06) நபித்துவத்தின் துவக்கம்

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

நபி(ஸல்) அவர்கள் இறைச்செய்தி வருவதற்கு முன்பே ஏகத்துவ அடிப்படையிலேயே தம் வாழ்வை அமைத்திருந்தார்கள். சிலை வணக்கம் செய்பவர்களாக இருந்ததில்லை. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத பிராணிகளை சாப்பிடமாட்டாட்டார்கள் (புகாரி: 3826)

நபி (ஸல்) அவர்கள் நாற்பது வயதை அடைந்த போது இறைவனின் புறத்திலிருந்து செய்திகள் வருவதற்குரிய அறிகுறிகள் தென்பட்டன. சில அற்புத நிகழ்ச்சிகளும் வெளிப்பட்டது.

ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அறிவிக்கிறார்கள் : நான் மக்காவில் ஓரு கல்லை பார்க்கிறேன். அது என் மீது ஸலாம் சொல்கிறது (முஸ்லிம்: 4222)

வஹி வருவதற்கு நெருக்கமான காலத்தில் தெளிவான கனவுகள் கண்டார்கள். பிறகு தனிமையில் இருந்து வணக்கங்கள் புரிய வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் அடிப்படையிலேயே ஹிரா குகையில் தங்கி வணக்கம் புரிந்து வந்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாட்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாட்களுக்கான உணைவத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள்.

அதைப் போன்றே பல நாட்களுக்கு தேவையான உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய (வேத)ம் திடிரென்று (ஒருநாள்) வரும் வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம், “ஓதுவராக’ என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நான் ஓதத் தெரிந்தவனில்லையே” என்று அவருக்கு பதிலளித்தார்கள். (புகாரி: 6982)

ஜிப்ரீல் (அலை) அவர்களின் வருகையும் நபிகள் நாயகத்தின் அச்சமும்

இவ்வாறு முதல் முறையாக ஜிப்ரீல் எனும் வானவர் நபிகள் நாயகத்திடம் வந்ததை அடுத்து நபியவர்கள் ஒரு வித அச்சத்திற்கு உள்ளானார்கள். நடந்ததை தம் மனைவி கதீஜா அவர்களிடம்
தெரிவித்தார்கள். அப்போது அன்னை கதீஜா அவர்கள் தான் நபிகள் நாயகம் அவர்களின் அச்சத்தை
போக்கி ஆதரவு அளித்து ஆறுதல் கூறினார்கள்.

அப்போது நடந்த சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்.
அவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியைணத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு “ஓதுவராக” என்று சொன்னார். அப்போதும் “நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே’ என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னை விட்டுவிட்டு, “ஓதுவராக” என்றார். அப்போதும், “நான் ஓதத் தெரிந்தவனில்லையே” என்றேன்.

அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னை விட்டுவிட்டு “படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவராக…” என்று தொடங்கும் (96ஆவது அத்தியாயத்தின்) வசனங்களை “மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” என்பது வரை (அல்குர்ஆன்: 96:1-5) ஓதினார்.

தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

பிறகு கழுத்தின் தசைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, “எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களை விட்டு அகன்றது. அப்போது, “கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா (ரலி) அவர்கள், “அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவு படுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளை பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில்  (ஆட்பட்டோருக்கு) உதவி செய்கிறீர்கள்” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவரின்  புதல்வர் “வரக்கா’விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.

“வரக்கா’ அறியாமைக் காலத்திலேய கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியி-ருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா அவர்கள், “என் தந்தையின் சகோதர புதல்வரே! உங்களுடைய சகோதரர்ரின்  புதல்வர் (முஹம்மத்) கூறுவதை கேளுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம் “என் சகோதர புதல்வரே! நீர் என்ன கண்டீர்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம்  தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி (ஸல்) அவர்களிடம்  “(நீர் கண்ட) இவர்தாம் (இறைத் தூதர்) மூசாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்” என்று கூறிவிட்டு “உம்முடைய சமூகத்தார் உம்மை உமது நாட்டி-ருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!” என்று கூறினார்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கள் என்னை வெளியேற்றவா
செய்வார்கள்?” என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் “ஆம். நீங்கள்
பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக்கொள்ளப் படாமல் இருந்ததில்லை. உமது (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்” என்று பதிலளித்தார்.அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார்.

(இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது.அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள்.

(புகாரி: 6982)

இறைச்செய்தி தடைப்படுத்தல்

பிறகு சிறிது காலத்திற்கு இறைவனின் புறத்திலிருந்து வானவர் மூலம் எந்த செய்தியும் வராமலிருந்தது. அதன் பிறகு செய்தி வரத்தொடங்கியது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறகு (சுமார் மூன்று வருடம்) எனக்கு வேதஅறிவிப்பு வருவது நின்றுபோய்விட்டது. இதற்கிடையில் (ஒரு நாள்) நான் நடந்து போய்க்கொண்டிருந்தேன். அப்போது வானிலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். உடேன வானத்தை அண்ணாந்து பார்த்தேன். அங்கு ஹிரா (குகையில்) என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானத்துக்கும் பூமிக்குமிடையே ஒரு ஆசனத்தில் அமர்ந்துகொண்டிருந்தார்.

“போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவைனப்
பெருமைப்படுத்துவீராக! உம்முடைய ஆடைகைளத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக” எனும் (அல்குர்ஆன்: 1:5)  வசனங்கள் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் வேதஅறிவிப்பு (வஹீ) தொடர்ந்து வர ஆரம்பித்தது.
(புகாரி: 6214), (முஸ்லிம்: 255)

பிரச்சாரம் ஆரம்பம்

இறைவனின் புறத்திலிருந்து தொடர்ந்து செய்திகள் பெறத்துவங்கியதும் தாம் இறைத்தூதர் என்பதை முழுமையாக உணர்ந்தார்கள். தம் அச்சத்தை உதறித்தள்ளினார்கள். தனக்கு
சொல்லப்படும் செய்திகைள மக்களுக்கு எத்திவைக்கும் படி இறைவனால் உத்தரவிடப்பட்டதன் அடிப்பைடயில் நபிகள் நாயகம் தாம் பெற்ற இறைச்செய்திகளை, மக்களிைடேயே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.

முதலில் இரகசியமாகேவ பிரச்சாரம் செய்தார்கள். இந்த பிரச்சாரத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினேரே.அவர்களில் அபூபக்கர், கதீஜா, பிலால், அலி ஆகியோர் குறிப்பிடத்தக்கோர் ஆவார்கள். (அஹ்மத்: 18617)