09) ஆதமுக்கு சஜ்தா செய்ய மறுத்தவன் யார? கேள்வி : ஆதமுக்கு சஜ்தா செய்ய மறுத்தவன் யார்? பதில் : இப்லீஸ் என்பவன் தான் இறைக்கட்டளைக்கு மாறு செய்தான் ஆதாரம் “ஆதமுக்குப் பணியுங்கள்!”என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான். (அல்குர்ஆன்: 2:34)➚