Tamil Bayan Points

அர்ஷ் குலுங்கியது

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on July 31, 2022 by Trichy Farook

அர்ஷ் குலுங்கியது

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا فَضْلُ بْنُ مُسَاوِرٍ، خَتَنُ أَبِي عَوَانَةَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ
«اهْتَزَّ العَرْشُ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ»، وَعَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ، فَقَالَ رَجُلٌ: لِجَابِرٍ، فَإِنَّ البَرَاءَ يَقُولُ: اهْتَزَّ السَّرِيرُ، فَقَالَ: إِنَّهُ كَانَ بَيْنَ هَذَيْنِ الحَيَّيْنِ ضَغَائِنُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اهْتَزَّ عَرْشُ الرَّحْمَنِ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ»

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது. என ஜாபிர்(ரலி) அறிவித்தார். ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது…

ஒருவர் ஜாபிர்(ரலி) அவர்களிடம், ‘பராஉ(ரலி), ‘ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸாப்) பெட்டி தான் அசைந்தது’ என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்’ என்று சொன்னதற்கு ஜாபிர்(ரலி), ‘இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரண்டு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி(ஸல்) அவர்கள், ‘ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காகக் கருணையாள(னான இறைவ)னின் சிம்மாசனம் அசைந்தது’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன்’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி-3803

எதிர்கேள்வி: ஸஅத் பின் முஆதை விட சிறந்த எத்தனையோ நல்லடியார்கள் இறந்த போது அசையாத அர்ஷ் எப்படி ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களுக்கு மட்டும் அசைந்தது?