பேருந்தில் தூங்கும்போது தலை ஏன் ஆடுகிறது?

அறிவியல் உண்மைகள்

நாம் தூங்கும்போது உடலில் உள்ள பல தசைகளின் செயல்பாடு குறைகிறது. குறிப்பாக, கழுத்தைத் தாங்கிப் பிடிக்கும் தசைகளின் செயல்பாடும் குறைகிறது.

படுக்கையில் தூங்கும்போது தலை, கழுத்து, உடலுக்குப் படுக்கையும் தலையணையும் ஆதரவாக இருப்பதால் தலை நிலையாக இருக்கிறது.

ஆனால், பேருந்தில் செல்லும்போது பேருந்தின் இயக்கம், வேகம், திருப்பம் காரணமாகத் தலை அசைகிறது.

பேருந்தில் தூங்கும்போது கழுத்துத் தசைகளின் செயல்பாடு குறைவதால், இந்த அசைவுகளை எதிர்த்துத் தலையை நேராக வைத்திருக்கும் திறனும் குறைகிறது.

மேலும், ஈர்ப்பு விசையும் தலையைக் கீழ்நோக்கி இழுக்கிறது. எனவே, பேருந்தின் இயக்கம், கழுத்துத் தசைகளின் குறைந்த செயல்பாடு, ஈர்ப்பு விசை போன்ற காரணங்களால் தூங்கும்போது தலை முன்னோக்கி அல்லது பக்கவாட்டில் சாயத் தொடங்குகிறது.

இறைவன் மனித உடலை எவ்வளவு நுட்பமாகப் படைத்து, ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு காரணத்தை அமைத்துள்ளான் என்பதை இது காட்டுகிறது. அவனது படைப்பின் ஒழுங்கையும் ஞானத்தையும் நாம் வியந்து போற்றுகிறோம்.

ஆதாரம்: இந்து தமிழ் திசை