Tamil Bayan Points

13) முகம் சிதைக்கப்படும்

நூல்கள்: நாவை பேணுவோம்

Last Updated on July 12, 2023 by

முகம் சிதைக்கப்படும்

(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)

அப்படியே நாங்கள் சென்று மல்லாந்து படுத்திருந்த ஒரு மனிதரை அடைந்தோம் அவரது தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று கொக்கியால் அவரது முகவாயைப் பிடரி வரை கிழித்தார், (அவ்வாறே) அவரது மூக்குத் துவாரத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார் -அல்லது பிளந்தார்.-

பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான் அல்லாஹ் தூயவன் இவர்கள் இருவரும் யார்? என்று கேட்டேன். அவ்விருவானிவரும் என்னிடம் செல்லுங்கள் செல்லுங்கள் என்றனர்.

(பிறகு விளக்கம் கூறுகையில்) மூக்குத் துவாரம் கண் ஆகியவற்றை பிடரி வரை கிழிக்கப் பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தமது வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும் என்றனர்

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)

நூல் : புகாரி -7047

பொய் சொல்வது எந்த அளவிற்கு பாரதூரமான தண்டனையை பெற்றுத்தரும் என்பதை நபிகளாரின் இந்த விளக்கத்தை விட வேறு வார்த்தைகளில் விளக்க தேவையில்லை. மறுமை நாளில் நமது முகம் சிதைக்கப்படுவதை துன்புறுத்தப்படுவதை நினைத்து பார்தால் இப்போதே நமது மனம் பதறுகின்றது.

இதை நம்மில் யாராவது விரும்புவார்களா? ஒரு போதும் விரும்ப மாட்டோம். தண்டனையை விரும்ப மாட்டோம் என்பதில் உறுதியாய் இருக்கின்றோம். ஆனால் இதை பெற்றுத்தருகின்ற பொய் சொல்வதை மிகவும் விரும்புகின்றோம். இந்த பொய் களையெடுத்தால் மட்டுமே இத்தண்டணையிலிருந்து தப்பிக்க இயலும் என்பதை எந்த ஒரு முஸ்லிமும் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது.