Tamil Bayan Points

நான் காதலிக்கும் பெண்ணை, பெற்றோர் மறுக்கின்றனர்

முக்கிய குறிப்புகள்: குடும்ப வழக்குகள்

Last Updated on September 28, 2021 by

மகனின் புகார்

நான் காதலிக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணை, எனக்கு திருமணம் செய்து வைக்க, எனது பெற்றோர் மறுக்கின்றனர். நான் என்ன செய்வது?

 

தீர்வு

உங்களது விருப்பத்தை பெற்றோர்களுக்கு முடிந்த வரை புரிய வையுங்கள். அதைத் தாண்டி,

  • நீங்கள் விரும்பக் கூடியவர் மார்க்க அடிப்படையில் தகுதி இல்லாதவர் என்று அவர்கள் மறுத்தால் அதை மீறுவது, உங்கள் மீது குற்றமாகி விடும்.
  • அவ்வாறு இல்லாமல் இன வெறி, குல வெறி  போன்ற காரணத்துக்காகவோ,
  • பெண்வீட்டார் பொருளாதாரத்தில் ஏழை என்பதற்காகவே,
  • பெண்வீட்டார் சமுதாயத்தில் மதிப்பு குறைந்தவர் என்பதற்காகவே  தகுதியுள்ள துணையை அவர்கள் மறுத்தால் அவர்களை மீறுவது உங்கள் மீது குற்றமாகாது. 

இறைவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் மனிதனுக்கு கட்டுப்படுதல் இல்லை என்பது நபி மொழி. (புகாரி 7144)

எனவே, நியாமில்லாத காரணத்திற்காக அவர்கள் மறுத்தால், பெற்றோர்களை மீறுவது உங்கள் மீது குற்றமாகாது.