Tamil Bayan Points

வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவர்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on July 11, 2022 by Trichy Farook

வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவர்

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، قَالَ : حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا

 

யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம் என்று நமது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: இப்னு மாஜா-3123 , அஹ்மத்: 8273

இந்த ஹதீஸில் இடம்பெரும் அப்துல்லாஹ் பின் அய்யாஷ் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ, அபுதாவூத் கூறுகிறார்கள். ஆகவே இச்செய்தி ஏற்கத் தகுந்ததல்ல..

தஹ்தீபுல் கமால்: 15/410
தாரிகுல் இஸ்லாம் தஹபி: 4/425