Author: Mukthiyaar Basha

10) நற்குடும்பம் அமைய

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا ரப்பனா hஹப்லனா மின் அzஸ்வாஜினா வdhதுர்ரியாதினா qகுர்ரத அoஃயுனிவ் வஜ்oஅல்னா லில்முத்தqகீன இமாமா. பொருள்:”எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” (அல்குர்ஆன்: 25:74)➚ (அர்ரஹ்மானின் அடையார்கள் கேட்கும் பிரார்த்தனை)

09) நேர்வழியில் நிலைத்திருக்க

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُ رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ரப்பனா லா துzஸிghக் qகுலூபனா பoஃdத இdhத் hஹdதைதனா வhஹப் லனா மில் லdதுன்க ரஹ்மhஹ், இன்னக அன்தல் வhஹ்hஹாப்.ரப்பனாa இன்னக ஜாமிoஉன் நாஸி லியவ்மில் லா ரைப Fபீhஹ். பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் […]

08) நேர்வழிக்கு

ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ இhஹ்dதினsஸ் sஸிராTதல் முஸ்தqகீம்.SஸிராTத-ல்லdhதீன அன்oஅம்த oஅலைhஹிம், ghகைரில் மghக்Dளூபி oஅலைhஹிம் வலDள் Dளாaaல்லீன். பொருள்:எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக! நீ அருள் புரிந்து (உன்னால்) கோபிக்கப்படாத, பாதைமாறிச் செல்லாதவர்களின் வழியில் (செலுத்துவாயாக) (அல்குர்ஆன்: 1:6-7)➚ ( நல்லோர்களின் பிரார்த்தனை)

07) குழந்தையின் பாதுகாப்பிற்க்காக

إِنِّىٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيْطَـٰنِ ٱلرَّجِيمِ இன்னீe உoஈdhதுhஹா பிக வdhதுர்ரிய்யதhஹா மினஷ் ஷைTதானிர் ரஜீம். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித்தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்” எனவும் அவர் கூறினார். (அல்குர்ஆன்: 3:36)➚ (மர்யம் (அலை) அவர்களைப் பெற்றெடுத்த போது மர்யமின் தாயார் கேட்ட பிரார்த்தனை).

06) குழந்தை பாக்கியத்திற்க்காக

رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّـٰلِحِينَ ரப்பி hஹப்லீ மினsஸ் sஸாலிஹீன். என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.) (அல்குர்ஆன்: 37:100)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட பிராத்தனை) رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ ரப்பி hஹப் லீ மில் லdதுன்க dhதுர்ரிய்யதன் Tதய்யிபhஹ், இன்னக ஸமீoஉdத் dதுoஆaaஃ. பொருள்:”இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ […]

05) பெற்றோருக்காக

رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا ரப்பி-ர்ஹம்hஹுமா கமா ரப்பயானீ sஸghகீரா. சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!” என்று கேட்பீராக! (அல்குர்ஆன்: 17:24)➚ (நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த பிரார்த்தனை)

04) நம்பிக்கை கொண்டோருக்காக

رَبَّنَا ٱغْفِرْ لَنَا وَلِإِخْوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلْإِيمَـٰنِ وَلَا تَجْعَلْ فِى قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ ءَامَنُوا۟ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ ரப்பன-ghக்Fபிர் லனா வலிஇkhக்வானின-ல்லdhதீன ஸபqகூனா பில்ஈமானி வலா தஜ்oஅல் Fபீ .qகுலூபினா ghகில்லல் லில்லdhதீன ஆமனூ ரப்பனாa இன்னக ரஊFபுர் ரஹீம் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ .இரக்கமுடையோன்; நிகரற்ற […]

03) பெற்றோர் மற்றும் நம்பிக்கை கொண்டோருக்காக

رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ ரப்பன-ghக்Fபிர் லீ வலிவாலிdதய்ய வலில்முஃமினீன யவ்ம யqகூமுல் ஹிஸாப். பொருள்: எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! (அல்குர்ஆன்: 14:41)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் குடும்பத்தினரை விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் விட்ட பின்னர் கேட்ட பிரார்த்தனைகளில் இதுவும் ஒன்று. இவ்வசனத்தில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியதை இறைவன் கூறுகிறான். […]

02) தவறு செய்து விட்டால்

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ ரப்பி இன்னீ ளலம்து நFப்ஸீ Fபghக்Fபிர் லீ. பொருள்: என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!(அல்குர்ஆன்: 28:16)➚ (நபி மூஸா (அலை) அவர்கள் நபியாவதற்கு முன்னர் இன்னொரு சமூகத்தைச் சார்ந்த ஒருவரை தவறுதலாகக் கொலை செய்துவிட்டார்கள். அந்தத் தவறுக்காக இப்பிரார்த்தனையைக் கேட்டார்கள்.) لآإلٰهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّـيْ كُنتُ مِنَ الظَّالِمِيْنَ லாa இலாhஹ இல்லாa அன்த ஸுப்ஹானக், இன்னீ […]

01) துன்பம் ஏற்படும் போது

أَنِّى مَسَّنِىَ ٱلضُّرُّ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ அன்னீ மஸ்ஸனியDள் Dளுர்ரு வஅன்த அர்ஹமுர் ராஹிமீன். பொருள்: எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன். (அல்குர்ஆன்: 21:83)➚ (நபி அய்யூப் (அலை) அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்ட போது இப்பிரார்த்தனையைக் கேட்டார்கள்). رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا ரப்பனாa ஆதினா மில் லdதுன்க ரஹ்மதவ் வhஹய்யிஃ லனா மின் அம்ரினா ரஷdதா. பொருள்: எங்கள் இறைவா! உன் […]

ஆயத்துல் குர்ஸீயை எடுத்துக் கூறியவன் மனிதனா? ஷைத்தானா?

ஆயத்துல் குர்ஸீ என்பது அல்குர்ஆனில் 2:255➚வது வசனமாக இடம்பெற்றுள்ளது. இதை ஓதுவதற்குப் பல்வேறு சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்றாக, ஆயத்துல் குர்ஸியை ஓதுவதன் மூலம் ஷைத்தான் நம்மை நெருங்கமாட்டன் என உணர்த்தும் செய்தியை நபித்தோழர்களில் ஒருவரான அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்ததாக புகாரியில் ஹதீஸ் எண் 2311ல் இடம்பெற்றுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு நாம் கடந்த காலங்களில் பல்வேறு சொற்பொழிவுகளிலும் நூற்களிலும் பேசியும் எழுதியும் வந்துள்ளோம். அந்தச் செய்தி பின்வருமாறு: அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: நபி […]

இப்ராஹீம் நபியின் அழைப்புப் பணி

இவ்வுலகில் மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கான வாழ்க்கை செயல்திட்டத்தை இறைவன் வரையறை செய்துள்ளான். அதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல இறைத்தூதர்களையும் நியமித்து அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு மார்க்கப் போதனைகளைக் கற்றுத் தருகிறான். இவ்வாறே ஒவ்வொரு காலத்திற்கும் இறைத்தூதர்களை நியமித்து, தமது சமூகத்தை சீர்திருத்த இறைவன் ஏற்பாடு செய்துள்ளான். ஏனெனில், இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் பலவீனமான படைப்பாகும். படைத்தவனின் போதனையை மீண்டும், மீண்டும் மனதில் பதியவைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் இழிசெயலிலும், இணைவைப்பு என்னும் இருளிலும் மனிதன் […]

நவீன ஸலஃபிக் கொள்கையைச் சாடும் இமாம் இப்னு ஹஸ்ம்

இஸ்லாத்தின் மூல ஆதாரம் இறைச் செய்தி மட்டுமே! இறைச் செய்தி நமக்கு இரண்டு விதத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒன்று திருக்குர்ஆன். மற்றொன்று அதற்கு விளக்கமாக அமைந்த இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை. மாற்றுக் கருத்தின்றி பின்பற்றப்படுவதற்குத் தகுதியான செய்திகள் இவை மட்டுமே! இதுவல்லாமல் எந்த மனிதக் கருத்தும் மார்க்க ஆதாரமாகவோ, மாற்றுக் கருத்திற்கு அப்பாற்பட்டதாகவோ ஆகாது. உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள். (அல்குர்ஆன்: 7:3)➚ […]

நூறு கொலை செய்தவர் பற்றிய ஹதீஸின் நிலை

குர்ஆனுக்கு முரணாகவும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராகவும் எவ்விதத்திலும் விளக்கம் சொல்ல முடியாத வகையிலும் நபிகள் நாயகத்தின் பெயரால் சில செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபோன்ற செய்திகளைக் காணும் போது அதற்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனும் முடிவுக்கு வருவதே மார்க்கத்தை முரணில்லாமல் புரிந்து கொள்ளவும் பொய்யான செய்திகளைக் கண்டறியவும் ஹதீஸ்கலை வகுத்துத் தந்த விதியாகும். அதுவே தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை. நாம் இந்த விதியின் அடிப்படையில் சில செய்திகள் தொடர்பாக, இவை ஹதீஸ் என்று ஏற்றுக் […]

17) இஸ்லாம், மனைவிமார்களை அடிப்பதற்குத் தூண்டுகிறதா?

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்சு அவர்கள் தமது பேஸ்புக் வலைத்தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். “ஒரு முஸ்லிம் கணவன், கீழ்ப்படியாமைக்காக தனது மனைவியை அடிக்கலாம் என்று குர்ஆனின் சூரா அந்நிஸா 4:34➚ கூறுகிறது. திருமணமான முஸ்லிம் பெண்ணிடம் இந்த வசனம் மனிதாபிமானமற்றது என்றும் குர்ஆனிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கூறினேன். “குர்ஆனை விட்டு எதையும் அழிக்க முடியாது” என்று அவள் கூறினாள். “இது கடவுளின் வார்த்தை” என்று அவர் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவைப் பார்ப்பவர்கள் யாராக […]

கோடிகளைத் தாண்டும் கல்யாணச் செலவு கடன் வாங்கத் தூண்டும் சமூக நிர்ப்பந்தம்!

“வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப்பார்!” என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். இந்தப் பழமொழியில் ‘வீட்டைக் கட்டிப்பார்’ என்று சொல்வதில் ஓர் அர்த்தம் இருக்கின்றது. காரணம் வீடு கட்டிய எவரும் போட்ட மதிப்பீட்டில் கட்டி முடித்ததில்லை. கடன் வாங்கி போட்டுக் கட்டித்தான் முடித்திருப்பார்கள். யானை கட்டுக்கட்டாய் கரும்பை வளைத்துத் தின்பது போல் கட்டுகின்ற வீடும் கட்டுக் கட்டாய் காசு பணத்தை வளைத்துத் தின்று விடும். அந்த அளவுக்கு அது காசு பணத்தை விழுங்கி ஏப்பம் விடும். […]

நவீன ஸலஃபிகளின் வழிகெட்ட கொள்கையும், முரண்பாடுகளும்

ஸலஃப் என தங்களை அடையாளப் படுத்துபவர்களால், ஸலஃபிக் கொள்கைதான் சரியான கொள்கை, இந்தக் கொள்கை அல்லாத வேறு கொள்கை யாவும் வழிகேடே என தற்போது தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு மத்தியில் சிலரால் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்த நவீன வாதிகள் கூறும் நவீன ஸலஃப் என்ற கொள்கை இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கக் கூடிய கொள்கையாகவே அமைந்திருக்கிறது. நபித்தோழர்களையும் மார்க்கமாக ஏற்று, அவர்களையும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இந்த நவீன ஸலஃபிகளின் அடி நாதமான கொள்கையாகும். இந்த ஸலஃபி […]

முன்னோர்களின் வழி நேர்வழியா?

இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது தந்தையிடமும், தமது சமூகத்தாரிடமும் சத்தியப் பிரச்சாரம் செய்த செய்திகளைக் கடந்த இதழில் கண்டோம். அதற்கு அந்த மக்களின் பதில், “எங்கள் முன்னோர்கள் எதைச் செய்தார்களோ அதையே நாங்களும் செய்கிறோம்” என்பதாகவே இருந்தது. இப்ராஹீம் நபியின் சமூகம் மட்டுமின்றி பல நபிமார்கள் தமது சமூகத்திற்கு தூதுத்துவத்தை எடுத்துச்சொல்ல வந்த போதெல்லாம் அம்மக்களின் வாதம் எங்கள் முன்னோர்களின் வழியைவிட்டு எங்களைத் தடுக்கின்றீர்களா? என்பதும், இது போன்றவற்றை எங்கள் முன்னோர்களிடம் நாங்கள் காணவில்லையே! என்பதுமாகத்தான் இருந்தது. […]

வஹ்யு அல்லாத செய்திகள் வழிகேடே!

(நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுவீராக! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். அல்குர் ஆன் 33:2➚ இது 33வது அத்தியாயமான அல்அஹ்ஸாபில் இடம்பெறும் 2வது வசனமாகும். மறைந்த தற்கால அறிஞர் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள் இந்த அத்தியாயத்திற்கான விளக்கவுரையில் இந்த வசனத்திற்கு ஒரு விரிவான விளக்கத்தை அளிக்கின்றார்கள். இந்த வசனத்தின் கீழ் பெறப்படும் பயன்பாடுகளைப் பட்டியலிடுகின்ற போது வஹ்யை பின்பற்றுவதன் அவசியத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் الْفَائِدَةُ السَّادِسَةُ: وجوبُ تَقديم الوحي […]

தொழுகையும் தூயோனின் மன்னிப்பும்

இவ்வுலகில் நாம் செய்த பாவங்களுக்கு படைத்தவனிடம் எவ்வாறு பாவமன்னிப்பு பெறுவது, அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இத்தொடரில் பார்த்து வருகின்றோம். இதில் ஆரம்பமாக, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எனக் கூறப்படும் ஐந்து தூண்களால் எவ்வாறு பாவமன்னிப்பு கிடைக்கிறது என்பதைப் பார்த்து வருகின்றோம். “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஓரிறைக் கொள்கையை, மேலும் இதன் மற்றொரு தாரக மந்திரமான “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற இஸ்லாத்தின் முதன்மைக் கடமையை நம்பிக்கை கொண்டு, அதை நம் வாழ்வில் நடைமுறைப் […]

தற்கொலை – எச்சரிக்கையும்! தண்டனையும்!

எந்தவொரு சூழலிலும் மரணத்தைக் கேட்டுப் பிரார்த்தனை செய்யக் கூடாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவுரையாகும். இத்தகைய மார்க்கத்தில், மரணத்தைத் தேடிக் கொள்ளும் தற்கொலைக்கு ஒருபோதும் அனுமதி இருக்காது என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதோ, குர்ஆனில் இறைவன் எச்சரிப்பதைப் பாருங்கள். உங்கள் கைகளை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்! (அல்குர்ஆன்: 2:195)➚ உங்களையே நீங்கள் மாய்த்துக் கொள்ளாதீர்கள்! உங்கள்மீது அல்லாஹ் நிகரிலா அன்பாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:29)➚ அழிவு தரும் காரியங்களில் ஈடுபடாதீர்கள் […]

குர்ஆன் கூறும் சரித்திரங்களும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்

அல்குர்ஆன் நெடுகிலும் பெரும்பான்மையான பக்கங்களை ஆக்கரமித்திருப்பது வரலாறுகள்தான். பல கட்டங்களில் நபிகளாரும் கூடத் தமது தோழர்களுக்கு, முன்னர் வாழ்ந்த நபிமார்கள் மற்றும் சமுதாயங்களின் வரலாறுகளை எடுத்துரைக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். இதற்குக் காரணம், முன்னர் வாழ்ந்த நல்லோர் மற்றும் தீயோரின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டும்போது அவற்றில் நமக்குப் பெரும் படிப்பினைகள் இருக்கும். ஆகவே தான் அல்குர்ஆன் எங்கும் சரித்திர பக்கங்கள் படர்ந்துள்ளன. திருமறையில் கூறப்படும் இந்த வரலாறுகளில் நல்லடியார்களைப் பற்றிய செய்திகளின் மூலம் நாம் எவ்வாறு இறைவனுக்குக் […]

இயேசு கடவுள் அல்ல! அல்குர்ஆன் மற்றும் பைபிளில் உள்ள அடுக்கடுக்கான ஆதாரங்கள்

இன்றைக்கு உலகத்தில் இஸ்லாமிய மார்க்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தாலும் அதிக அளவு மக்கள் பின்பற்றி வருகின்ற ஒரு மதம் கிறிஸ்துவ மதம் தான். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்த உலக வாழ்க்கையே முழுமையானது என நினைக்காமல் இறந்ததற்குப் பிறகு வரக்கூடிய வாழ்க்கை தான் நிரந்தரம் என்றும், பரலோக ராஜியத்தில் உள்ள கடவுளை (கர்த்தரை) சந்திக்கப் போகிறோம் என்பதையும் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவ மதத்தில் இருப்பவர்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. எவ்வளவோ வேறுபாடுகள் […]

வஹீ இறங்கிய புனித மாதத்தில்…. வஹீயை மட்டுமே பின்பற்ற உறுதி ஏற்போம்

புனித ரமளான் மாதத்தில் புண்ணியம் தரும் நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்? திருக்குர்ஆன் பதில் அளிக்கின்றது. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மக்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதன் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர், அதில் நோன்பு நோற்கட்டும்! (அல்குர்ஆன்: 2:185)➚ புனிதக் குர்ஆன் அருளப்பட்டதால் தான் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கின்றது என்று அது தெரிவிக்கின்றது. தூர் மலையை உங்களுக்கு மேலாக உயர்த்தி, “நாம் வழங்கிய (தவ்ராத் வேதத்)தை […]

மாமறையை மெய்ப்படுத்தும் முன்னறிவிப்புகள்

அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வால் தான் அல்குர்ஆன் வேதம் அருளப்பட்டது என்பதற்கு அதிலேயே நிறைய சான்றுகள் உள்ளன. அந்த வரிசையில், அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள முன்னறிவுப்புகளும் அடங்கும். எதிர்காலத்தில் நடக்க இருப்பவையாக அல்குர்ஆனில் கூறப்பட்ட விசயங்கள் அப்படியே நடந்தேறியுள்ளன. அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம். அநியாயக்காரன் அபூலஹப் நரகவாசியே! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்வு செய்யப்பட்ட போது, அதன் துவக்க காலத்தில் நெருங்கிய உறவினர்களிடம் மார்க்கத்தைச் சொல்லுமாறு அவருக்குக் கட்டளை விதிக்கப்பட்டது. அதன்படி அவர், தமது உறவினர்களை […]

மனிதனைப் புனிதனாக மாற்றும் ரமலான்…!

இறைவன் இந்தப் பிரமாண்டமான பேருலகைப் படைத்து, தன்னை வணங்க வேண்டும் என்பதற்காக மனிதர்களைப் படைத்திருக்கின்றான். மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் வாழ்கின்ற வாழ்க்கையும், நாம் செய்கின்ற பாவங்களும், அல்லாஹ்விற்கு நன்றி கெட்டவர்களாக வாழ்வதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதைப் பார்க்கின்றோம். விடைபெற்று மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மனிதன் உலக வாழ்க்கையில் பெருமளவில் மூழ்கித் திளைக்கின்றான். உச்சக்கட்டப் பெரும் தவறுகளைக் கூட மிகச் சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டிருக்கின்றான். ஆனால், நம்மைப் படைத்த […]

31) நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள்

நபியே! (முஹம்மதேர் உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக் கொடுத்து விட்டிரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள் உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு மணமுடிக்க நாம் அனுமதித்துள்ளோம். நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணக்க விரும்பினால் (அனுமதித்துள்ளோம்) உமக்குச் […]

30) நபிகள் நாயகம் அவர்களின் கடைசி வார்த்தை

நபி (ஸல்) அவர்களின் பார்வை (அவர்களுடைய மரண வேளையில்) நிலை குத்தி நின்றது. பிறகு அவர்கள் “மிக உயர்ந்த நண்பர்களிடம் (செல்கிறேன்)” என்று (மூன்று முறை சொன்னார்கள். (புகாரி: 3669) ➚ இது தான் நபியவர்கள் பேசிய கடைசி வார்த்தையாக அமைந்தது. கலிமா சொன்ன நிலையில் மரணம் இறுதியில் ஏகத்துவ கலிமாவை முன்மொழிந்தவராக அண்ணலார் மரணம் அடைந்தார்கள்.நபி (ஸல்) அவர்கள், தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக்கொண்டு, வணக்கத் திற்குரியவன் அல்லாஹ்வைத் […]

29) முக்கிய அறிவுரைகள் – இறுதி எச்சரிக்கைகள்

மரணத்தின் விளிம்பில் நோய்வாய்ப்பட்டு இருந்த போதிலும் சமுதாய நலன் பற்றியும் தாம் ஆற்ற வேண்டிய கடமை பற்றியுமே சிந்தித்தார்கள் அப்போதும் தூதுப் பணிக்கு நபிகள் நாயகம் ஓய்வு கொடுக்கவில்லை போர்த்திக் கொண்டிருப்பவரே எழுந்து எச்சரிக்கை செய்வீராக என்று நபித்துவத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் சொன்ன கட்டளையை ஏற்று பிரச்சாரப் பணியில் எழுந்து நிற்க ஆரம்பித்தவர்கள் தம் மரணம் வரையிலும் ஓய்வு பெறவில்லை. அந்நேரத்தில் மக்களுக்கு பல அரிய, முக்கியமான போதனைகளை நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். அவைகளை ஒவ்வொன்றாக காண்போம். […]

28) நபிகளாரின் மரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமுதாய கட்டமைப்பு, மார்க்க போதனைகளை எடுத்தரைத்தல் ஆகியவற்றை செம்மையாக நிறைவேற்றியிருந்தார்கள். அதன் பிறகு தனது மரண காலத்தை நபிகள் நாயகம் நெருங்கினார்கள். ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு நபிகளாரின் மரணமே அது பற்றிய வரலாற்று தகவல்களை காண்போம். நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரிபூரணப்படுத்தி இஸ்லாம் பல பகுதிகளுக்கும் பரவியபோது நபியவர்களின் சொல், செயல்களிலிருந்து அவர்களின் மரணத்திற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டன, தனது […]

27) சீர்திருத்தத்தைத் தன்னிலிருந்து துவங்குதல்

குழிக்குள் போகட்டும் பழியுணர்ச்சி அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப் படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார் இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது […]

26) இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை

அந்த ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய பயணத்தின் ஊடே தான் அரபா நாளில், ‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன் எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்” என்ற (அல்குர்ஆன்: 5:3)➚ வசனம் அருளப்பட்டது. ‘ஓதுவீராக’ என்று துவங்கிய திருக்குர்ஆன் ஓதி முடிக்கப்பட வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தியது. அதற்கு ஏற்றது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் […]

25) ஹஜ்ஜத்துல் விதா இறுதி ஹஜ் – ஹிஜிரி 10

“இக்ரஃ – நீர் ஓதுவீராக” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ரமளானில் தொடங்கி வைத்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் அந்தக் குர்ஆனை முழுமையாக ஓதிக் காட்டி மறு பதிவு செய்து கொள்வார்கள். (புகாரி: 3554) ➚ ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரமளானில் திருக்குர்ஆனை இரு முறை மறு பதிவு செய்கின்றார்கள். (புகாரி: 4998) ➚ அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாட்கள் எண்ணப்படத் துவங்கி விட்டது என்பதற்கு இது ஓர் […]

24) அபூபக்கர் (ரலி) அவர்களின் ஹஜ் – ஹிஜிரி 9

தபூக் போரை அடுத்து ஹிஜ்ரி 9ல் நடைபெற்ற முக்கிய நிகழ்வு அபூபக்கர் (ரலி) அவர்களின் ஹஜ்ஜாகும். முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜின் கிரியைகளை கற்றுத்தரும் வகையில் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களை ஹஜ்ஜூக்காக மக்கா அனுப்பினார்கள். அதன் பிறகு இணைவைப்பாளர்களுடான ஒப்பந்தத்தை முறித்து கொள்ளும் படி இறைவன் வசனம் அருளவே அதை தெரிவிக்க மதீனாவிலிருந்து அலீ இப்னு அபூதாலிபை நபி (ஸல்) மக்கா அனுப்பி வைத்தார்கள். புறப்பட்ட அலீ (ரழி) அர்ஜ் என்ற இடத்தில் அபூபக்ரை சந்திக்கிறார்கள். […]

23) தபூக் போர் – ஹிஜ்ரி 9

போருக்கான காரணம் ஹஜ்ரி 8 ல் நடைபெற்ற மக்கா வெற்றிக்கு பிறகு மக்கள் கூட்டம், கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வரத்துவங்கினார்கள். எனினும் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் பெரும் தொல்லை அளிக்கும் அரசாக ரோமானிய அரசு இருந்தது. அப்போதைக்கு அது பேரரசாகவும் திகழ்ந்தது. இஸ்லாத்தின் வளர்ச்சி பிடிக்காத ரோமானிய பேரரசு, கஸ்ஸான் கோத்திரத்தார் உள்ளிட்ட இன்னும் சிலரையும் ஒன்று திரட்டி முஸ்லிம்களுடன் போர் செய்ய தயாரானார்கள். இந்த தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு தெரிய வரவே அவர்களை எதிர் கொள்ள […]

22) ஹுனைன் யுத்தம் – ஹிஜிரி 8 துல்கஅதா

ஹுனைன் என்பது ‘தில் மஜாஸ்’ என்ற ஊரின் அண்மையில் உள்ள பள்ளத்தாக்காகும். இங்கிருந்து அரஃபா வழியாக ஏறக்குறைய பத்து மைல் தொலைவில் தான் மக்கா இருக்கிறது. மக்கா வெற்றி அரபிகள் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சியாகும். இதனைக் கண்ணுற்ற அக்கம் பக்கத்திலுள்ளோர் திடுக்கிட்டனர். அவர்களால் அதனைத் தடுத்து நிறுத்த முடியாததால் பெரும்பாலான மக்கள் பணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். எனினும், கர்வமும் வம்பும் முரட்டுக் குணமும் கொண்ட சமூகத்தவர்கள் அடிபணிய மறுத்தனர். இவர்களில் ஹவாஸின், கத்ஃபான், ஸகீஃப் […]

21) மக்கா வெற்றி – ஹிஜிரி 8

மக்காவை நோக்கி படையெடுக்க காரணம் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு மதீனா முஸ்லிம்களுக்கும் மக்கத்து காஃபிர்களுக்கும் இடையே நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பனூபக்ர் என்னும் குலத்தார் மக்கத்துக் காஃபிர்களுடனும் பனூ குஸாஆ முஸ்லிம்களுடனும் இணைந்து கொண்டனர். இவ்விரு குலத்தாரிடையே நெடுங்காலமாக முன் விரோதம் இருந்தது. இச்சமயத்தில் மக்கத்துக் காஃபிர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை மீறி தங்களின் குழுவிலுள்ள பனூபக்ர் குலத்தாருக்கு, பனூ குஸாஆ குலத்தாருக்கு எதிராக ஆயுத உதவி செய்தனர். அதுமட்டுமின்றி அவர்களை தாக்கவும் செய்தனர். உடனடியாக பனூ குஸாஆ […]

20) முஃதா யுத்தம் ஹிஜிரி 8

நபி (ஸல்) அவர்களின் காவத்தில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப் பயங்கரமான போர் இதுவேயாகும். கிறிஸ்துவ நாடுகளையும் நகரங்களையும் முஸ்லிம்கள் வெற்றி கொள்ள இது ஒரு தொடக்கமாக அமைந்தது இப்போர் ஹிஜ்ரி ஜுமாதா அல்லா,கி.பி 12 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெற்றது. முஃதா என்பது ஷாம் நாட்டின் பல்கா மாநிலத்தின் கீழ் பகுதியிலுள்ள ஓர் ஊர் இங்கிருந்து பைத்துல் முகத்தஸ் இரண்டு நாட்கள் நடக்கும் தொலைதூரத்தில் உள்ளது. (ஃபத்ஹூல் பாரி) யுத்தத்திற்கான காரணம் நபி (ஸல்) அவர்கள் புஸ்ராவின் […]

19) தாதுர் ரிகா போர் (ஹிஜிரி 7)

நஜ்தின் கிராமப்புறங்களில் பரவியிருந்த நாடோடி வம்பர்களான அரபிகள் சந்தர்ப்பங்களையும் அவகாசங்களையும் எதிர்பார்த்திருந்து அவ்வப்போது மதீனாவின் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது. திருடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் பாலை வனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்து வந்த காரணத்தால் இவர்களை அடக்குவதோ, இவர்களின் அட்டூழியத்தை அணைப்பதோ சற்றுச் சிரமமாகவே இருந்தது எனவே அவர்கள் மீது போர்தொடுப்பதைத் தவிர வேறு நடவடிக்கை ஏதும் அவர்களுக்குப் பலனளிப்பதாக இல்லை. அதனால் முஸ்லிம்கள் அவர்கள் மீது பலமுறை திடீர் […]

18) கைபர் போர் ஹிஜ்ரி 7. முஹர்ரம்!

கைபர் என்ற ஊர் மதீனாவிலிருந்து வடக்கில் 30 மைல் தொலைவில் கோட்டைகளும் விவசாய நிலங்களும் அதிகம் உள்ள பெரும் நகரமாக முற்காலத்தில் விளங்கியது. ஆனால் இன்று அது ஒரு கிராமமாக உள்ளது. அங்குள்ள காற்றும் நீரும் உடல் நலத்திற்குச் சற்றும் ஒவ்வாததாக உள்ளது போருக்கான காரணம் மூன்று பெரிய எதிரிகளில் மிகப் பெரிய மற்றும் அதிகப் பலம் வாய்ந்த எதிரியான குறைஷிகள் விஷயத்தில் ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கைக்குப் பின் நபியவர்கள் நிம்மதி அடைந்து விட்டார்கள். எனவே மற்ற […]

17) ஹூதைபியா உடன் படிக்கை (ஹிஜிரி 6, துல்கஅதா)

இஸ்லாமிய வரலாற்றில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் சமாதான ஒப்பந்தம் தான் மக்கா வெற்றிக்கு வழிகோலியது பலர் இஸ்லாத்தைத் தழுவிடக் காரணமானது. இறை நிராகரிப்பாளர்கள் இறைவனுடைய மார்க்கத்தை அழித்தொழிக்க எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்களை நிறைவேற்றினாலும் இறைவன் தன்னுடைய சத்திய மார்க்கத்தை மேலோங்கச் செய்தே தீருவான் என்பதற்கு ‘ஹுதைபிய்யா என்ற இந்த இடத்தில் நடந்த நிகழ்ச்சி மிகப் பெரும் சான்றாக விளங்குகிறது. “ஹுதைபிய்யா என்பது ஒரு கிணற்றினுடைய பெயராகும். […]

16) அன்னை ஆயிஷாவின் மீது அவதூறு

பனூ முஸ்தலிக் யுத்தத்தில் இருந்து திரும்பும் வேளையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கழுத்து மாலை தொலைந்தது தொடர்பாகவும் அப்போதுதான் தயம்மும் தொடர்பான வசனங்கள் அருளப்பட்டன என்பது பற்றியும் நாம் முன்னர் குறிப்பிட்டோம் இந்தச் சம்பவத்தை மையமாக வைத்துதான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது நயவஞ்சகர்கள் அவதூறைப் பரப்பினார்கள். அது பற்றி விரிவான தகவல்களைக் காண்போம். அன்னை ஆயிஷாவின் அவதூறு பரப்புவதற்கு தலைமை வகித்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்ற நயவஞ்சகன்தான் இந்த […]

15) உஹது மற்றும் அஹ்சாப் யுத்தத்திற்கு மத்தியில் நடைபெற்ற நிகழ்வுகள்

பிஃரு மஊனா சம்பவம் மதீனாவில் வாழ்ந்த யூதர்கள் முஸ்லிம்களின் மீது எந்த அளவிற்கு பகைமையும் குரோதமும் கொண்டிருந்தார் என்பதற்கு பிஃரு மஊனா சம்பவம் ஒரு சான்றாகும். யூதர்கள் வஞ்சக வலை விரித்து முஸ்லிம்களில் 11 பேரை அநியாயமாக கொலை செய்தனர். நபியவர்கள் யூதர்களுடன் போர் தொடுப்பதற்கும் இது காரணமாக அமைந்தது. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்தகவான் உலப்பா பர் விஹ்யா ஆகிய குலத்தார் சிலர் வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு […]

02) நமது வாழ்வில் அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டும்

நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து நாம் பெறவேண்டிய முக்கியமான படிப்பினை அவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் எப்படிப்பட்ட துன்பமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதும் அல்லாஹ்விடம் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்: பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன்: 54:04)➚ அவனால் முடியாதது எதுவுமில்லை. எந்தத் தேவையானாலும் அவனிடம் கேட்கலாம். அவன் நிச்சயமாகத் தருவான் […]

04) ஓதிப் பார்க்கலாமா?

நோய் ஏற்படும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் நபி (ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்படும் போதல்லாம் அவர்கள் தமது உடலில் குல் என்றும் துவங்கும் அத்தியாயங்களை ஓதி ஊதி தமது கைகளால் தடவிக் கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு வயது முதிர்ந்து உடல் தளர்வு ஏற்பட்ட போது அவர்களின் மனைவி ஆயிஷா ரலி அவர்கள் ஓதி நபி (ஸல்) அவர்களின் கரத்தினால் உடல் முழுவதும் தடவி விடக் கூடியவர்களாக இருந்தார்கள். பாதுகாப்புக்கோரும் அத்தியாயங்களால் ஓதிப்பார்ப்பதும் ஓதி ஊதுவதும் […]

05) திருக்குர்ஆனை தாயத்தில் எழுதி தொங்கவிடலாமா?

அல்லாஹ்வின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் அந்த வார்த்தைக்கு நோயை நீக்கும் ஆற்றல் உள்ளது என்று நம்பினால் அது அல்லாஹ்வின் வார்த்தைக்குக் கொடுக்கும் முக்கியத்துவமாகும். அதற்கு மாற்றமாக இன்று மனிதர்கள் அல்லாஹ்வின் வார்த்தைக்கு கொடுக்கும் மதிப்பை மனிதனுக்குக் கொடுத்து அவர்களுக்கும் நோயை நீக்கும் தன்மை உள்ளதாக நினைக்கின்றோம். இன்னின்னாரிடத்தில் சென்று ஓதிப் பார்த்தால் நோய் நீங்கும் என்று நினைத்தால் இது புரோகிதம் ஆகும். இப்படி நினைக்கும் போது அல்லாஹ்வின் வசனங்களுக்கு சக்தி இருப்பதாகக் கருதாமல் அதை ஓதும் […]

01) அவனுக்கு முடியாதது ஏதுவும் இல்லை

முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் அல்லாஹ்வை நமது இறைவன் என்று நம்ப வேண்டும் என்பதை விளங்கி வைத்திருக்கிறோம், அவன் நம்மைப் படைத்தவன். உணவளிப்பவன் நன்மை தீமைகளைத் தீர்மானிப்பவன். இது போன்று மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட செயல்கள் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரன் அவன் தான் என்று நம்புகிறோம்.ஆனால் இந்த நம்பிக்கை உண்மையான நம்பிக்கையாக இருக்கறதா? என்று பார்த்தால் நாம் எந்த அளவு அல்லாஹ்வை நம்ப வேண்டுமோ அந்த அளவுக்கு யாரும் அவனை நம்புவதில்லை.அப்படியே நம்பினா லும் அந்த நம்பிக்கையில் […]

இரு பெருநாட்களில் முஸ்லிம்கள் ஏன் மது அருந்துவதில்லை?

“தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 17 காலை 10 மணி முதல் ஏப்ரல் 19 இரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்” இது பத்திரிக்கை செய்தி! சாதாரண காலங்களில் தண்ணீராகப் பாய்ந்தோடும் மதுவுக்குத் தேர்தல் காலத்தில் மட்டும் ஏனிந்த தடை? அரசு […]

நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா?

நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா? ஜஸாகல்லாஹ் என்று ஒருவர் நம்மிடம் கூறினால் அதற்கு என்ன மறுமொழி சொல்ல வேண்டும்? பாரகல்லாஹு லக என்று கூறுகிறார்களே இதுசரியா? முஹம்மத் தரோஜ் பதில்: ஒருவர் நமக்கு உதவி செய்தால் அதற்காக அவருக்கு நாம் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறலாம். இதற்கு நபிமொழியில் ஆதாரம் உள்ளது. ஆனால் இதன் பிறகு உதவி செய்தவர் பாரகல்லாஹு கூற வேண்டும் என்ற கருத்து தவறானது. […]

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே?

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே? இறைவா உனது நபியின் பொருட்டாலும், எனக்கு முன் சென்று விட்ட நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் ஃபாத்திமா பின்த் அவர்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்குவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்த ஹதீஸ் தப்ரானியில் உள்ளதாகவும், பெரியார்களின் பொருட்டால் வசீலா தேடலாம் என்ப்தற்கு இது ஆதாரம் என்று சொகிறார்களே அது உண்மையா? முஹம்மத் இஹ்ஸாஸ், இலங்கை பதில் நீங்கள் சுட்டிக் காட்டும் ஹதீஸ் இது தான் […]

Next Page » « Previous Page