Category: நாவை பேணுவோம்

u456

48) சதா பாடாதீர்

சதா பாடாதீர் இஸ்லாமிய இளைஞர்களில் இளைசிகளில் பலருக்கும் குர்ஆன் ஓத தெரியாது. அவர்களிடம் நம்முடைய இறைவேதத்தையே உங்களுக்கு பார்த்து ஓத தெரியாதா ஏன் முயற்சி செய்ய வேண்டியது தானே என்று கேட்டால் குர்ஆன் ஓத மிகவும் சிரமமாய் உள்ளது என்று சற்றும் தயங்காமல் கூறுவார்கள். இன்னும் பலர் குல்ஹூ வல்லாஹூ அஹத் என்ற சூராவை மட்டுமே மனனம் செய்திருப்பார்கள். இதையே பலவருடங்களாக எல்லா தொழுகைக்கும் அசராமல் ஓதிவருவார்கள் ஏன் மற்ற சூராக்களை மனனம் செய்ய வேண்டியது தானே […]

47) நகைச்சுவை பேச்சு

நகைச்சுவை பேச்சு ஆபாசம் கலந்தோ தீயவைகள் கலந்தோ பேசக்கூடாது என்பதை பார்த்தோம் மீறி பேசினால் அது இறைவனிடம் தண்டனையைபெற்றுத்தரும் என்பதையும் அறிந்தோம் ஆனால் நம்முடைய பேச்சில் நகைச்சுவை கலந்தால் அதில் எவ்வித குற்றமும் இல்லை. ஒரு மனிதர் நகைச்சுவை கலந்து பேசியதால் அவரை குற்றவாளியாக பார்க்கத் தேவையில்லை. ஏனெனில் இஸ்லாம் நகைச்சுவை உணர்வுக்கு எதிரானது அல்ல நகைச்சுவை என்ற பெயரில் ஆபாசத்தையும் அசிங்கத்தையும் அரங்கேற்றுவதை 24 மணி நேரமும் சிரியோ சிரி என்று சிரித்துக் கொண்டிருப்பதை கண்டிக்கின்றதே […]

46) இஷாவுக்கு பின் பேசுதல்

இஷாவுக்கு பின் பேசுதல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இஷா தொழுகை முடிந்தவுடன் தேவையற்ற பேச்சுக்களை பேசி நேரத்தை வீணடிப்பதை மிகவும் வெறுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப்பின் (உறங்காமல்) பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் அபூபர்ஸா நள்லா பின் உபைத் (ரலி) (புகாரி: 568) இன்று நபிகளாரின் வெறுப்பை சம்பாதிக்கும் இந்த காரியத்தைதான் ஒவ்வொரு ஊர்களிலும் நமது முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இஷாத் தொழுகை முடிந்தவுடன் குரூப் […]

45) அனுமதிக்கப்பட்ட புகழ்

அனுமதிக்கப்பட்ட புகழ் மேற்கண்ட தகவல்களை கண்டவுடன் பிறரை புகழ்வது முற்றிலும் தடை செய்யப்பட்டது என்றோ மாபாதகச் செயல் என்றோ கருதிவிடக் கூடாது. சில வேளைகளில் பிறரை புகழ்ந்து கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் செய்த தியாகம் மக்கள் மத்தியில் மறுக்கப்படும் போது ஒரு நல்லவரை கெட்டவர்களாக கருதும் சூழ்நிலை நிலவும் போது அவர் நல்லவர் மக்களுக்காக உழைத்தவர் என்பதை நிரூபிக்க வரம்புக்குட்பட்டு புகழலாம். இதை நபியவர்கள் செய்து காட்டி நமக்கு தெளிவை ஏற்படுத்துகின்றார்கள்.  நான் நபி (ஸல்) […]

44) புகழ் பாடுவது

புகழ் பாடுவது முஸ்லிம்கள் அனைவர்களும் இறைவனை மட்டுமே போற்றிப் புகழ்பவர்களாக இருக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே என்பதுதான் இஸ்லாத்தின் தாரகமந்திரம். நமது நாவால் புகழ்வதற்குரிய முழுத்தகுதியையும் பெற்ற ஒருவன் நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மட்டுமே என்று ஒவ்வொரு முஸ்லிம்களும் உறுதியாக நம்பியிருக்க வேண்டும். இதையே நாம் அனைவரும் ஒவ்வொரு தொழுகையிலும் அல்ஹம்து ஒதி மெய்ப்பிக்கின்றோம். இறைவனின் தூதர் என்பதினால் உத்தம நபி ஸல் அவர்களையும் நாம் புகழலாம். எனினும் இறைவனை புகழ்வதற்கு ஒப்பாக […]

43) இறைவனிடத்தில் மோசமானவர்

இறைவனிடத்தில் மோசமானவர் மற்றவர்களிடம் நற்பெயர் எடுப்பதை விடவும் படைத்த இறைவனிடம் நற்பெயர் எடுப்பது முக்கியமான ஒன்றாகும். அதற்காக இவ்வுலகில் பல வணக்க வழிபாடுகள் செய்து முயற்சிக்க வேண்டும் அதே சமயம் இறைவனிடம் அவப் பெயரை பெற்றுத்தரும் எந்த காரியத்திலும் ஒரு முஸ்லிம் ஈடுபடக்கூடாது. அது அவனின் மறுமை வாழ்க்கைக்கு பெரிதும் கேடு விழைவிப்பவையாகும் அருவருப்பான பேச்சை பேசுபவர்கள் இறைவனிடம் அவப்பெயரை எடுக்கின்றார்கள். மனிதர்களில் மிகவும் மோசமானவன் என்ற கெட்ட பெயரை ஒரு அடியான் அருவருப்பான பேச்சை பேசுவதின் […]

42) முத்திரை பதித்த முன்மாதிரி

முத்திரை பதித்த முன்மாதிரி நபிகளாரை போன்ற ஒரு மிகச் சிறந்த முன்மாதிரியை வரலாற்றில் எவ்வளவு தான் தேடினாலும் கிடைக்க மாட்டார் என்று உறுதியிட்டு கூற முடியும். அனைத்து காரியத்திலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பதித்த முத்திரை அவ்வளவு ஆழமாய் இருந்துள்ளது நபிகளார் செயலில் மட்டும் ஒழுக்கமானவர்களாய் நடந்து கொள்ளவில்லை. மாறாக பேச்சிலும் மிகச்சிறந்த ஒழுக்கத்தை கடைபிடித்து சென்றுள்ளார்கள். இவ்வளவு நாகரீகமான பேச்சை கொண்ட ஒரு தலைவரை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார். அவ்வளவு நாகரீகம். எந்த […]

41) அருவருப்பான பேச்சு

அருவருப்பான பேச்சு இன்று எதை எடுத்தாலும் ஆபாசம். எங்கும் ஆபாசம். எதிலும் ஆபாசம். நீரின்றி உலகில்லை என்பதை மாற்றி ஆபாசமின்றி உலகில்லை என்று சொல்லுமளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதைப் போன்று ஆபாசம் பெருக்கெடுத்து ஒடுகின்றது. டிவியை திறந்தால் ஆபாசம். வெளியே நடமாடினால் விதவிதமான ஆபாச போஸ்டர்கள்தான் கண்ணில் படுகின்றன. பஸ்ஸில் ஏறினால் அங்கேயும் ஆபாச மழை காட்சியாகவும் பாடலாகவும் பொழிகின்றது இவ்வாறான ஆபாச காட்சிகளை கண்டு கழிக்கும் மக்களின் பேச்சில் ஆபாசம் இல்லாமலிருக்குமா? மற்றவர்கள் எப்படியோ? ஆனால்ஒரு […]

40) வேண்டாமே வீண் தர்க்கம்

வேண்டாமே வீண் தர்க்கம் இஸ்லாத்தில் கூறப்படும் கருத்துக்களை விவாதம் செய்ய அனுமதியுண்டு. தாங்கள் கொண்டிருக்கும் கொள்கை அல்லது கருத்துதான் சரியானது என்பதை விவாதத்தின் மூலம் நிரூபிக்கலாம். இதற்கு இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை. ஆனால் அந்த விவாதம் அழகிய முறையில் இருக்க வேண்டும் என்பதே இறைவனின் நிபந்தனை. இந்த வழியை இறைவன் தான் கற்றுத்தருகின்றான்.  வேதக்காரர்களிடம் மிக அழகிய முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம். (அல்குர்ஆன்: 29:46) ➚  நம்ரூத் எனும் மன்னன் நான் தான் […]

39) நபிகளாரின் வெறுப்பிற்குரியவர்

நபிகளாரின் வெறுப்பிற்குரியவர் இது போன்ற அர்த்தமற்ற பேச்சுக்களை பேசுபவர்கள் நாம் விரும்புகின்ற நம்முடைய தலைவர் நபிகள் நாயகத்தின் வெறுப்பை சம்பாதித்தவர்களாக ஆவார்கள். அதுமட்டுமல்ல மறுமை நாளில் நபிகளாரின் அருகில் இருக்கும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடும். இந்த உலகில் பி ரபலமானவர்களின் அருகில் இருந்து போட்டாவுக்கு போஸ் கொடுக்க முண்டியடிக்கின்றனர். இதையே வரும் பாக்கியமாக கருதக்கூடிய அறிவற்ற மக்களும் உண்டு. கேடு கெட்ட இவர்களின் அருகில் நிற்பதையே பாக்கியமாக கருதும் போது இறைத்தூதருக்கு அருகில் மறுமை நாளில் இருப்பது […]

38) வீண் பேச்சு

வீண் பேச்சு மனிதர்களால் பேசப்படும் மொத்த பேச்சுக்களையும் ஆய்வு செய்தால் அவற்றில் 99 சதவிகிதம் வீண் பேச்சுக்களாகவே இருக்கும். எந்த விதத்திலும் யாருக்கும் பயனில்லாத அர்த்தமற்ற பேச்சுகளில் தாம் பெரும்பாலோனர் ஈடுபடுகின்றனர். தங்களின் பொன்னான நேரங்களை வீண் பேச்சிலேயே கழித்து விடுகின்றனர். தங்களின் முன்னேற்றத்திற்கு இந்த பேச்சு தான் தடையாக இருக்கின்றது என்பதை யாரும் எண்ணிப்பார்ப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு தெருவிலும் இதற்கென்று ஒரு பஞ்சாயத்து மேடை அல்லது குட்டிச்சுவர் இருக்கும். அப்பகுதியில் உள்ள இளைஞர்களும் பெரியவர்களும் அங்கே […]

37) இறைவனை சபிக்காதீர்

இறைவனை சபிக்காதீர் படைத்த இறைவனை சபிப்பது கற்பனையிலும் எண்ணிப்பார்க்கவே முடியாத ஒரு தீமையாகும். ஆனால் அதை இஸ்லாமியர்கள் உள்பட ஒட்டு மொத்த உலகமும் செய்து கொண்டு தான் இருக்கின்றது. பெரும் பெரும் இயற்கை சீற்றங்கள் சுனாமி பூகம்பம் போன்ற பேரழிவுகள் ஏற்பட்டு விட்டால் இறைவனேஉனக்கு கண்ணில்லையா? இரக்கமற்றவனே என்பன போன்ற கடும் கண்டணத்திற்குரிய வாசகங்களை போஸ்டர் அடித்து ஒட்டுகின்றனர் இறைவனை நம்பாதவர்கள் இது போன்ற கயமத்தனத்தை செய்தால் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை இறைவனை நம்பி வழிபடுபவர்கள் தான் […]

36) நோயை சபிக்காதீர்

நோயை சபிக்காதீர் மனிதர்களுள் பெரும்பான்மையினர் தங்களுக்கு வரும் நோயை சபிப்பவர்களாக இருக்கின்றார்கள். சே. சரியா சாப்பிடக்கூட முடியல் எல்லாம் இந்த தலைவலி படுத்தும் பாடு என்பதாக நமக்கு ஏற்படும் நோயை பழிக்கின்றோம். சபிக்கின்றோம். நோய் என்பது இறைவன் தரும் ஓர் சோதனை. அது ஏற்படுவதற்கு முன்பு வரையிலும் அவற்றிலிருந்து பாதுகாக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அதே சமயம் நோய் வந்து விட்டால் ஒரு முஸ்லிம் அதை பழிக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை நீக்குவதற்கான மருத்துவம் செய்ய […]

35) காலத்தை ஏசாதீர்

காலத்தை ஏசாதீர் பொதுவாக மனிதர்கள் யாவரிடமும் ஒரு தீய பழக்கம் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் தங்களுக்கு ஏதேனும் ஒரு துன்பம் நேர்ந்து விட்டால் உடனே காலத்தை திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுமாயின் என் கஷ்ட காலங்க எனக்கு மட்டும் இப்படி நடக்குதுங்க என்று தங்களை ரொம்பவும் நொந்து கொள்கின்றார்கள். பொன்னு கிடைத்தாலும் புதன் கிடைக்காதுன்னு அப்பவே பெரியவங்க சொன்னாங்க நான்தான் கேட்கல. வியாழக்கிழமை வியாபாரத்தை ஆரம்பிச்சு படாதபாடு படுறேன். எல்லாத்துக்கும் இந்த சனியன் பிடிச்ச வியாழக்கிழமை […]

34) இறந்தவர்களை ஏசாதீர்

இறந்தவர்களை ஏசாதீர் இறந்தவர்களை ஏசும் மிக மோசமான குணம் நமது இஸ்லாமிய வட்டத்துக்குள் உலவுகின்றன. இறந்தவர்கள் மீண்டும் உயிர்ப்பெற்று வரமாட்டார் என்ற தைரியத்தில் அவர்களின் மீது துணிந்து பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். இது உடனே களையெடுக்கப்பட வேண்டிய படுமோசமான குணம் என்று நபிகளார் கூறுகின்றார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்து விட்டார்கள்.  அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (புகாரி: 1393)

33) காற்றை திட்டாதீர்

காற்றை திட்டாதீர் ஒரு மனிதர் நபியவர்களுடன் இருக்கும் போது காற்றை திட்டினார். அப்போது நபியவர்கள் காற்றை திட்டாதீர். ஏனெனில் அது இறைவனின் புறத்திலிருந்து) உத்தரவு இடப்பட்டிருக்கின்றது. மேலும் யார் ஒன்றை சபித்து அது அதற்கு (சாபத்திற்கு) உரியதில்லை எனில் அச்சாபம் அவர் மீதே திரும்பி விடும் என்று பதிலளித்தார்கள் அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (திர்மிதீ: 1901) மேற்கண்ட நபிமொழியில் காற்றை சபிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதிக்கின்றார்கள். இப்போதும் கூட ஏதேனும் ஒரு […]

32) சேவலை திட்டாதீர்

சேவலை திட்டாதீர் சேவலை திட்டாதீர்கள். ஏனெனில் அது தொழுகைக்காக எழுப்புகின்றது என்று நபிகள் நாயகம் (எல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர். ஜைத் பின் காலித் (ரலி) (அபூதாவூத்: 4437) சேவலை திட்டக்கூடாது என்று இந்த செய்தியில் கூறப்படுகின்றது. எனவே இதையும் கவனத்தில் கொண்டு முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டும். சேவலைத்தான் திட்டக்கூடாது மற்ற எந்த பிராணியையும் திட்டலாம் என்று எண்ணிவிடக்கூடாது. சேவல் ஒரு விதத்தில் நமக்கு ஓர் நன்மையை விழைவிப்பதினால் அதை திட்டிவிடக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றார்கள் மற்றதை பற்றி […]

31) பெற்றோரை சபிப்பது பெரும்பாவம்

பெற்றோரை சபிப்பது பெரும்பாவம் பெற்றோரை சபிப்பது பெரும்பாவமாகும் என்று நபிகளார் எச்சரிக்கின்றார்கள். விபச்சாரம் இணை வைப்பு போன்ற பெரும்பாவங்களிலிருந்து இலகுவாக விலகி விடுகின்றோம். பெற்றோரை சபிப்பதின் மூலம் இன்னொரு பெரும்பாவத்தை இலகுவாக செய்துவிடுகின்றோம். இந்த பெரும்பாவத்தை விட்டும் இஸ்லாமிய சமூகம் விலக வேண்டும். قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّ مِنْ أَكْبَرِ الكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ» ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் […]

30) பெற்றோரை சபிக்காதீர்

பெற்றோரை சபிக்காதீர் பெற்றோரை பெரிதும் மதிக்கின்ற மார்க்கம் இஸ்லாம். அவர்களின் மனம் நோகும்படி நடந்து கொள்ளக்கூடாது. அவர்களிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். உண்ண உணவு உடுத்த உடை இதையும் தாண்டி அன்பான பராமரிப்பு என அனைத்தையும் பெற்றோர்களுக்காக ஒவ்வொரு பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இப்படிப்பட்ட மார்க்கத்தில் உள்ளவர்கள் பெற்றோர்களை திட்டுகின்றார்கள் என்று சொன்னால் இந்த சமுதாயம் ஒழுக்கமற்று போய் விட்டது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணத்தை காட்ட முடியாது […]

29) பரிந்துரை செய்யும் பாக்கியம்

பரிந்துரை செய்யும் பாக்கியம் மறுமை நாளில் இறைவனின் நாட்டப்படி அவனுடைய அனுமதியுடன் சிலர் சிலருக்கு சாட்சியம் அளிப்பார்கள். பரிந்துரை செய்வார்கள். இறைவன் நாடினால் அந்த அடியார் செய்த பரிந்துரையை ஏற்பான். இல்லையேல் நிராகரிப்பான் எனினும் பிறருக்கு பரிந்துரை செய்யும் வாய்ப்பு நமக்கு கிடைக்குமாயின் மிகப் பெரிய பாக்கியமே. எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துவிடாது. இறைவனின் விருப்பத்திற்குரியவர்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு கிடைக்கும் ஆனால் அதிகமதிகம் சபிப்பவர்கள் வசை பொழிபவர்கள் ஒரு போதும் இந்த பாக்கியத்தை பெறமாட்டார்கள். […]

28) பறிபோகும் நன்மைகள்

பறிபோகும் நன்மைகள் சபிப்பதன் மூலம் நரகிற்கு செல்வதாக இருந்தால் பெண்கள் தான் செல்வார்கள். ஆண்களாகிய நாம் தப்பித்துக் கொள்ளலாம் ஆண்களாகிய நாம் திட்டியிருந்தால் அதற்கு குறைந்தபட்ச தண்டணைதான் கிடைக்கும். நரகம் அதற்கு தண்டனையாய் ஒரு காலத்திலும் கிடைக்காது என்று தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள் பெண்களை தனியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது விஷயத்தில் எச்சரித்துள்ளார்கள் என்றாலும். ஆண்களாகிய நாமும் பிறரை திட்டுகின்ற விஷயத்தில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். சில சமயம் பிறரை நாம் திட்டியிருந்தது நம்மை […]

27) பெண்களே உஷார்

பெண்களே உஷார் இந்த விஷயத்தில் பெண்களை தான் அதிகம் எச்சரிக்க வேண்டியது உள்ளது மிகச்சாதாரணமாய் கெட்ட வார்த்தைகளை சகட்டு மேனிக்கு பொரிந்து தள்ளுகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள பெண்களை பார்த்தால் இதை எளிதாக புரிந்து கொள்ளலாம் தண்ணீர் பிடிக்க வரிசையில் காத்திருப்பார்கள். ரொம்ப நேரம்நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கும். திடீரென்று வரிசையில் தள்ளுமுள்ளு ஏற்படும். அடுத்து கெட்டவார்த்தைகளை உதிர்க்க ஆரம்பிப்பார்கள். பிறகு நீயா நானா? ஒரு கை பார்த்திவிடுவோம் என்ற ரேஞ்சுக்கு தரம் தாழ்ந்து பேசத்துவங்கி விடுவார்கள் இத்தோடு பெண்கள் […]

26) சபித்தல் கொலைக்கு சமம்

சபித்தல் கொலைக்கு சமம் நபி (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும், அவர்கள் இருவரும் போரிட்டுக்கொள்வது (கொலை செய்வது) இறை நிராகரிடப்பாகும் என்று கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி அவர்கள் என்னிடம் கூறினார்கள்.  (புகாரி: 48) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வ்தும் அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும் […]

25) சபிக்காதீர்

சபிக்காதீர் இஸ்லாமியர்களிடம் இஸ்லாம் கூறும் ஒழுக்கத்தினை எதிர்பார்க்க முடிவதில்லை. நடைமுறையில் தான் ஒழுக்கங்களை காணமுடியாது என்று பார்த்தால் பேச்சில் கூட ஒழுக்கத்தை காண்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன. தெருவோரம் நடந்து சென்றால் இரு சிறுவர்கள் சண்டையிட்டுக் கொள்வதை பார்க்க முடிகின்றது அவ்வாறு சண்டையிடும் போது அந்த சின்னஞ்சிறுசுகள் விடும் வார்த்தையைத்தான் கேட்க முடியவில்லை. அந்தளவிற்கு அநாகரீகமான பண்பாடற்ற வார்த்தைகள் சாரை சாரையாய் குற்றால மழைச்சாரலாய் பொழிகின்றன. வளரும் தலைமுறையிடமிருந்து இந்த அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை எப்படி கேட்க […]

24) இறைவசனங்களை…

இறைவசனங்களை… அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேற பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள் (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான் நயவஞ்சகர்களையும் (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.  (அல்குர்ஆன்: 4:140) ➚  இறைவசனங்களை கேலி செய்யக்கூடாது என்று இந்த வசனத்தில் இறைவன் அறிவுரை கூறுகின்றான். அதெப்படி இறை வசனங்களை கேலி செய்ய முடியும்? இறைவசனங்களுக்கு என்று ஒரு […]

23) கேலி செய்தல்

கேலி செய்தல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களின் உரிமைகள் குறித்து பின் வருமாறு குறிப்பிட்டார்கள். உங்களில் ஒருவர் தம் மனைவியை அடிமையை அடிப்பதுபோல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக படுக்க நேரலாம். (இது முறையா. பிறகு (உடலிலிருந்து பிரியும்) வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து (அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) என் சிரிக்கிறார்? என்று […]

22) தீமையில் பங்கெடுக்காதீர்

தீமையில் பங்கெடுக்காதீர் மனிதர்களில் பெரும்பாலோனர் தாங்கள் தீமையை செய்யாவிடிலும் பிறர் செய்கின்ற தீமையைில் பங்கெடுக்க தவறுவதில்லை. பிறர் ஏதேனும் தீமையை செய்தால் அதை ரசித்து ஒருவர் புறம் பேசினால் அதை எத்தனை மணி நேரம் ஆனாலும் பார்க்கின்ற மிக மோசமான மனநிலையில் ஊறித்திழைத்து விட்டனர் காது கொடுத்து கேட்க தயார் ஆணும் பெண்ணும் கட்டிப்புரண்டால் அதை இமை கொட்டாது பார்த்து ரசிக்கவும் தயார் என்கின்றனர் அதே பாணியில் இவர்கள் பரப்பும் அவதூறை இது அவதூறு என்று தெரிந்த […]

21) புறம் தரும் மண்ணறை வேதனை

புறம் தரும் மண்ணறை வேதனை கோள் சொல்பவர்கள் சொர்க்கம் புக முடியாது என்பதோடு மண்ணறையிலும் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள்.  حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مِنْ حِيطَانِ المَدِينَةِ، أَوْ مَكَّةَ، فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي […]

19) விசாரிக்கும் தருவாயில்

விசாரிக்கும் தருவாயில் ஒருவரைப்பற்றி நம்மிடம் விசாரிக்கப்படுகின்றது. அவரின் கேரக்டர் பற்றி நம்மிடம் கோரப்படுகின்றது. இந்த நிலையில் புறம் பேசக்கூடாதே பிறர் குறையை மறைக்க வேண்டுமே என்பதை காரணம் காட்டி விசாரிக்கப்படுபவரின் குறையை மறைத்து விடக்கூடாது. ஏனெனில் இந்த நிலையில் உண்மையை கூறாவிடில் விசாரிப்பவர் பாதிக்கப்படுவார். எனவே இது போன்ற சூழ்நிலைகளில் பிறரது குறையை வெளிப்படுத்தியே ஆகவேண்டும். இந்த சமயத்தில் அவரின் குறையை மறைத்தால் தான் குற்றமாகும்.  அவ்வாறே நான் இத்தாவை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் […]

20) மலிவாகி போன மான விளையாட்டு

மலிவாகி போன மான விளையாட்டு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பிறர் உயிரை எடுப்பது எப்படி ஹராமோ அது போலவே பிறர் மானத்தை பறிப்பதும் ஹராமே கொலை செய்வதில் வேண்டுமானால் முஸ்லிம்கள் ஈடுபடாமல் இருக்கலாம். ஆனால் அவதூறு பரப்புவதிலும் பிறர் மானத்தை பறிப்பதிலும் மற்றவர்களை மிஞ்சும் வகையில் முஸ்லிம்கள் செயல்படுகின்றனர். சினிமாக்காரர்கள் போன்ற பிரபலங்களின் மீது கிளம்பும் அவதூறை விடவும் நல்ல இயக்கத்தலைவர்களின் மீதும் அப்பாவி பெண்களின் மீதும் நல்லோர்களின் மீதும் தான் அவதூறு எனும் சேற்றை அளவில்லாமல் அள்ளிவீசுகின்றனர். […]

18) புறம் பேசுவதை தவிர்க்க ஒரு நல்வழி

புறம் பேசுவதை தவிர்க்க ஒரு நல்வழி பிறர் குறையை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதே புறம் என்று பார்த்தோம். இதனால் கிடைக்கும் தண்டணைகளை நாம் எண்ணிப்பார்த்தாலே இதிலிருந்து விலகிவிடுவோம் என்றாலும் இன்னுமொரு வழியையும் நாம் கடைப்பிடிக்கலாம். பிறரைப்பற்றி ஒரு குறை நமக்கு தெரியவருமாயின் அதை மறைத்து விடவேண்டும். அவ்வாறு மறைத்தால் நமது குறைகளை இறைவன் மறுமையில் மறைத்து விடுகின்றான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் மற்றோர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்தால் அவருளடைய குறையை அல்லாஹ் […]

17) தீயவர்களைப்பற்றி எச்சரிக்கையூட்ட

தீயவர்களைப்பற்றி எச்சரிக்கையூட்ட புறம் இஸ்லாத்தில் ஹராம் என்பதில் எள்ளவும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. எனினும் சில சந்தர்ப்பங்களில் (புறம் பேசுவது) பிறர் குறையை வெளிப்படுத்துவது மார்க்கத்தில் அனுமதிக்கப்படுகின்றது. இதை நாம் சுயமாக கூறவில்லை நபிகளாரின் நடைமுறையிலிருந்தே கூறுகின்றோம்.  ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) நபி (ஸல்) அவர்களிடம் அமைதி கேட்டார் அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர் என்று அவரைப் பற்றிச் சொன்னார்கள். (வீட்டுக்கு உள்ளே) அவர் […]

16) பறிக்கப்படும் மானம் கிழிக்கப்படும் முகம்

பறிக்கப்படும் மானம் கிழிக்கப்படும் முகம் புறம் எவ்வளவு பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் ஏதோ நேரப்போக்கிற்காக பேசிக்கொள்கிறோம். ஆனால் புறம் பேசுவதின் மூலம் ஒருவரின் மானம் விஷயத்தில் விளையாடுகின்றோம் அவரை தேவையில்லாமல் அவமானப் படுத்துகின்றோம் என்பதை வசதியாக மறந்து விடுகிறோம் மற்றவர்களின் மானத்தை புறம் பேசி பறித்தவர்களின் கதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.  நான் மிஃராஜிக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தார்களை கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்தினாலான நகங்கள் […]

15) கனவில் பொய்

கனவில் பொய் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தாம் காணாத கனவைக்கண்டதாக வலிந்து சொல்வாரானால் அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால். அவரால் ஒருபோதும் அப்படிச்) செய்ய முடியாது அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (புகாரி: 7042) இக்காலத்து மக்கள் நபிகளாரை கனவில் காண்பது என்பதும் பொதுவாக இறைவனை கனவில் காண்பது என்பதும் சாத்தியமில்லா ஒன்று. இதில் கடுகின் முனையளவும் உண்மையில்லை […]

14) நபியின் நரகம் கிடைப்பது மெய்

நபியின் நரகம் கிடைப்பது மெய் சாதாரணமாக பொய் பேசுவதே எந்த அளவிற்கு நமது மார்க்கத்தில் கண்டிக்கப்பட்டுள்ளது என்பதை அதற்கான கடுமையான தண்டனைகளோடு அலசினோம். அதுவே நமது இறைத்தூதர் ஒப்பற்ற தலைவர் மனிதருள் மாணிக்கமாய் திகழ்ந்த மாற்றாரும் போற்றிப் புகழ்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பொய் கூறினால்…  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் சொல்லாததை நான் சொன்னதாக என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில் என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான் (புகாரி: […]

13) முகம் சிதைக்கப்படும்

முகம் சிதைக்கப்படும் (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி) அப்படியே நாங்கள் சென்று மல்லாந்து படுத்திருந்த ஒரு மனிதரை அடைந்தோம் அவரது தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று கொக்கியால் அவரது முகவாயைப் பிடரி வரை கிழித்தார், (அவ்வாறே) அவரது மூக்குத் துவாரத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார் -அல்லது பிளந்தார்.- பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் […]

12) நரகில் சேர்க்கும்

நரகில் சேர்க்கும் பொய் சொல்வதினால் நமது நோன்புகள் பாழாகுவதோடு நின்று விடாது. மாறாக நம்மை நரகில் கொண்டு சேர்க்கும் வேலையை இந்த பொய் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கும். பொய் பேசுவதினால் மட்டும் நரகிற்கு போய்விடுவோமா? சர்வ நிச்சயமாய் ஒரு மனிதன் பொய் சொல்வதில் கவனமற்று அலட்சியமாக இருக்கின்றான் எனில் அவனிடம் சகல நரகில் தள்ளும் தீமைகளையும் சர்வ சாதாரணமாய் செய்ய ஆரம்பித்து விடுவான். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கின்றார்கள் நபி (ஸல்) […]

11) நோன்பு பாழாகும்

நோன்பு பாழாகும் ஆம். நாம் இது நாள் வரையிலும் பசித்திருந்து தாகித்திருந்து வைத்த நோன்பின் நன்மைகள் அனைத்தும் பாழாகிவிடும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை பாருங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலி (புகாரி: 1903) நோன்பின் நோக்கம் நாம் பசியை உணர வேண்டும் ஏழைகள் படும் […]

10) பொய் சொல்லாதீர்

பொய் சொல்லாதீர் ஒரு முஸ்லிம் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் அதற்கு மாற்றமாக சர்வ சாதாரணமாய் பொய் பேசுவதை தான் பார்க்க முடிகின்றது. எதற்கெடுத்தாலும் பொப் அற்பமான சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பொய் பேசுவதை காண முடிகின்றது. நேற்று ஏன் சொற்பொழிவுக்கு வரவில்லை என்று கேட்டால் சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள் அதான் வரமுடியலை என்று நாக்கூசாமல் பொய் சொல்கின்றோம். போனில் ஏங்க எங்கங்க இருக்கிறீங்க? என்று மனைவி கேட்டால் அதற்கும் தயாராய் ஒரு […]

09) உண்மையை உரைத்த ஒப்பற்ற தோழர்கள்

உண்மையை உரைத்த ஒப்பற்ற தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வார்த்தெடுத்த அருமைத் தோழர்கள் நம்மை போன்று வாயில் வடை சுடுபவர்களோ வாய்ச்சவடால் விடுபவர்களோ இல்லை. இதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு சமயம் உண்மையை பேசியும் காட்டியுள்ளார்கள். தாங்கள் செய்த பெரும் பெரும் தவறுகளையும் தயங்காமல் ஒப்புக் கொண்டுள்ளார்கள். இதை ஒப்புக் கொண்டால் நம்மை மற்றவர்கள் கேவலமாக பார்ப்பார்களே என்று இவ்வுலகை கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாமல் நாளை மறுமையில் நம்மை படைத்த இறைவன் நம்மை கேவலமாக பார்த்து […]

08) உண்மையை பேசுவோம்

உண்மையை பேசுவோம் நம்முடைய நாவின் மூலம் உண்மையை மட்டுமே பேசவேண்டும். உண்மைக்குப் புறம்பானதை ஒரு போதிலும் பேசிவிடக்கூடாது. நாம் ஒரு விஷயத்தை பேச வாயெடுப்பதற்கு முன் அது உண்மைதானா? என்று உறுதியாக அறிந்த பிறகே பேச வேண்டும். ஒரு மனிதன் உண்மையை மட்டுமே பேசி பழகினால் அவனிடம் உள்ள தீமைகள் வெகு சீக்கிரத்தில் காணமல் போய்விடும் சொர்க்கத்திற்குரியவர்களாக நம்மை மாற்றுவதற்கு உண்மை ஓர் பலமான ஆயுதம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மையே பேசுங்கள். உண்மை […]

07) நியாயத்தை சொல்வோம்

நியாயத்தை சொல்வோம் இஸ்லாமியர்களில் பலரும் ஏதோ பேசுவோம் என்ற அடிப்படையில் நியாயமற்றதை பேசிவருகின்றனர். அநியாயத்தை தட்டிக் கேட்க தயங்குகின்றனர். இந்த தயக்கத்தை அநியாயத்ளதை பேசுவதில் கூட செலுத்துவதில்லை. அரசு சார்பில் அல்லது மற்றவர்கள் சார்பில் மக்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டல்அவர்களிடமிருந்து சுயலாபம் பெறவேண்டும் என்ற நோக்கத்திற்கு அவர்களுக்கு வக்காலத்து வாங்கி அவர்கள் செய்த அநியாயத்தை நியாயமாக்கி பேசிவருகின்றனர். ஒரு முஸ்லிம் இது போன்ற அநியாயத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கலாமா? ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் […]

06) நரகிலிருந்து தப்பிக்க

நரகிலிருந்து தப்பிக்க இஸ்லாமியர்கள் அனைவர்களும் சொர்க்கத்தில் நுழைவதையும் நரகிலிருந்து தப்பிப்பதையுமே குறியாக லட்சியமாக கொண்டுள்ளனர். ஒவ்வொருவர்களும் அவரவர்களுக்கு இயன்ற வணக்க வழிபாடுகளின் மூலம் இந்த லட்சியத்தை நிறைவேற்றிட முயல்கின்றனர். பலவழிகளின் மூலமும் நரகிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். அதில் நல்ல சொல்லை சொல்வதின் மூலம் கூட நம்மை நரகிலிருந்து காப்பாற்றி அந்த பேரிடரிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று நபிகளார் சொல்லித் தருகின்றார்கள் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் […]

05) நல்ல சொல் ஓர் தர்மம்

நல்ல சொல் ஓர் தர்மம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதனின் உடலிலுள்ள ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது. அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும் அறிவிப்பவர்: ஆபூஹுரைரா (ரலி) (புகாரி: […]

03) சொர்க்க நரகத்தை தீர்மானிக்கும் நாவு

சொர்க்க நரகத்தை தீர்மானிக்கும் நாவு இறைவன் தந்த உடலுறுப்புகளில் எத்தனையோ இருக்க நாவைப்பற்றி பேசுவதன் அவசியம் என்ன? என்று சிலருக்கு தோன்றும். நியாயமே. ஏன் பேசுகிறோம்? மற்ற உறுப்புகளின் மூலம் (மறை உறுப்பைத்தவிர) ஏற்படும் விளைவை விடவும் நாவு மூலம் ஏற்படும் விளைவு ஒவ்வொரு முஸ்லிமையும் அச்சுறுத்துகின்ற விதத்தில் அமைந்துள்ளது. மற்ற உறுப்புகளை அடக்கி கட்டுக்குள் வைத்திருப்பதை விடவும் நாவை அடக்கி கட்டுக்குள் வைப்பது சிரமமான ஒன்றாகவே இருக்கின்றது. வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பலநாடுகள் தமக்குள் சண்டையிட்ட தற்கும். […]

04) நல்லதை பேச வேண்டும்

நல்லதை பேச வேண்டும் இறைவன் நாவை தந்திருக்கின்றான் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசி விடக்கூடாது மனதில் உதிப்பவைகளையெல்லாம் வார்த்தையாக்கி நாவின் மூலம் வெளியே கொட்டி விடக்கூடாது. எவற்றை போசவேண்டுமோ அவற்றை மட்டுமே ஃபில்டர் செய்து பேசவேண்டும். நாம் எவற்றை பேசவேண்டும் என்பதை இறைவனும் இறைத்துதரும் சொல்லித்தருகின்றார்கள். (முஹம்மதே) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான். (அல்குர்ஆன்: 17:53) ➚  நாம் பேசும் பேச்சுகள் யாவும் ஆழகானதாய் […]

02) ஒரு சமுதாய அழிவின் காரணம் நாவு

ஒரு சமுதாய அழிவின் காரணம் நாவு உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான் என்று அவர்கள் கேட்டனர். அது கிழடும் கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! என்று அவர் கூறினார் உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அதன் நிறம் என்ன என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான் என்று அவர்கள் கேட்டனர். அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு […]

01) பதிப்புரை

பதிப்புரை இறைவன் நமக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியிருக்கின்றான். அவன் நமக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகளில் இஸ்லாம் என்பது உன்னதமான ஓர் அருட்கொடை நாமெல்லாம் இறையருளின் காரணத்தாலே முஸ்லிம்களாக இருக்கின்றோம். இல்லையெனில் நாமும் ஏதேனும் கல்லை வணங்கி கொண்டிருப்பவர்களாகவோ அல்லது பல கடவுள் கொள்கை கொண்டவர்களாவோ இருந்திருப்போம். நரக நெருப்பிலிருந்து நம்மை காப்பாற்றக்கூடிய இஸ்லாம் எனும் பொக்கிஷம் ஒரு நிகரற்ற அருட்கொடையே இஸ்லாத்திற்கு பிறகு அருட்கொடையாக இறைவன் நமக்கு தந்திருக்கின்ற நாவை குறிப்பிடலாம்.  அவனுக்கு இரண்டு கண்களையும் நாவையும் இரு […]