30) நபிகள் நாயகம் அவர்களின் கடைசி வார்த்தை

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

நபி (ஸல்) அவர்களின் பார்வை (அவர்களுடைய மரண வேளையில்) நிலை குத்தி நின்றது. பிறகு அவர்கள் “மிக உயர்ந்த நண்பர்களிடம் (செல்கிறேன்)” என்று (மூன்று முறை சொன்னார்கள். (புகாரி: 3669)

இது தான் நபியவர்கள் பேசிய கடைசி வார்த்தையாக அமைந்தது.

கலிமா சொன்ன நிலையில் மரணம்

இறுதியில் ஏகத்துவ கலிமாவை முன்மொழிந்தவராக அண்ணலார் மரணம் அடைந்தார்கள்.நபி (ஸல்) அவர்கள், தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக்கொண்டு, வணக்கத் திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு என்று கூறலானார்கள். பிறகு தமது கரத்தைத் தூக்கி. “(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட அவர்களின் கரம் சரிந்தது. (புகாரி: 4449)
தம் 63ம் வயதில் திங்கள் கிழமையன்று அண்ணல் நபியவர்களின் உயிர் பிரிந்து மரணத்தை தழுவினார்கள். இவ்வுலகை விட்டும் பிரிந்தார்கள். (புகாரி: 3536, 680)

முஸ்லிம்கள் கவலை

அன்னாரது பிரிவை தாங்க இயலாமல் குடும்பத்தார்களும் முஸ்லிம்களும் அழுதனர். (புகாரி: 1232)

அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு மரண செய்தி அறிவிக்கப்படுதல்

நபிகள் நாயம் மரணித்த வேளையில் அபூபக்கர் (ரலி) அவர்கள் வெளிப்பகுதியில் இருந்தார்கள். அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவும் கவலையோடு நபிகள் நாயகத்தை சந்திக்க வந்தார்கள். (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) ஸுன்ஹ் என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள்.

உமர் (ரலி) அவர்களின் மறுத்தலும் அபூபக்கர் (ரலி) விளக்கமும்

நபிகள் நாயகத்தின் மீது அளவு கடந்த பாசம் இருந்ததால் நபிகளாரின் மரணத்தை அவ்வளவு எளிதில் நபித்தோழர்களால் ஏற்க முடியவில்லை. நபியவர்களின் மரணம் ஆழ்ந்த துயரத்தையும் பெரும் அதிர்ச்சியையும் நபித்தோழர்களுக்கு அளித்தது.

உச்சகட்டமாக உமர் (ரலி) அவர்கள் நிதானமிழந்து நபிகள் நாயகம் இறந்து விட்டார்கள் என்பதைக் கூட ஏற்காதவர்களாக இருந்தார்கள். அந்நேரத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களே தெளிவாக புரியும் படி நபியவர்களின் இறப்பை எடுத்துரைத்தார்கள்.

அந்த நிகழ்வை பின்வரும் செய்தியில் அறியலாம்
அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான். நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான். தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் நபி-ஸல்- அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப் பார்கள்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டான்” என்று சொல்-விட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி) “(நபி ஸல் அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட் டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும் அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந் தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயி ருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்” என்று சொன் னார்கள் மேலும், ‘நபியே! நீங்களும் இறக்க விருப்பவர் தாம்; அவர்களும் இறக்க விருப்பவர்களே என்னும் (39:30) இறை வசனத்தையும், ‘முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை அவருக்கு முன் னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப் பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக் கட்டும்) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின் றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்’ என்னும் (3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள். (புகாரி: 3667, 3668)

நபிகள் நாயகம் கஃபனிடப்படுதல்

நபி (ஸல்) அவர்கள் யமன் தேசத்தின் பருத்தியினாலான வெண்ணிறமுள்ள மூன்று துணிகளால் கஃபன் செய்யமாட்டார்கள். அம்மூன்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை. (புகாரி: 1264)

குளிப்பாட்டப்படுதல்

மற்றவர்களை போன்று ஆடைகள் களையப்படாமல் ஆடைகளுடனே நபிகள் நாயகம் குளிப்பாட்டப்பட்டார்கள் (அபூதாவூத்: 2733)

ஜனாஸா தொழுகை

நபிகள் நாயகத்திற்கு யாரும் இமாமாக நின்று ஜனாஸா தொழுவிக்கவில்லை. மாறாக கூட்டம் கூட்டமாக நபித்தோழர்கள் வந்து ஜனாஸா தொழுகையை தொழுது விட்டு சென்றார்கள் (இப்னுமாஜா 1617)

ஆயிஷா ரலி வீட்டில் அடக்கம்

தம் துணைவியார் ஆயிஷா ரலி வீட்டிலேயே நபிகள் நாயகம் அடக்கம் செய்யப்பட்டார்கள். (புகாரி)

நபிகள் நாயகம் விட்டு சென்ற சொத்து

பெரிதாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எதையும் விட்டு செல்லவில்லை. கோவேறுக் கழுதை, சில ஆயுதங்கள், ஒரு நிலம் ஆகியவையே நபிகளார் விட்டு சென்ற சொத்தாகும். அதையும் ஏழைகளுக்கு தர்மமாக வழங்கி விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மரணத்தின் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ). அடிமையையோ, அடிமைப் பெண் ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர (புகாரி: 2739)