற்றம் செய்தனர், இந்துப் பெண்களைக் கற்பழித்தனர், இந்துக்களின்உடைமைகளைச் சூறையாடினர்,வீடுகளுக்குத் தீயிட்டனர் என்று எழுதியிருக்கிறார்.

(History Of Freedom Struggle in India pp 251-253, தி.நி.ப. பக்கம் 7,8)

இந்துத்துவ வெறியும் இழித்துச் சொல்லும் பழியும்

சுதந்திரதாகத்தின் சுடரொளியாய்பிரகாசிக்கும் மாப்ளா போராட்டத்தை இழிவு படுத்தும் வேலையில் சில இந்துத்துவ வெறியர்கள் ஈடுபட்டுள்ளனர். மாப்ளாக்கள் நடத்தியது ஆங்கிலேயர் களுக்கு எதிரான போராட்டம் அல்ல. அது ஒரு இனக் கலவரம். இந்துக்களை முஸ்லிம்கள் வெட்டிச் சாய்த்த மதக் கலவரம் என எழுதி வைத்துள்ளனர்.

இளங்கலை வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு சுதந்திரப் போரின் வரலாற்றுக்கு வழிகாட்டும் நூலில் மாப்பிள்ளாக் கிளர்ச்சி சுதந்திரப் போர் அல்ல. மதக் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மலபார் முஸ்லிம்கள் நடத்திய கலவரம்.

மதவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் இந்துக்களைக் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்தனர், மதமாற்றம் செய்தனர், இந்துப் பெண்களைக் கற்பழித்தனர், இந்துக்களின்உடைமைகளைச் சூறையாடினர்,வீடுகளுக்குத் தீயிட்டனர் என்று எழுதியிருக்கிறார்கள்.

பார்ப்பனநம்பூதிரிகள் படுத்திய பாடுதான் இவர்களைப் போர்க்களத்திற்கு அழைத்து வந்தது என்பதைமறுப்பதற்கில்லை. அதற்காக அவர்களின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் இந்து முஸ்லிம் கலவரமாக சுருக்கிப் பார்ப்பதை எவ்வாறு ஏற்க முடியும்?

மாப்ளாக்கள்இந்துக்களைத் தாக்கியது அவர்கள் இந்துக்களாக இருக்கிறார்கள் என்பதற்காகவா? அப்படியானால், மாப்ளாக்களோடு சேர்ந்து சில இந்துக்களும் இந்துக்களைத் தாக்கினார்களே அவர்கள் ஏன் தாக்கினார்கள்? அதற்கும் இதே காரணத்தைச் சொல்வார்களா?

மாப்ளா போராட்டக் கைதிகளின் பட்டியலில் முஸ்லிம்களின் பெயர்களோடு சில இந்துப் பெயர்களும் இடம்பெறுகின்றனவே? 1921 அக்டோபர் ஒன்றாம் தேதியன்று பெல்லாரி சிறைக்கு அனுப்பப்பட்ட 1570 கைதிகளில் 15 இந்துக்களும் இருந்ததாக ஆவணங்கள் கூறுகின்றனவே,அதற்கான காரணத்தை விளக்குவார்களா? (மெ.மா.சி.நி.அ பக் 30-31 (மா.கி.அ.தோ) பக் 246)

புரட்சி அடக்கப்பட்டதற்குப்பின் சென்னை உயர்நீதி மன்றத்தில் போடப் பட்ட 100 வழக்குகளில் 14 வழக்குகள் இந்துக்கள் மீது போடப்பட்டிருந்தது. இந்து ஜமீன்களைத் தாக்கினார்கள், நம்பூதிரிகளின் வீடுகளைக் கைப்பற்றி னார்கள் என்பது அரசுத் தரப்பில் இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள். இதையும் அதே பட்டியலில் இணைப்பார்களா?

மூச்சுத் திணறி சாகடிக்கப்பட்ட சரக்கு ரயில் பயணத்திலும் மூன்று இந்துக்கள் பங்கெடுத்துள்ளனரே அவர்கள் தாமாக முன்வந்து ஏறினார்களா?அடித்து துவைத்து ஆங்கிலேயர்களால் ஏற்றப்பட்டார்களா?ஏற்றியது ஆங்கிலேயர்தான் என்றால் அவர்கள் ஏன் இந்துக்களை ஏற்ற வேண்டும்? பாதிக்கப்பட்டவனைப் பலி கொடுக்க வேண்டிய தேவை என்ன வந்தது?

மாப்ளாக்கள் இந்துக்களைத் தாக்கியது போலவே முஸ்லிம்களில் பலரையும் தாக்கினார்களே, அது ஏன் நடந்தது? ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் கான்பகதூர் குரிமண்ணில் சேக்குட்டி சாஹிபை 1921 ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று போராளிகள் கொலை செய்தார்கள்.(வழக்கு எண் 128 1922இன் மீதான தீர்ப்பு கோழிக்கோடு சிறப்பு நீதிமன்றம் 25-9-1922 பக் 235-238 (மா.கி.அ.தோ) பக் 259)

ஆங்கிலேயரின்ஆட்சி அகற்றப்பட்டு மாப்ளா ராஜ்ஜியம் அமைந்த பின்னர் எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளின்போது ராஜ்ஜியத் தலைவரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பலர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது.

மாப்ளா போராட்டக் கைதிகளின் பட்டியலில்முஸ்லிம்களின் பெயர்களோடு சில இந்துப் பெயர்களும் இடம்பெறுகின்றனவே!

புகழ் பெற்ற அலோபதி மருத்துவர் இத்தூரு ஹாஜி, அட்டன், இஸ்மாயீல், கம்முன்னி ஹாஜி, மம்மு, குன்ஹம்மு ஷேக், கயிசேரி மைதீன், காக்கப்ப வீரன் ஹாஜி, காரேத்து குன்ஹி கோயா. இவர்கள் அனைவரும் மாப்ளாக்களால் தண்டிக்கப்பட்ட முஸ்லிம்கள்.

(Peasants Protests and Revolts in Malabar Edited by K.N. Pankkar- People’s Publishing house)

1921 புரட்சியை இந்துக்கள்மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் என்று கூறுபவர்கள் இதற்கு என்ன பதிலளிப்பார்கள்?

புரட்சி தொடங்கிய நேரத்தில் மஞ்சேரியில் இருந்த நம்பூதிரி வங்கி போராளிகளால் சூறையாடப்பட்டது. அப்போது புரட்சிப் படைத் தலைவர் குஞ்ஞாஹமது ஹாஜி அந்த வங்கியில் தமது பொருட்களை அடகு வைத்த இந்துக்களையெல்லாம் வரவழைத்து உரியவர்களிடம் பொருட்களை ஒப்படைத்தாரே, அதை ஏன் செய்தார்? இந்துக்கள் என்பதற்காக அடித்தார் என்று கூறியவர்கள் இந்துக்கள் என்பதற்காக கொடுத்தார் என்பார்களா?

சாத்தான் கோட்டுக்காரர் சி. கோபால பணிக்கர் எழுதி வைத்த ஆவணத்தில் உள்ள ஒரு செய்தி.(வழக்கு எண் 128 1922இன் மீதான தீர்ப்பு கோழிக்கோடு சிறப்பு நீதிமன்றம் 25-9-1922 பக் 235-238 (மா.கி.அ.தோ) பக் 259)

புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அநியாயமான முறையில் சில இந்துக்களின் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அதைக் கேள்விப்பட்ட வரியம் குன்னத்து குஞ்ஞாஹமது ஹாஜி கொள்ளைப் பொருட்களைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.

புகார் கொடுத்தவர்களை வரவழைத்து,விசாரித்து பொருட்களைஇந்துக்களிடம் ஒப்படைத்தார். எரநாட்டிற்கு நேரில் சென்று இந்துக்களின் மனுக்களை விசாரித்து நடவடிக்கை எடுத்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகிறார்: இந்துக்கள் மீது அத்துமீறலில் ஈடுபட்ட சில முஸ்லிம்களை குஞ்ஞாஹமது ஹாஜி பொது இடத்தில் கட்டி வைத்து அடித்தார். குஞ்சாலி எனும் ஒருவன் மட்டும் நான் திருடவில்லை என்று கூறிக் கொண்டிருந்தான். அவனுக்கு 125 கசையடிகள் கொடுக்குமாறு கட்டளையிட்டார்.

இறுதியில் அவனும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான். திருடிய பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்தான். அவை மராமத்து நம்பூதிரிக்கும் காவுக்கள் நம்பூதிரிக்கும் உரியவை என்று கண்டறியப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவைகளெல்லாம் மாப்பிள்ளாக் களைப் பற்றிய உண்மை வரலாறு. அவர்களைப் பழித்துரைப்போர் இதற்கென்ன பதிலுரைப்பர்?

மாப்பிள்ளாக்கள் ஆங்கிலேயரை எதிர்த்தனர். அதுபோல அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள்,காட்டிக் கொடுத்தவர்கள் என பரங்கியரின் கைகளைப் பலப்படுத்திய அனை வரையும் எதிர்த்தனர். அவர்களில் இந்து முஸ்லிம் என எந்தவிதமான பாகுபாட்டையும் அவர்கள் கடைப் பிடிக்கவில்லை. இதுதான் உண்மை.

மாப்ளா கிளர்ச்சியின் ஆய்வாளார் கான்ராட் உட் கூறுகிறார் :

சரியாகச் சொல்வதானால் கிளர்ச்சிக்கு ஆதரவு தர மறுத்த பல எரநாடு

மாப்ளாக்கள் கிளர்ச்சியாளர் களால் தண்டிக்கப்பட்டார்கள். மாப்ளா ராஜ்ஜியத்துக்கான இந்தப் போராட்டப் பாதையில் எந்தத் தீங்கும் தடையும் விளைவிக்காத இந்துக்களைக் கிளர்ச்சியாளர்கள் துன்புறுத்தியதோ, தண்டித்ததோ இல்லை.

ஆனால் தமது சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே கிளர்ச்சிக்கு ஆதரவாக இல்லையெனில் அல்லது எதிராகச் சென்றால் அத்தகைய துரோகிகளை கிளர்ச்சியாளர்கள் தண்டிக்காமல் விட்டதும் இல்லை, என்கிறார். ((மா.கி.அ.தோ) பக் 260 பகுதி அலுவல் அறிக்கை 1922 ஜனவரி ஜி.ஆர்.எஃப்.- பக் 284,236)

இறுதியாக சில வார்த்தைகள்

ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி இதுவரை சொல்லப்பட்ட முஸ்லிம்களின் போராட்டங்களையும், தியாகங்களையும் உங்கள் மனக் கண்களில் ஓட விட்டுப் பாருங்கள். அதன் வேர் முதல் விழுதுவரை முஸ்லிம்கள் எந்த அளவிற்கு இரண்டறக் கலந்திருக்கிறார்கள் என்ற உண்மை புரியும்.

இந்த தியாகங்கள் எங்கேனும் பேசப்படுகிறதா? தியாகிகளைப் பற்றிப் பேசுவது ஒரு வகையில் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியல்லவா? நன்றியை விட வேறென்ன கைமாறை நாம் அவர்களுக்குச் செய்து விட முடியும்? அனைவரின் உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைக்கும்போது முஸ்லிம்கள் மட்டும் எந்த வகையில் அதற்கு தகுதியற்றவர்களாகி விட்டார்கள்?

முதல் இந்தியச் சுதந்திரப் போரின் நாயகனாக வலம் வந்த பகதூர் ஷா அந்த முதிய வயதில் முரட்டுக் கழுதை ஹட்ஸனோடு ஏன் அல்லல்பட வேண்டும்? வயது போன காலத்தில் வசதியாக வாழ்வதை விட்டுவிட்டு வறுமையை ஏன் தன் வாழ்வாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? புரட்சி முடிந்ததும் அதிகாரம் எனக்கல்ல. அனைத்தையும் உங்களிடமே ஒப்படைப்பேன் என்று கூறுபவர் போருக்கு ஏன் புறப்பட வேண்டும்?

அவரோடுகைகோர்த்து நின்றதற்காக ஆயிரமாயிரம் மக்கள் தங்கள் வாழ்வையே அழித்துக் கொண்டார்களே! வீடிழந்து, வேலையிழந்து தம் உற்றார், உறவினர் பலரின் உயிரையும் இழந்து வீதிக்கு வந்து வேரற்ற மரங்களாக ஏன் அவர்கள் வீழ்ந்து போக வேண்டும்? வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய பலருக்குள் இவர்களும் ஒருவராக இருந்திருக்க முடியாதா?

சொந்த நலனைத் தூக்கியெறிந்து விட்டு, மண்ணின் மானம் காக்க, சந்ததிகளின் சோகம் நீக்க சோதனைகளைத் தாங்கிய மக்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஓரங்கட்டப்பட வேண்டுமா?

இந்தியாவில் 1857ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போரைப் பற்றி பேசாத ஏடுகள் இல்லை. நடத்தாத பாடங்கள் இல்லை. ஆனால் அவையனைத்துமே எங்கே முஸ்லிம்களின் தியாகத்தைச் சொல்ல வேண்டிய சூழல் வந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சிச் சொல்வதைப்போல் உங்களுக்குத் தோன்றவில்லையா? அதைப் பற்றி வீரம் கொப்பளிக்கப் பேசப்படும் இடங்களில்கூடகருத்துக்கள் இல்லாத வெற்று வர்ணணைகளால் வார்த்தைகளை நிரப்பி விடுகிறார்கள்.

1857, சிப்பாய் புரட்சி, மீரட், டில்லி, அயோத்தி, லக்னோ, துப்பாக்கி, மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மங்கள் பாண்டே, வெற்றி, தோல்வி துவங்கியது, பரவியது முடிந்தது சுபம். அவ்வளவுதானே.

முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் ஆஸ்திரியப் போர், ஐரோப்பிய போர் என அகிலத்துப் போர்களைப் பற்றி பேசும் போது கூட எப்படி நடந்தது? எதனால் நடந்தது? மரணம் எத்தனை? இழப்புகள் என்னென்ன? முடிவு என்ன? விளைவு என்ன? வெற்றி யாருக்கு? தோல்வி யாருக்கு? என அனைத்தையும் அலசுகிறீர்கள்.

ஆனால் இங்கே நமது போர் நம்முடையசுதந்திரத்திற்காக நடைபெற்ற போர். நமது ஊணோடும் உயிரோடும் கலந்த நமது முன்னோர்கள் செய்த போர். அதுவும் நாம் வாழ்வதற்காக அவர்கள் வீழ்ந்த போர். இதில் காட்டப்படும் மௌனம் கள்ளத்தனமல்லாமல் வேறென்ன?

இதுவே சுதந்திரப் போரில் ஈடுபட்ட முஸ்லிமல்லாதவர்களின் பங்கைப் பற்றி பேசுகிற கட்டங்களாக இருந்தால் அதன் தொனியே மாறி விடுகிறது. விலாவாரியாக விளக்கித் தரப்படுகிறது. இதைச் சுருக்குவதைப் போன்று அவற்றை ஏன் சுருக்குவதில்லை?

அப்படியானால் முஸ்லிம்களுக்கும் இந்த மண்ணுக்குமான ஆலகால பந்தம் அம்பலத்திற்கு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் என்பதுதானே அதன் அர்த்தம். முஸ்லிம்களின் தியாகங்கள் முன்னுக்கு வந்தால் நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் அவற்றை மட்டும் திட்டமிட்டு மறைக்கிறார்களோ என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது.

ஜாலியன் வாலாபாக், செக்கிழுத்த வ.உ.சி., சனாதனத்தைக் காப்பதற்காக ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சி நாதன், தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மன், கொடி காத்த குமரன் இவர்களையெல்லாம் விட மாப்ளாக்களின் வீரமும் தியாகமும் எந்த விதத்தில் குறைந்து போனது?

நேதாஜி கூட சுதந்திர இந்தியாவை ஆஸாத் ஹிந்த் என்று பிரகடனம் தான் செய்தார். ஆனால் மாப்ளாக்களோ அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயர்களை விரட்டிவிட்டு சுதந்திர அரசை நிறுவி சில மாதங்கள் அந்த அரசாங்கத்தை நடத்தியும் காட்டி விட்டார்கள். இது சாதாரணமாக மறக்கப்பட்டு விடுகிற சாதனையா?

செக்கிழுத்தார்கள், சிறை சென்றார்கள் இத்தனை ஆண்டு சிறை அத்தனை ஆண்டு சிறை என்றெல்லாம் சிலாகித்துப் பேசுகிறோம். சரக்குப் பெட்டியின் ஆணி ஓட்டையில் மூச்சையிழுத்த மாப்ளாவின் தியாகம் இதைவிட மட்டமா?

ஒற்றை வரிச் செய்தியாக ஓரஞ்சாரத்தில்கூட அதற்கு நாம் இடம் கொடுக்கவில்லையே நினைத்தாலே குலை நடுங்கும் அளவுக்கு ஈவிரக்கமின்றி, விலங்குகளைக் கூட கொல்லத் தயங்கும் விதத்தில் பெட்டிக்குள் அடைத்து கோரமாகச் சாகடிக்கப்பட்டார்களே, சர்வதேச அளவில் நம் முன்னோர்களின் தியாகத்தைச் சொல்வதற்குத் தகுதியானதாக அது இருந்தும் முஸ்லிம் என்ற காரணத்தால் அதை முதுகுக்குப் பின்னால் தூக்கியெறிவதை எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்?

காங்கிரஸ் என்றாலே காந்திஜி, நேருஜி, ராஜாஜி என்று பேசப்படும் ஜீவாத்மாக்களின் வரிசையில், ஜீவ மரணப் போர் நடத்திய காலத்தில் அதன் ஜீவனைத் தக்க வைக்க தங்கள் ஜீவனை அர்ப்பணித்த முஸ்லிம்களைப் பற்றிப் பேசப்படுவதில்லையே ஏன்?

சுதந்திரப் போருக்கு முன் படிப்பிலும் பணத்திலும் கொடி கட்டிப் பறந்தவர்கள், சுதந்திர தேசத்தின் கனவுகளில் லட்சத்தையும் கோடியையும் கொட்டிக் கொடுத் தார்கள்.

அவர்களின் வாரிசுகள் பரம ஏழைகளாகி இன்று பட்டினி கிடக்கிறார்கள். அன்று பாரிஸ்டர்களாக வலம் வந்தவர்கள் காந்தியின் மீது கொண்ட காதலால் கல்வியை விட்டார்கள். இன்று கல்வி நிலையங்களில் கடைசி இருக்கை கூட காலி இல்லை என்று விரட்டப்பட்டு கை நாட்டுப் பேர்வழிகளாக காலம் தள்ளுகிறார்கள்.

ஏன் இந்த இழிநிலை? ஒரு காலத்தில் முதல் வரிசையில் இருந்து தேசத்தை முன்னோக்கி இழுக்க பாடுபட்டவர்கள் இன்று அனைவருக்கும் பின்னால் இருப்பதன் பின்னணியில் முஸ்லிம்களின் மறைக்கப்பட்ட தியாக வரலாறு இருக்கிறது என்றால் அது தவறல்ல. மிகையுமல்ல.