Author: Mukthiyaar Basha

ஏற்கப்படும் துஆக்கள் யாவை?

துஆக்கள் ஏற்கப்படும் நேரங்கள் யாவை? முஹம்மத் ஜெஸ்மீர் பதில்: எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்தார்களோ அந்த முறையில் செய்யப்படும் எல்லா பிரார்த்தனைகளும் இறைவனால் ஏற்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பிரார்த்தனை ஏற்கப்படும்; மற்ற நேரங்களில் ஏற்கப்படாது என்பது இஸ்லாத்தில் இல்லை. ஆயினும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ள சந்தர்ப்பங்கள் பற்றி ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். இரவின் கடைசி நேரம் இரவை மூன்றாகப் […]

தீர்மானங்கள் போடும் போது தக்பீர் கூற வேண்டுமா?

தீர்மானங்கள் போடும் போதும், முக்கியக் கோரிக்கைகளை எழுப்பும் போதும் அல்லாஹு அக்பர் என்று கூறலாமா? அதற்கு ஆதாரங்கள் உள்ளனவா? பதில்: மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும் போதும், அந்த மகிழ்ச்சியான செய்தியைப் பிறரிடம் சொல்லும் போதும் அதை அங்கீகரிப்பது போல் அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளது. முக்கியமான காரியங்கள் நிகழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கும் நேரடியான சான்றுகள் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் அல்லாஹு அக்பர் […]

தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ எது ?

வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின் اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَتَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ அல்லாஹும்ம ஃகலக்(த்)த நப்[F]ஸீ, வஅந்(த்)த தவப்பா[F]ஹா, ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா, வஇன் அமத்தஹா ப[F]ஃக்பி[F]ர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆபி[F]யா என்று ஓத வேண்டும். ஆதாரம்:(முஸ்லிம்: 4887) ➚ பொருள் : இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். […]

வெள்ளிக்கிழமை துஆ ஏற்கப்படும் நேரம் எது?

வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பின்வரும் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. 1409و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ ح و حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا مَخْرَمَةُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ […]

ரஹ், அலை, ஸல், ரலி – என்றால் என்ன?

கேள்வி: முன் சென்றவர்களின் பெயருக்குப் பின்னால் ஸல், அலை, ரலி, ரஹ் என்றெல்லாம் முஸ்லிம்களாகிய நீங்கள் குறிப்பிடுவதன் கருத்து என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். எப்படி விளக்கம் கூறுவது? – தஸ்லீம், சென்னை. பதில்: ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கமாகும். எழுத்தில் ஸல் என்று கூறப்பட்டாலும் வாசிக்கும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும். அவர் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும். சாந்தியை வழங்கட்டும் என்பது இதன் பொருள். […]

ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனில் உள்ள திக்ருகளைக் கொண்டு திக்ர் செய்யலாமா?

ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனில் உள்ள திக்ருகளைக் கொண்டு திக்ர் செய்யலாமா? அது எண்ணுவதற்கு எளிதாக உள்ளது. பதில் மார்க்க அறிவு இல்லாதவர்களின் அப்ளிகேசன்கள் பல உள்ளன. அல்லாஹ்வை திக்ரு செய்வதாக இருந்தால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் உள்ளவைகளைத் தான் திக்ரு செய்ய வேண்டும். ஆதாரமற்றவைகளையும், பலவீனமான ஹதீஸ்களில் உள்ளதையும் கொண்டு திக்ர் செய்தால் அவை திக்ராக ஆகாது. சரியான திக்ருகள் தானா என்று உறுதி செய்து கொள்ளவும். இதற்கு துஆக்களின் தொகுப்பு எனும் நூல் துணை செய்யும். இந்த திக்ரை […]

09) அவ்லியாக்களாக கருதப்பட்ட சிலருக்கு நரகம்!

மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள் உண்மையில் நல்லடியார்களாக இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்பது இஸ்லாத்தின் கொள்கை. உலகில் நல்லடியார்களாகக் கருதப்பட்ட பலர் நரகில் கிடப்பார்கள். கெட்டவர்களாகக் கருதி ஒதுக்கப்பட்டவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். “தடுப்புச் சுவர் மேல் இருப்போர், (நரகிலுள்ள) சிலரை அழைப்பார்கள். […]

08) இப்லீஸ் தஜ்ஜால் ஆகியோர் அற்புதம் செய்வது எப்படி?

அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் சூனியத்துக்கு ஆற்றல் இல்லை என்று நாம் கூறி வருகிறோம். சூனியக்காரன் எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று நம்புவது அவனை அல்லாஹ்வைப் போல் கருதியதாக ஆகும் என்று நாம் கூறுகிறோம். இந்த வாதத்துக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் சில எதிர்க் கேள்விகளையே இதற்குப் பதிலாக முன்வைக்கிறார்கள். அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்றால் இப்லீஸ் எப்படி […]

07) ஒருவர் அற்புதம் செய்வது வேறு! அவரிடம் அற்புதம் நிகழ்வது வேறு!

நபிமார்கள் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் எதுவும் அவர்களால் செய்யப்பட்டவை அல்ல. அற்புதங்கள் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாக வழங்கப்படவும் இல்லை. மக்கள் முன்னிலையில் அற்புதம் செய்துகாட்ட அல்லாஹ் நாடும் போது நபிமார்கள் வழியாக நிகழ்த்திக் காட்டினான் என்பது தான் அற்புதங்களைப் புரிந்து கொள்ளும் சரியான முறையாகும். ஒருவர் ஒரு காரியத்தை தாமாகச் செய்வதற்கும், அச்செயல் அவரிடம் வெளிப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம். கோமாவில் கிடக்கும் ஒருவன் எழவே மாட்டான் என்று எல்லா […]

06) நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி?

இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதைத் திருக்குர்ஆனும் சொல்லிக்காட்டுகிறது. மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர்வழி வந்தபோது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது திருக்குர்ஆன் 17:94 இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே […]

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா

பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள். صحيح البخاري 5504 – حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ: أَنَّ امْرَأَةً ذَبَحَتْ شَاةً بِحَجَرٍ، «فَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَأَمَرَ بِأَكْلِهَا» وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنَا نَافِعٌ، أَنَّهُ […]

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم الكبير للطبراني 5976- حَدَّثَنَا الْحَسَنُ بن عَلِيٍّ الْفَسَوِيُّ، حَدَّثَنَا خَلَفُ بن عَبْدِ الْحَمِيدِ السَّرَخْسِيُّ، حَدَّثَنَا أَبُو ‏الصَّبَّاحِ عَبْدُ الْغَفُورِ بن سَعِيدٍ الأَنْصَارِيُّ، عَنْ أَبِي هَاشِمٍ الرُّمَّانِيِّ، عَنْ زَاذَانَ، عَنْ سَلْمَانَ، عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ […]

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்களுடைய முகத்தையும் இரு முன் கைகளையும் கரண்டைக்குக் கீழ் உள்ள கால் பகுதிகளையும் மறைக்காமல் இருக்கலாம். மற்ற பாகங்களை மறைக்க வேண்டும். இம்முறை ஹிஜாப் பர்தா என்று இஸ்லாமிய வழக்கில் சொல்லப்படுகின்றது. பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை மேற்கண்ட விதிமுறைகளுக்கு […]

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் தான் மர்ஹூம் مَرْحُوْم என்பது. ரஹ்மத் رَحْمَة என்றால் அருள். மர்ஹூம் مَرْحُوْم என்றால் அருள் செய்யப்பட்டவர் என்று பொருள். இந்த வடிவத்தில் அமைந்த சொற்கள் இஸ்முல் மப்வூல் اِسْمُ الْمَفْعُوْل எனப்படும். நபிகள் காலத்திலும் அதைத் தொடர்ந்த பல நூற்றாண்டுகளிலும் மரணித்தவரைக் குறிக்க மர்ஹூம் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. எத்தனையோ நபித்தோழர்களைப் பற்றியும், தாபியீன்களைப் […]

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா?

இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் பணிகளைச் செய்ய அனுமதியில்லை என்று சிலர் கூறுகிறார்கள். கீழ்க்காணும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள் صحيح مسلم 4177 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ قَالُوا حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ […]

இறைச்செய்தியை இறுகப் பிடித்த இப்ராஹீம் நபி (அலை)

அல்லாஹ்வின் அருளால் தமிழக முஸ்லிம்களிடம் தவ்ஹீது எனும் ஏகத்துவ எழுச்சி ஏற்படுவதற்கு முன்பாக தவ்ஹீது கொள்கை அவர்களிடம் இடம் பிடிக்காமல் இல்லை. இணை வைத்தல், தர்ஹா வழிபாடு, தாயத்து தட்டு போன்றவை கூடாது என்ற சிந்தனை மக்களில் ஒரு பகுதியினரிடம் இருக்கவே செய்தது. அதனால் தான் தவ்ஹீது எழுச்சி வருவதற்கு முன்பே தமிழக முஸ்லிம்கள் இரு அணியினராக இருந்து வந்தனர். இப்போதும் அப்படியே இருந்து கொண்டிருக்கின்றனர். ஒரு கூட்டம் அல்லாஹ்வை மட்டும் வணங்கிக் கொண்டு தர்ஹா வழிபாட்டை […]

போதையின் பிடியில் சமுதாய இளைஞர்கள்

நம்மைப் போல் நமது பிள்ளைகள், வருங்கால தலைமுறைகள் படிப்பறிவில்லாதவர்களாக ஆகி விடக்கூடாது என்பதற்காக, தங்கள் பிள்ளைகள் பட்டதாரிகளாக வேண்டும், பண்புள்ளவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள பெற்றோர்கள் பணக்காரர்களிலிருந்து பாட்டாளி வர்க்கம் வரை அத்தனை பேரும் தங்களது சக்திக்கு ஏற்ப தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் அவர்களைப் படிக்க அனுப்ப தவறுதில்லை. ஆனால் கல்வி கற்பதற்காகவும், ஒழுக்க மாண்புகளை பெறுவதற்காகவும் பள்ளி செல்லும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். துவக்கத்தில் புகை பழக்கம். […]

11) வஹீ மட்டுமே மார்க்க ஆதாரம்

இவ்வளவு சான்றுகளை நாம் எடுத்துக் காட்டிய பின்னரும் இக்கருத்து முற்றிலும் சரியானது என்று மனசாட்சி அதை ஏற்றுக் கொண்ட பின்னரும் இதை ஏற்க சிலர் தயக்கம் காட்டுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க வேண்டும். முன்னர் வாழ்ந்த நபித்தோழர்களும் நல்லறிஞர்களும் இக்கருத்தைச் சொல்லவில்லையே? அவர்களுக்குத் தெரியாதவை இவர்களுக்குத் தெரிந்து விட்டதா என்ற எண்ணம் தான் அந்தக் காரணம். அல்லாஹ்வுடைய வேதத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரிந்து விட்டால் அதற்கு […]

10) கால்நடைகளுக்கான ஜகாத் மீண்டும் மீண்டும் வசூலிக்க ஆதாரமாகுமா?

தக்க ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் தமக்குரிய ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். இந்த வகையில் அவர்களின் மற்றொரு ஆதாரம் கால்நடைகளுக்கான ஜகாத் பற்றிய ஹதீஸைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைப்பதாகும். ஒரு மனிதனிடம் நாற்பது முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஜகாத் ஒரு ஆடு ஆகும். 121 முதல் 200 வரை இரண்டு ஆடுகளாகும். 201 முதல் 300 வரை மூன்று ஆடுகளாகும். 300க்கு மேல் ஒவ்வொரு நூறு […]

09) அபூபக்ர் ஆட்சியில் மீண்டும் மீண்டும் ஜகாத் வசூலிக்கப்பட்டதா?

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிலர் ஜகாத் கொடுக்க மறுத்த போது, நபிகள் நாயகத்திடம் கொடுத்து வந்த ஒரு ஆட்டுக் குட்டியை என்னிடம் தர மறுப்பார்களானால் அவர்களுடன் நான் போரிடுவேன் என்று குறிப்பிட்டார்கள். (புகாரி: 1400, 1457, 6924, 7285) ➚ இதையும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றாலும் இந்த ஹதீஸில் இவர்களின் வாதத்தை நிலைநாட்ட ஒரு சான்றும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் கொடுத்து வந்த என்ற […]

08) ஆண்டு தோறும் ஜகாத் என்ற ஹதீஸ்களின் நிலை

அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை முன் கூட்டியே வாங்கி விட்டனர் என்பது ஆதாரமற்றது என்பதால் இதை ஆதாரமாகக் கொண்ட இவர்களது வாதமும் அடிபட்டுப் போகின்றது. மேலும் பல காரணங்களால் அந்த ஹதீஸ்களின் பலவீனம் அதிகரிக்கின்றது. ஜகாத் கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்ற படியே வைத்துக் கொண்டாலும் முன் கூட்டியே இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை வாங்குவது நடைமுறை சாத்தியமற்றது. ஜகாத் என்பது தலைக்கு இவ்வளவு என்று […]

07) இரண்டு வருட ஜகாத்தை முன்கூட்டியே வாங்கிய ஹதீஸ் ஆதாரமாகுமா?

ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள் மற்றொரு ஹதீஸையும் தங்களின் வாதத்துக்குச் சான்றாக எடுத்து வைக்கின்றனர். அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஜகாத் வசூலிக்க உமர் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) ஜகாத்தைக் கேட்டார்கள். அவர்களிடம் அப்பாஸ் (ரலி) கடுமையாக நடந்து கொண்டார். உடனே உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் […]

06) அனாதைகளின் சொத்துக்கள் பற்றிய ஹதீஸ் ஆதாரமாகுமா?

ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடந் தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் சில ஆதாரங்களை முன் வைக்கின்றனர். அந்த ஆதாரங்கள் அனைத்துமே பலவீனமானவையாக அமைந்துள்ளன. அவற்றில் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் அவர்களின் வாதத்தை நிலைநாட்ட உதவுவதாக இல்லை. மற்றும் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் இஸ்லாத்தின் வேறு பல அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளன. முதலாவது ஹதீஸ் அந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். سنن الترمذي 641 حَدَّثَنَا […]

05) ஜகாத், பொருளைத் தூய்மைப்படுத்துமா? மனிதர்களைத் தூய்மைப்படுத்துமா?

ஜகாத் பொருட்களைத் தூய்மைப்படுத்தாது. மனிதர்களைத் தான் தூய்மைப்படுத்தும் எனக் கூறி பின்வரும் ஆதாரத்தை முன் வைக்கிறார்கள். صحيح مسلم ثُمَّ قَالَ لَنَا إِنَّ هَذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ، وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ، وَلَا لِآلِ مُحَمَّدٍ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் ஜகாத்தை ஏன் ஹராமாக்கிக் கொண்டார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) விளக்கும் போது, இவை மனிதர்களின் அழுக்குகள் என்று குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்: 1945) […]

04) பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்

இதை வலுப்படுத்தும் வகையில் துணை ஆதாரங்கள் சிலவற்றையும் நாம் எடுத்துக் காட்டுகிறோம். மாற்றுக் கருத்துடையோர் துணை ஆதாரங்களுக்கும் பதிலளிக்க வேண்டும்; அதை விட முக்கியமாக ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிப்பது அவர்களின் முதல் கடமையாகும். ஜகாத் கடமையாக்கப்பட்ட நோக்கம் என்ன என்பது இஸ்லாத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நோக்கம் நமது முடிவை மேலும் வலுப்படுத்துகின்றது. سنن أبي داود فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ […]

03) மார்க்கத்தின் கட்டளைகளைப் புரிந்து கொள்ளும் சரியான முறை

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? என்ற பிரச்சனையில் உலகில் பெரும்பாலான அறிஞர்கள், ஒரு பொருளுக்கு நாம் ஜகாத் கொடுத்து விட்டால் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கின்றனர். அதாவது ஒரு முஸ்லிமிடம் ஒரு லட்சம் ரூபாய் இன்றைக்கு இருந்தால் அதில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அடுத்த வருடம் எஞ்சியுள்ள 97500.00 ரூபாயில் இரண்டரை சதவிகிதம் கொடுக்க வேண்டும். இப்படியே வருடா வருடம் […]

02) இக்கருத்தை இதற்கு முன் யாரும் சொன்னதுண்டா என்ற வாதம்

ஒரு செல்வத்துக்கு உரிய ஜகாத்தை ஒருவர் கொடுத்து விட்டால் அதன் பின்னர் அதே செல்வத்துக்காக மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பது கடமையில்லை. ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்டவுடன் அப்பொருளுக்கான ஜகாத் கடமை நீங்கி விடுகிறது என்ற கருத்தை நாம் முன் வைக்கிறோம். ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுத்தாலும் அதே பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் மிக மிக அதிகமான அறிஞர்களும் மக்களும் உள்ளனர். நமது கருத்தை அதிகமான மக்கள் […]

01) பதிப்புரை

இஸ்லாம் மிகவும் வலியுறுத்திக் கூறும் ஐந்து கடமைகளில் ஒன்றாக ஜகாத் எனும் கடமை அமைந்துள்ளது. ஜகாத்தை வலியுறுத்தும் ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன. ஜகாத் கட்டாயக் கடமை என்பதில் முஸ்லிம் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லாவிட்டாலும் ஜகாத் உட்பிரிவுச் சட்டங்கள் பலவற்றில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. * எந்தெந்த பொருட்களில் ஜகாத் கடமையாகும்? * தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு ஜகாத் கடமையில் விதிவிலக்கு உள்ளதா? * குடியிருக்கும் வீடு, பயன்படுத்தும் […]

நிம்மதி தரும் இல்லம் !

வீடு என்பது மனிதனின் அடிப்படைக் கனவுகளில் ஒன்று. தனக்கான சொந்த வீட்டை, தான் விரும்புவது போல வடிவமைத்துக் கட்டி வாழ்வதே இறைவன் தனக்கு அருள் புரிந்துள்ளான் என்பதற்கு அடையாளம் என எண்ணுகிறான் மனிதன். ஆனால், அவனுக்குத் தங்குவதற்கு இப்பூமிப் பந்தில் ஓர் இடம் கிடைத்திருப்பதே இறையருள் காரணமாகத்தான் என்கிறது குர்ஆன். உங்களுக்குப் பூமியில் தங்குமிடமும், குறிப்பிட்ட காலம்வரை வாழ்க்கை வசதியும் உண்டு. (அல்குர்ஆன்: 2:36)➚ எனவே, நமது வீடு நமக்குச் சொந்தமானதோ இல்லையோ, ஆனால் ஒரு முஸ்லிம் […]

04) ஒளிச் சேர்க்கை ஓர் அற்புதம்

உயிர் வரம் தரும் தாவரம் தாவர இனம் அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பறை சாற்றி நிற்கும் ஓர் அற்புதமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில், வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் […]

பெண்கள் ஆண்களுக்கு உரை நிகழ்த்தலாமா?

பதில்: நிகழ்த்தலாம். இஸ்லாத்தை மக்கள் முன்னிலையில் முழங்கக்கூடிய உரிமை அனைவருக்குமானதாகும். யாரோ ஒருவர் இன்னொருவருக்கு சத்தியத்தை தெளிவுப்படுத்தியதன் விளைவு தான் இன்று இஸ்லாம் பட்டித்தொட்டியெங்கும் படர்ந்துக்கிடக்கிறது. இத்தகைய மகத்துவமான பணியை ஆண்களுக்கு மட்டும் குறிப்பாக்குவது இஸ்லாத்தின் வழிகாட்டல் அல்ல. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் அவர்களில் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றனர்; ஸகாத்தைக் கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுகின்றனர். இவர்களுக்குத்தான் அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; […]

இஸ்லாத்தின் பார்வையில் அமானிதம்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனைவியின் நகைகளையும் சொத்துக்களையும் விற்று, கடன் வாங்கிக் கொடுத்தப் பணத்தை, வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி வாயில் போட்டுக் கொள்ளும் மோசக்காரர்கள் கொஞ்சம் கூட இறைவனின் பயம் இல்லாமல் தலை நிமிர்ந்து இந்த உலகத்தில் நடக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏப்பம் விட்டு விட்டு ஓடி ஒளியும் […]

இறைநேசத்தை பெறுவதற்குரிய வழிகள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் பேரருளால் ஜுமுஆவை அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ். இறைவனின் நேசத்தை பெற்றவருடைய வாழ்க்கை, இம்மையிலும் மறுமையிலும் இறையருள் நிறைந்த இனிமையான வாழ்க்கையாக இருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. ஆதலால் தான் அன்று முதல் இன்று வரை இறைநேசத்தை பெறுவதற்காக என்றே மக்கள், மனந்தளராமல் பல்வேறு விதமான […]

35) பொருளாதாரப் பிரச்சனைக்கு தீர்வு

கடந்த சில மாதங்களுக்கு முன், உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, மனித சமுதாயத்தின் சீரான இயக்கத்தின் மீது படுமோசமான தாக்குதல்கள் நிகழ்ந்தன. தினமும் எத்தனையோ வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் திவாலாகி போவதென்பதும், பலர் வேலைவாய்ப்பினை இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி பறிதவிப்பதும் தொடர்கதையாக இருந்து கொண்டிருந்தது. அந்த பாதிப்புகளையெல்லாம் செய்திதாள்களின் மூலமாக நாம் அறிந்து வைத்துள்ளோம். இதைப் போன்றே மாபெரும் பொருதாரப் பிரச்சனைகள், நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் […]

இஜ்மா மார்க்க ஆதாரமா?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். “முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்பது போல குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்க ஆதாரம் எனும் பாதையை விட்டு ‘ஸஹாபாக்களும் மார்க்கத்தின் ஆதாரமே’ என்று தங்கள் கொள்கையில் சமரசம் செய்தவர்கள், இன்று இஜ்மாவும் மார்க்கத்தின் ஆதாரம் தான் என்று கூறி, தங்களை கொள்கை படிநிலையில் ஒவ்வொரு படியாக […]

21) முடிவுரை

நபி இப்ராஹீம் (அலை) காலமெல்லாம் இணை வைப்பை எதிர்த்துத் தீம்பிழம்பாய் களம் கண்டவர்கள். அவர்கள் தன் தந்தையிடம் குடி கொண்டிருந்த சிலை மோகத்தைக் கண்கூடாகக் கண்டார்கள். சிலை வணக்கத்தின் பிடிமானத்தில் இருந்த தன் தந்தையை நோக்கி அறிவுரை செய்கின்றார்கள். அவர் தமது தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! செவியேற்காததை, பார்க்காததை, உமக்குச் சிறிதும் பயனளிக்காததை ஏன் வணங்குகிறீர்?” என்று கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 19:42)➚ ஆனால் அதற்கு அவரது தந்தை தெரிவித்த பதில் என்ன தெரியுமா? “இப்ராஹீமே! […]

20) மற்ற நபிமார்களின் பிராத்தனை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நூஹ் நபி நூஹ், தமது இறைவனை அழைத்து, “என் இறைவனே! எனது மகன் என் குடும்பத்தைச் சார்ந்தவன். உனது வாக்குறுதி உண்மையானது. நீயே தீர்ப்பளிப்போரில் தீர்ப்பளிப்பவன்” என்று கூறினார். மிகச் சிறந்து (அல்குர்ஆன்: 11:45)➚ மூஸா நபி “என் இறைவனே! என்னையும் எனது சகோதர்ரையும் மன்னிப்பாயாக! […]

19) சமூகத்திற்காகவும், சந்ததிக்காகவும் செய்த பிரார்த்தனைகள்

இப்ராஹீம் நபி பிரார்த்தனை செய்யும்போது தமக்காக மட்டும் பிரார்த்தித்து (சுயநலமாக, தன்னலமாக) தமது பிரார்த்தனையை முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அவற்றில் தனது சந்ததிகளையும், சமூகத்தார்களையும் பின்வரும் மக்களையும் கவனத்தில் கொண்டு அவர்களையும் தனது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்கிறார்கள். அவைகளை இனி காண்போம். சிலை வழிபாட்டை விட்டுப் பாதுகாப்பு “என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 14:35)➚ வணக்கத்தை நிலைநாட்ட… என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை […]

18) பிரார்த்தனை ஏற்கப்படுவதற்காகப் பிரார்த்தனை

இப்ராஹிம் நபி செய்த துஆக்களை நாம் பார்த்து வருகின்றோம் அவற்றில் இந்தப் பிரார்த்தனையும் மிக முக்கியமான படிப்பினையை உள்ளடக்கிய பிரார்த்தனையாகும். رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ எங்கள் இறைவனே! எனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக! (அல்குர்ஆன்: 14:40)➚ தினம் எத்தனையோ பிரார்த்தனைகளை அல்லாஹ்விடம் முன்வைக்கின்றோம் அவையனைத்தும் பயனற்றதாகி விடக்கூடாது என்பதற்காகவும் அதன் பயனைக் கட்டாயம் அடையவேண்டும் என்பதற்காகவும் இப்ராஹீம் நபி இவ்வாறு துஆ செய்கிறார்கள். பெயரளவில் நானும் பிரார்த்தித்தேன் என்று சென்று விடவில்லை இப்ராஹீம் நபியவர்கள். நாம் அல்லாஹ்விடம் கேட்டுவிட்டோம். […]

17) சொர்க்கத்தின் வாரிசாக்க வேண்டுதல்

وَاجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ இன்பம் நிறைந்த சொர்க்கத்திற்கு உரிமை கொள்வோரில் ஒருவனாக என்னை ஆக்கிவைப்பாயாக! (அல்குர்ஆன்: 26:85)➚ இப்ராஹீம் (அலை) அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அறிந்த மக்களுக்கு இந்தப் பிரார்த்தனை என்பது ஒரு பேரிடியாகதான் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது. என்னமாதிரியான வாழ்க்கையை இப்ராஹீம் நபி வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களைப் போன்ற மனிதர்களும் இப்புவியில் பிரவேசித்தார்களா? இப்படியான வாழ்க்கையை மனிதனால் வாழமுடியுமா? என்று நமது புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்த இப்ராஹீம் நபியவர்களின் வாயிலிருந்து இவ்வாறு […]

16) நல்லவர்களுடன் சேர்க்க…

وَالْحِقْنِي بِالصَّالِحِينَ என் இறைவனே! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! (அல்குர்ஆன்: 26:83)➚ அல்லாஹு அக்பர்! இப்ராஹீம் நபியின் சிறப்புகள் என்ன? அவர்கள் செய்த தியாகங்கள் என்ன என்பதையெல்லாம் நாம் அறிவோம். இப்ராஹீம் (அலை) எம்மாம்பெரிய தியாகி என்பதை அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வே உலக மக்களுக்கு உரைத்துவிட்டான். அவர்களின் வாழ்க்கையைப் பின்வரும் மக்களுக்குப் பாடமாகவும், படிப்பினையாகவும் பறைசாற்றிவிட்டான். அவர்களை மக்களுக்குத் தலைவராகவும் ஆக்கிவிட்டான். இன்னும் அவர்களைத் தன் உற்ற தோழராகவும் எடுத்துக் கொண்டான். இப்ராஹீம் நபியை […]

15) எதிரிக்கு இரையாக்காதே!

رَبِّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا“ “எங்கள் இறைவா! இறைமறுப்பாளர்களுக்குச் சோதனையாக எங்களை ஆக்கிவிடாதே! (அல்குர்ஆன்: 60:5)➚ இறை மார்க்கத்தை இளைஞராகவும், தனி மனிதராகவும் இருக்கும் நிலையில் இப்ராஹீம் நபி தம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் வீரியமாக எடுத்துரைக்கும்போது எதிரிக்கு இரையாகாமல் இருக்க இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள். இன்றளவிலும் ஏகத்துவத்தை எடுத்துரைக்கும் போது எட்டுத்திக்கும் எதிர்ப்பலைகள் ஏற்பட்டு அவை நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. இன்றைய காலத்திலேயே இவ்வாறு இருக்கிறது என்றால் ஏகத்துவத் தந்தை இப்ராஹீம் நபி ஏகத்துவ […]

14) மறுமையில் இழிவை விட்டும் பாதுகாக்க!

وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுக்குள்ளாக்கி விடாதே! (அல்குர்ஆன்: 26:87)➚ எல்லா மனிதர்களும் ஒருநாள் அழிக்கப்படுவோம்; இன்னும் இப்பூமி முழுவதும் அழிக்கப்படும். பின்னர் மஹ்ஷர் மன்றத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு உலகில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கப்படுவோம். இந்த உலகில் கண்ணியாமாக வாழ்ந்த பலர் நாளை மறுமையில் இழிவுக்குள்ளாவார்கள். அல்லாஹ்விற்கு முன்னால் கூனிக் குறுகி நிற்பார்கள். தனது நிலை என்னவாகும் என்று பதறுவார்கள். உற்றார் உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை விட்டு […]

13) நற்பெயரை வேண்டுதல்

وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ பின் வருவோரிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! (அல்குர்ஆன்: 26:84)➚ சிலர் மறுமை வாழ்வில் வெற்றிப் பெற்றால் போதுமானது என்று நினைக்கின்றனர் இவ்வுலகத்தை அலட்சியமாகக் கருதுகின்றனர். ஆனால் நமக்கு மார்க்கம் அவ்வாறு வழிகாட்டவில்லை. நபியவர்கள் இரண்டையும் இணைத்தே துஆ செய்தார்கள் “எங்கள் இவ்வுலகிலும் இறைவனே! நன்மையை(த் மறுமையிலும் நன்மையைத் நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாப்பாயாக!” அறிவிப்பவர்: அனஸ் (ரலி). (புகாரி: 6389) ➚,(முஸ்லிம்: 5219) ➚ இம்மை, மறுமை ஆகிய இருவாழ்க்கையிலும் […]

12) தந்தைக்காகப் பாவ மன்னிப்பு தேடுதல்

وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழிகேடர்களில் ஆகிவிட்டார். (அல்குர்ஆன்: 26:86)➚ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக! (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்.) (அல்குர்ஆன்: 14:41)➚ இப்ராஹீம் நபி தன் தந்தையின் மீது கொண்ட அன்பின் காரணமாக அல்லாஹ்விடம் அவர்களுக்காக மன்னிப்பை வேண்டுகிறார்கள். பின்னர் அவர்கள் இணைவைப்பாளர்கள் அவர்களுக்கு மன்னிப்பு தேடுவது […]

11) மன்னிப்பை வேண்டுதல்

وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمِ “எங்களை மன்னிப்பாயாக! நீயே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்” (அல்குர்ஆன்: 2:128)➚ وَاغْفِرْ لَنَا எங்கள் இறைவனே! எங்களை மன்னிப்பாயாக! (அல்குர்ஆன்: 60:5)➚ உலகில் வாழும் பாவம் எல்லா மனிதர்களும் செய்யக்கூடியவர்கள்தான். பாவமே செய்யாத எந்த மனிதனும் உலகில் இல்லை. நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அவர்களிடமும் தவறுகள் குறைவாக நிகழலாம். சிறிய தவறுகள் நிகழலாம். ஆனால் அவர்கள் தவறே செய்யமாட்டார்கள் என்று சொல்லவே முடியாது. […]

பெண்ணுக்கு நாணம் வேண்டும்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும் ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும். எங்கே போனது நாணம்? இறைவனின் படைப்பான ஆண், […]

10) வேண்டாம் சிலைவழிபாடு

وَاحْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ“ “என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 14:35)➚ இந்தப் பிரார்த்தனை ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதுடன், அல்லாஹ்வின் தனித்தன்மையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஒரு நபியாகவே இருந்தாலும் தானாக நேர்வழியை நோக்கிப் பயணிக்கமுடியாது, அதற்கு அல்லாஹ்வின் உதவிதான் அவசியமானது என்பதைக் கற்றுத் தருகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விசயம் என்னவெனில் இப்ராஹீம் நபியைப் பொறுத்தவரை அவர்கள் உண்மை […]

09) வணக்கத்தை ஏற்றுக் கொள்ள…

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا இப்ராஹீமும், இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்தியபோது. “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன்; நன்கறிந்தவன்” (என்று கூறினர்.) (அல்குர்ஆன்: 2:127)➚ இப்ராஹீம் நபியிடமும் இஸ்மாயில் நபியிடமும் கஃபாவைக் காட்டுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதற்கு இணங்க அவர்கள் அவற்றைக் கட்டினார்கள். அந்தப் பணியை செம்மையாகச் செய்து முடித்த பின் அவ்விருவரும் ‘நாங்கள் செய்த இந்தப் பணியை ஏற்றுக்கொள்வாயாக’ என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் செவிசாய்த்துக் கட்டுப்பட்டு விட்டோம்; […]

08) வணக்கசாலியாக ஆக்கக் கோரி..

رَبِّا اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலை நிறுத்தக் கூடியவர்களாக ஆக்கிவைப்பாயாக! (அல்குர்ஆன்: 14:40)➚ நபி வணக்கத்தில் ஒருபோதும் குறைவைக்க மாட்டார். இப்ராஹீம் நபியும் அவ்வாறுதான் அனைத்திலும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். நம்மைப்போன்று இல்லாமல் மாபெரும் வணக்கசாலியாக இருந்தும் இப்ராஹீம் நபியவர்கள் நாம் தான் வணக்கத்தை வழமையாகச் செய்து வருகிறோமே! இதற்காக அல்லாஹ்விடம் ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அலட்சியமாக இருந்துவிடாமல் நாம் இவ்வாறு […]

Next Page » « Previous Page