குளிர்காலத்தில் நிறம் மாறும் விலங்குகள் எவை?
சில விலங்குகள் குளிர்காலத்தில் தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவை.
ஆர்க்டிக் நரிகள் பொதுவாக பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆனால் பனிக்காலத்தில் அவை வெள்ளை நிறமாக மாறும்.
வட அமெரிக்காவில் காணப்படும் குழிமுயல்கள், பனிக்காலத்தின் போது வெள்ளை நிறமாக மாறும்.
டார்மிகன் பறவைகள் அண்டார்டிகா கண்டத்தில் அதிகம் காணப்படும். இவை பொதுவாக பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் பனிக்காலத்தில் தங்கள் இறக்கைகளை வெள்ளை நிறமாக மாற்றிக்கொள்ளும்.
குறுவால் மரநாய்கள் வட அமெரிக்காவில் அதிகம் காணப்படும். இவை பனிக்காலத்தில் வெள்ளை நிறமாக மாறும்.
சைபீரியன் வெள்ளை எலிகள் பொதுவாக பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் பனிக்காலத்தில் அதன் நிறத்தை வெள்ளை நிறமாக மாற்றிக்கொள்ளும்.
இறைவன் தனது படைப்பில் பல ஆச்சரியமான மாற்றங்களை வைத்துள்ளார். இந்த விலங்குகளின் நிற மாற்றம், அவை வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் ஞானத்தை காட்டுகிறது.
ஆதாரம்: விகடன்