Tamil Bayan Points

44) புகழ் பாடுவது

நூல்கள்: நாவை பேணுவோம்

Last Updated on July 12, 2023 by

புகழ் பாடுவது

முஸ்லிம்கள் அனைவர்களும் இறைவனை மட்டுமே போற்றிப் புகழ்பவர்களாக இருக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே என்பதுதான் இஸ்லாத்தின் தாரகமந்திரம். நமது நாவால் புகழ்வதற்குரிய முழுத்தகுதியையும் பெற்ற ஒருவன் நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மட்டுமே என்று ஒவ்வொரு முஸ்லிம்களும் உறுதியாக நம்பியிருக்க வேண்டும். இதையே நாம் அனைவரும் ஒவ்வொரு தொழுகையிலும் அல்ஹம்து ஒதி மெய்ப்பிக்கின்றோம்.

இறைவனின் தூதர் என்பதினால் உத்தம நபி ஸல் அவர்களையும் நாம் புகழலாம். எனினும் இறைவனை புகழ்வதற்கு ஒப்பாக நபியவர்களை ஒரு போதும் எல்லைமீறி புகழ்ந்து விடக்கூடாது அவ்வாறு புகழ்வதை நபியவர்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள் அதை வன்மையாக கண்டித்தும் உள்ளார்கள்.

அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மர்யமின் புதல்வர் ஈசா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் சொல்லுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல் : புகாரி 6830

நபிகள் நரயகம் ஸல் அவர்களையே எல்லைமீறி புகழக் கூடாது எனும் போது மற்றவர்களை பற்றி குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நபிகளாரை விட உயர்ந்த சிறந்த ஒரு மனிதர் உலகத்தில் இல்லவே இல்லை இனி பிறக்கப்போவதும் இல்லை. இந்த நம்பிக்கையில் ஒரு முஸ்லிம் குறை வைத்தால் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை

ஆனால் மக்களில் சிலர் சக தோழர்களை பிற மக்களை எப்பவும் புகழ்ந்து கொண்டேயிருக்கின்றார்கள். அவர்களுக்கு இறைவன் ஏதேனும் ஒரு வழத்தை வழங்கியிருப்பான். அதை குறிக்கும் விதமாக உங்கள மாதிரி வருமா நான் எங்கே நீங்க எங்கே என்கிறார்கள். ஒரு சிறந்த எழுத்தாளர் இருந்தால் உங்கள அடிக்க இனி ஒருத்தன் பிறந்தது தான் வரனும் என்பன போன்ற புகழ் வார்த்தைகளை அள்ளித் தெரிக்கின்றார்கள்.

ஒரு சிறந்த பேச்சாளரைக்கண்டால் உங்க பேச்சுக்கு ஈடு இணை எதுவுமில்லை என்று புகழ்கின்றார்கள். சமீபத்தில் (அல்லது) ஒரு சமயம் ஒருசுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்? உரை நிகழ்த்த போகிறார் என்று விளம்பரம் செய்யப்படுகின்றது. கூடவே மெளலானாவின் பேச்சை ஒரு நிமிடம் கேட்டால் ஈமான் பெருக்கெடுத்து ஓடும்?. இவரைகண்கொண்டு பார்ப்பதே பெரும் பாக்கியம் என்பதாக ஒவர் பில்ட கொடுக்கப்பட்டிருந்தது. இது போன்று புகழ்பாடுவதை சுன்னத் ஜமாஅத் என்போர் மிகச் சாதாரணமாய் செய்கின்றார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 

இன்னும் சில வகையினர் உண்டு எப்போதும் செல்வந்தர்களை ஒட்டிக்கொண்டேயிருப்பவர்கள். அவர்களிடமிருந்து பெறப்படும் உதவிகளை தக்கவைப்பதற்காக சதா அவர்களை புகழ்ந்து புகழ்ந்து அவர்களின் துதிபாடிகளாக மாறிவிடுவார்கள். உச்சி மண்டையை பிளக்கும் விதமான சுட்டெரிக்கும் வெயில் அடித்தாலும் நீங்க நம்ம ஊர்ல இருக்கிறனாலதான் கொஞ்சமாவது மழை பெய்கிறது என எல்லையின்றி புகழ்வார்கள். இது போன்று சக தோழர்களை நோக்கி புகழ் வார்த்தைகளை வீசுவதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வன்மையாக கண்டிக்கின்றார்கள். 

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அளவு கடந்து புகழ்ந்து கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது அவர்கள் அந்த மனிதரின் முதுகை அழித்துவிட்டீர்கள் அல்லது ஒடித்து விட்டீர்கள் என்று (கடிந்து) கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆபூமூசா (ரலி)

நூல் : புகாரி – 6060

ஒருவரை புகழ்வது அவரின் கழுத்தை வெட்டுவதற்கு சமம் என்று கூறி யாரும் பிறர்களை புகழக்கூடாது என்று உபதேசிக்கின்றார்கள் (அனுமதிக்கப்பட்ட புகழைப்பற்றி பின்னால் விளக்கப்பட்டுள்ளது. எனவே அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள்.

பிறரை புகழ்வதை பற்றி ஒரு சில முஸ்லிம்கள் தவறாக விளங்கி வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபரை நேரடியாக புகழ்வதைத்தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கண்டித்துள்ளார்கள். அவரைப்பற்றி பிறரிடம் புகழ்ந்து கூறலாம் அதை நபியவர்கள் கண்டிக்கவில்லை என்பதாக எண்ணுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். ஏனெனில் ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் புகழ்ந்து கூறுவதையும் நபிகளார் கண்டித்துள்ளார்கள்.

ஒரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஒருவர் அவரைப் பற்றிப் பகழ்ந்துரைத்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் உனக்குக் கேடுதான் உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீரே! என்று பல முறை கூறினார்கள். பிறகு உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால் இன்னின்ன விதமாக எண்ணுகிறேன் என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகச் கருதினால் மட்டுமே கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு செய்பவன்ஆவான். அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று (யாரும்) கூற வேண்டாம். 

அறிவிப்பவர்: ஆபூபக்ரா நுஃபைட பின் ஹாரிஸ் (ரலி)

நூல்: புகாரி – 6057

இந்த செய்தியை நன்கு கவனித்தால் பொதுவாக யாரையும் யாரும் புகழக்கூடாது என்று தான் நபிகள் நாயகம் கூறுகின்றார்களே தவிர அவர் முன்னிலையில் தான் புகழக்கூடாது. அவரைப்பற்றி மற்றவர்களிடம் புகழலாம் என்றல்லாம் பிரித்து பேசவில்லை என்பதை அறியலாம்.

மேலும் இந்த ஹதீஸின் இறுதியில் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று (யாரும்) கூற வேண்டாம். என்ற வாசகம் பொதுவாக புகழ்வதை கண்டிக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது அவரைப்பற்றி மற்றவர்களிடம் புகழ்ந்தாலும் இறைவனை முந்திக் கொண்டு நாம் சர்டிபிகேட் வழங்குகிறோம் என்ற குற்றத்தை செய்தவர்களாகவே ஆவோம். எனவே இஸ்லாமியர்கள் தங்கள் நாவை புகழ்பாடுதிலிருந்தும் காக்க.காக்க..