Tamil Bayan Points

086. இமாம் எப்போது குத்பா நிகழ்த்தவேண்டும்?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

Last Updated on July 7, 2017 by Trichy Farook

பிறை 7ல் லுஹருக்குப் பின் இமாம் குத்பா நிகழ்த்தவேண்டுமா? ஏற்கனவே சென்று வந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்ததில் அங்கு அவ்வாறு நடத்தப்படுவதில்லை என்று சொல்கிறார்கள்.

பதில்

பிறை 7ல் இமாம் உரை நிகழ்த்த வேண்டும் என்று இல்லை. பிறை 9ல் அரஃபாவில் இமாம் உரை நிகழ்த்த வேண்டும்.

சூரியன் உச்சி சாய்ந்ததும் “கஸ்வா’ எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் (“உரனா’) பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (நூல்: முஸ்லிம் 2137)