14) பொறுமையே வேண்டி
ரப்பனாa அFப்ரிghக் oஅலைனா sஸப்ரவ் வதவFப்Fபனா முஸ்லிமீன்.
பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!” (அல்குர்ஆன்: 7:126)➚
(நபி மூஸா (அலை) அவர்கள் காலத்தில் ஃபிர்அவ்னின் ஏற்பாட்டில் வந்த சூனியக்காரர்கள், நபி மூஸா (அலை) அவர்கள் காட்டியது உண்மையில் அற்புதமே, இதை சூனியக்காரர்களால் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, மூஸாவை நபியாக ஏற்ற போது ஃபிர்அவ்ன் மாறுகால் மாறுகை வெட்டுவேன் என்று கூறிய போது அந்த சூனியக்காரர்கள் கேட்ட பிரார்த்தனை.)
ரப்பனாa அFப்ரிghக் oஅலைனா sஸப்ரவ் வthஸப்பித் அqக்dதாமனா வன்sஸுர்னா oஅலல் qகவ்மில் காFபிரீன்.
பொருள்:”எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!” (அல்குர்ஆன்: 2:250)➚
(நபி மூஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் பனூ இஸ்ராயில்களில் உள்ள ஒரு கூட்டத்தினரில் இருந்த நல்லவர்கள் தாலூத் அவர்கள் தலைமையில் ஜாலூத் படையினரை போர்க்களத்தில் சந்தித்த போது கேட்ட பிரார்த்தனை)