யார் இந்த நபித்தோழர்-2

யார் இந்த நபித்தோழர்

1 சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர், (திர்மிதி: 3748)

2 இந்த நபித்தோழர் முஹாஜிர்களைச் சேர்ந்தவராவார் (புகாரி: 4061)

3 உஹுதுப்போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்த முஹாஜிர்களில் இவரும் ஒருவர்

(புகாரி: 4061)

4 உஹுதுப்போரில் இவருடைய கை துண்டிக்கப்பட்டது. (புகாரி: 4063)

5 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டபோது அவர் நபிகளாரிடம் வந்தபோது எழுந்து சென்று கைகொடுத்து வாழ்த்துத் சொன்னவர்களில் இவரும் ஒருவர் (புகாரி: 4418)

6 இந்த நபித்தோழர் நாணயமாற்று வியாபாரத்தில் ஈடுபட்டவராவார் (முஸ்லிம்: 3231)

7 இஹ்ராமின்போது வேட்டையாடப்பட்ட பிராணியை உண்பது பற்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்த நபித்தோழர் (முஸ்லிம்: 2252)

8 சலமா பின் அல் அக்வஉ (ரலி) அவர்கள் இந்த நபித்தோழரின் உதவியாளராக இருந்துள்ளார்கள் (முஸ்லிம்: 3695)

9 பேரீத்தமரங்களுக்கு மகரந்த சேர்க்கை செய்வது பற்றிய செய்தியை அறிவித்த நபித்தோழர் (முஸ்லிம்: 4711)

10 இந்த நபித்தோழர் இடத்தில் ஒரு மனிதர் வந்து அபூஹரைரா (ரலி) அவர்கள் அதிகமான செய்திகளை அறிவிக்கிறார் என்று முறையிட்டார் (திர்மிதி: 3837)

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)