13) முதலில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்

நூல்கள்: தனிமனித வாழ்வில் இஸ்லாம்

சிறுவர்கள் விஷயத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான வழிகாட்டல்களில் ஒன்று, நமது வயல்கள், தோட்டங்கள் மற்றும் வியாபாரங்களில் முதன்முதலில் கிடைக்கக்கூடிய பலன்களை அவர்களுக்குக் கொடுத்து மகிழ்விப்பதாகும். தொடக்கத்தில் மதீனாவில் பஞ்சம் நிலவியபோது நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் வளத்திற்காக துஆ செய்தார்கள். பின்னர் அங்கு பேரீச்சம்பழங்கள் விளைந்த காலத்தில், மக்கள் முதல் கனிகளை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை வாங்கி, அங்கு வருகை தந்திருக்கும் சிறுவர்களில் மிகச் சிறியவருக்கு வழங்கி, விளைச்சலை விநியோகிப்பதில் சிறுவர்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள்.

كَانَ يُؤْتَى بِأَوَّلِ الثَّمَرِ ثُمَّ يُعْطِيهِ أَصْغَرَ مَنْ يَحْضُرُهُ مِنَ الْوِلْدَانِ
நபி (ஸல்) அவர்களிடம் முதல் கனி கொண்டுவரப்பட்டால், அங்கு வருகை தந்திருக்கும் சிறுவர்களில் மிகச் சிறியவருக்கு அதை வழங்குவார்கள்.
(முஸ்லிம்: 2438) ➚