நம் பற்கள் தேயுமா?

அறிவியல் உண்மைகள்

வண்டிகளின் டயர்கள், இரும்பாலான சங்கிலிகள் தேய்வதுபோல, நம் பற்களும் தேய்கின்றன.

பற்களை மூடியிருக்கும் எனாமல் என்ற மேல் அடுக்கு, பற்கள் விரைவில் தேய்மானம் அடையாமல் பாதுகாக்கிறது. வாயில் உருவாகும் அமிலங்களில் இருந்து உமிழ்நீர் பற்களைக் காப்பாற்றுகிறது.

இன்று பற்பசை கொண்டு பல் துலக்குவதால் பற்கள் அதிகமாகத் தேய்வதில்லை. ஆனால், முன்பு சாம்பல் அல்லது பற்பொடி கொண்டு பல் துலக்கியவர்கள், கடினமான உணவுகளை மென்று உண்டவர்கள் ஆகியோரின் பற்கள் தேய்ந்திருப்பதைப் பார்க்க முடியும்.

நம் பற்கள் மெதுவாகவே தேய்கின்றன.

ஆதாரம்: இந்து தமிழ் திசை